Thursday, May 3, 2012

மூன்றாம் பால்




சின சொல் 
வெட்கையில் வாடியது 
மலர்முகம் 

தாழ்ந்த கருவிழி 
உலர் கனியிதழில் மௌன 
மொழி 

பகல் 
நாழிகைகளில் நோயுற்று இழையும் 
நித்த கடமைகள் 

பசி 
பரிமறபட்டும் உண்ணப்படாமல்
பொங்கிய சோறு 

நித்திரை 
மஞ்சத்தின் இடைவெளியில் தஞ்சத்தில் 
தலையணை 

முகம் 
சுவர்பார்க்க பின்முதுகுகாட்டிய 
கள்ள உறக்கம் 

மௌன யாசிப்பில் 
இனங்கலும் ஐவிரு  விரல்களின் 
சேட்டைகளும் 

பிணக்கம் 
ஓட இணக்கம் பின்துரத்தும் 
ஊடல் விளையாட்டு 

சிணுங்கல்
அலுத்து களைப்பார உணரும் 
கள்ளப் பார்வை 

அவளின் 
திரும்பல் இவனின் கள்ளக் 
குழையல்

 மறுபடியும் 
சில நொடிகள்  நீண்டது 
தொடக்கம் 

ம்ம்ம் ......(:

 இரவு
குளிரில் துடிதுடித்து இறந்தது 
பகல் வெட்கை


9 comments:

  1. இணைதலும் இணைதல் நிமித்தமும்..
    இணையும் நிமித்தத்தை
    சிலநொடிகள் கடத்திப்போகும்
    உள்ள உணர்வுகளும்...
    அடேயப்பா..
    வார்த்தை ஜாலங்கள் நண்பரே...

    ReplyDelete
  2. அவளின்
    திரும்பல் இவனின் கள்ளக்
    குழையல்//
    மிகவும் அருமையான வரிகள் அழகு .

    ReplyDelete
  3. மௌன யாசிப்பில்.

    ”ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்”

    எல்லாம் கலந்தது தான் இல்லறச்சுகம்.

    ReplyDelete
  4. மூன்றாம் பால் நுணுக்கம் அறிந்தேன் கவிதையில்

    ReplyDelete
  5. ஓஓஓ.... இது தான் மூன்றாம் பாலின் முணங்கள்களா...?

    ReplyDelete
  6. பால்களுக்கு இடைப்பட்ட ஊடல்
    பார்வைகளுக்குள்ளன உணர்வை
    பகுத்தும் தொகுத்தும் கூறும்-உங்கள்
    பார்வை கவிக்கு தனி அழகு....

    ReplyDelete
  7. வாழ்வை இனிமையாக்கும் அழகாக்கும் பகுதி கவிதையாக !

    ReplyDelete
  8. ஊடல் நீக்கும் மாமருந்து உம் கவிக்குள்ளேயே பின்னிக்கிடக்கிறதே. பாராட்டுகள் செய்தாலி.

    ReplyDelete
  9. @மகேந்திரன்

    உங்கள் பாராட்டிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே

    @சசிகலா

    மிக்க நன்றி சகோ

    @சத்ரியன்
    ம் (: கண்டிப்பாக மிக்க நன்றி நண்பா

    @மனசாட்சி™

    ம்ம்ம்.... நம்பிட்டோம்
    மிக்க நன்றி நண்பா

    @AROUNA SELVAME

    ம் (: மிக்க நன்றி

    @சிவரதி

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    @ஹேமா

    ம் (: மிக்க நன்றி தோழி

    @கீதமஞ்சரி

    ம் (: மிக்க நன்றி தோழி

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...