Monday, May 7, 2012

அந்த வெட்கை





 மரங்கள் 
 கொலையுண்ட வீதியில் 
தணலின்றி வெட்கையில் துவளும் 
உயிர்கள் 

 அன்பு 
அறுந்த மனதில் வெட்கை 
தணலற்று வாழ்கையில் ரணப்படும்  
உறவுகள் 

நீரில் 
மிதக்கும் நிலம் 
வெட்கை  சாபம் கானலாய் 
ஈரம் 

நீருடல் 
மனித நெஞ்சு 
சுயநல வெட்கை உலர்ந்த 
ஈரப்பதம்

பகலவனை 
சுற்றும்  பூமா பெண் 
கால வரமாய்... (சாபமாய்)... 
வெட்கை 

ஜனனமரண 
சக்கரத்தில் ஓடும் மனிதன் 
வாழ்க்கை வரமாய்... சாபமாய்...  
வெட்கை 

வெட்கை
உடலில்  உள்ளத்தில் 
பலவந்தமாய் உதிர்க்கிறது 
...ண்ணீர்

மரத்தை வெட்டி 
நிழலுக்காக ஓடுபவர்களை போல் 
உறவுகளில் அன்பை அறுத்து ஓடுகிறார்கள் 
....தேடி 

இயற்கையின் 
வெட்கை இறை  (வரம்) 
மனிதனின் செயற்கை வெட்கை 
சாபம்.

10 comments:

  1. வெட்கை எத்துனை விதம் அத்துனையும் சொன்ன விதம் பிடிச்சிருக்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உணர முயலாமல் அலையும் உலகம் இது நண்பா.

    ReplyDelete
  3. இன்றைய எல்லா சீரழிவிக்கும் காரணம் மனிதனே இந்த மனிதநேதான் கடுமையான வெப்பத்தை தனித்துக் கொள்ள வழிதேடி விழி பிதுங்கி நிற்க்கிறான் இதற்க்கு காரணமானவன் மனிதனே என்பதை எப்போது உணரப்போகிறான் ?

    ReplyDelete
  4. மரத்தை வெட்டி
    நிழலுக்காக ஓடுபவர்களை போல்
    உறவுகளில் அன்பை அறுத்து ஓடுகிறார்கள்
    ....தேடி//

    கவிதையின் வேராகி நிற்கின்ற வரிகள் இவை. பாராட்டுகள்

    ReplyDelete
  5. சுப்பரா இருக்கு அண்ணா ....


    அண்ணா நடுவில் சில இடங்களில் சொற்கள் சொல்லாமல் புள்ளி வைத்து இருகீன்கள் ..அதுக்கு என்ன அர்த்தம்

    ReplyDelete
  6. இன்றைய வாழ்வின் சூழலில் வெட்டுதலும் தறித்தலும் விலகுதலும் தனித்தலும் சுலபமாகிறது !

    ReplyDelete
  7. நீருடல்
    மனித நெஞ்சு
    சுயநல வெட்கை உலர்ந்த
    ஈரப்பதம்//

    நான் மிகவும் ரசித்த வரிகள் ..
    அழகிய படைப்பு வீரியமிக்க வரிகள் .. என் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  8. மரங்கள்
    கொலையுண்ட வீதியில்
    தணலின்றி வெட்கையில் துவளும்
    உயிர்கள்

    நல்ல சிந்தனை! பாராட்டு!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. இயற்கையின்
    வெட்கை இறை (வரம்)
    மனிதனின் செயற்கை வெட்கை
    சாபம்.//ரசித்தேன் அன்பரே உங்கள் சொல்லாடலை ..

    ReplyDelete
  10. @மனசாட்சி™

    மிக்க நன்றி நண்பா


    @சத்ரியன்

    மிக்க நன்றி நண்பா

    @போளூர் தயாநிதி

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

    @சி.கருணாகரசு

    மிக்க நன்றிகள் தோழரே

    @கலை

    மிக்க நன்றி கலை
    அது இரண்டு பொருள் சொல்லும் உள்ளர்த்தங்கள் கலை

    @ஹேமா

    உண்மை
    மிக்க நன்றி தோழி

    @அரசன் சே

    மிக்க நன்றி நண்பா

    @புலவர் சா இராமாநுசம்

    மிக்க நன்றி ஐயா


    @PREM.S

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...