Tuesday, May 8, 2012

கசையடிச் சத்தம்



ஆள்கூடும் 
முச்சந்தி வீதிகளில் காணப்படலாம் 
அவனும் அவன் கூட்டத்தார்களையும் 

வீதி 
மனிதர்களின் கவனத்தை சிதறடித்தது 
அவன் கால் சலங்கையின்
 துள்ளல் சத்தம் 

முறுக்கேறிய 
சாட்டையால் வெற்றுடலில் 
அடித்துக் கொள்கிறான் தன்னை தானே 
அவன் 

சலங்கை ஒலி
சாட்டை அடிச் சத்தமும் 
கீறல்களும் அதில் ஒழுகும் பச்சைக் 
குருதியும் 

வீதியின் நடுகே 
கிடத்தப்படும் சிறுகுழந்தையும்
இரும்பு வளையத்தால் கீறலிட்டு 
பலவந்தமாய் ஒழுக்கும் குருதித் 
துளிகளும் 

கூடிநின்று 
வேடிக்கை பார்க்கும் மனிதர்களும் 
அவர்களிடையே பிச்சை  பாத்திரமேந்தி 
இவனும் 

தன்னை அடித்து 
சுய அடிமைத்தனத்தை ஊருக்கு வெளிச்ச்மிட்டும் 
உடல் வலுவிருந்தும் பிச்சையேந்தும் 
குல பாரம்பரிய அடிமை 

ஓடும் காலத்தில் 
 பாழ் குல சம்ராதய பாரம்பரியங்களிலிருந்து 
வெளியே வந்து வாழ்கிறார்கள் எத்தனையோ 
மனிதர்கள் 

நவ உலகில் 
குலப் பாரம்பரிய அடிமையால் 
 இன்றும்  எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிறது 
கசையடிச் சத்தம் 


9 comments:

  1. அன்பரே!
    நானும் கண்டிருக்கிறேன் அந்த கொடுமையான கோரக் காட்சிகளை அது, இன்னுமா நடக்கிறது
    அப்படியே நிகழ்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது தங்கள் கவிதை
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. நம்ப முடியலை ..இன்னுமா அடிமை கள் இருக்காங்க

    ReplyDelete
  3. “தன்னை அடித்து
    சுய அடிமைத்தனத்தை ஊருக்கு வெளிச்ச்மிட்டும்
    உடல் வலுவிருந்தும் பிச்சையேந்தும்
    குல பாரம்பரிய அடிமை ²

    தோழரே... நானும் இந்தக் கழைக்கூத்தாடிகளின் செயலைப் பார்த்திருக்கிறேன். மனம் வலிக்கும்!!
    ஆனால் அதை நீங்கள் சுய அடிமைத்தனம் என்று சுட்டிக்காட்டியிருப்பது மிகப் பொருத்தம்ங்க செய்தாலி.

    நல்ல ஒரு வலுவான வார்த்தை!!

    ReplyDelete
  4. இந்த வரிகளை படிக்கும் பொது அந்த காட்சிகள் எல்லாம் கண்ணுக்குள் விரிகின்றன ...
    நல்ல படைப்பு நண்பரே ...
    கொடுமையான விடயம் .. என்று அந்த மக்களும் மனம் மாறுவார்கள் ..?

    ReplyDelete
  5. நவ உலகில்
    குலப் பாரம்பரிய அடிமையால்
    இன்றும் எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிறது
    கசையடிச் சத்தம்

    தங்கள் படைப்பைப் படிக்கப் படிக்க
    அவனுடைய காலடி அடவுகளும் கொட்டுச் சத்தமும்
    என்னுள் ப்டமாய் விரிந்தது
    விவரித்த விதமும் அதன் மூலம் சொன்ன கருத்தும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தங்களின் வரிகள் அந்தக் காட்சியை கண்முன் நிறுத்துகின்றன . இன்னும்மா இப்படி ...

    ReplyDelete
  7. ஒரு காட்சி கவிதையாய் இரத்தம் வடிக்கிறது.இன்றும் சத்தமில்லா அடிமைகளும் கசையடிகளும் இருக்கத்தான் செய்கின்றன.தெரிந்தும் வாய்மூடி மௌனிக்கும் உலகு !

    ReplyDelete
  8. @புலவர் சா இராமாநுசம்

    இன்னும் அவங்க இருக்கிறார்கள்
    காலம் மாறியும் அவர்கள் இன்னும் மாறாமல் இருக்காங்க

    மிக்க நன்றி அய்யா


    @கலை

    அவங்க அடிமை இல்லை
    அது ஒரு குலக் கூட்டம்
    அவங்க இன்னும் அப்படியே இருக்கிறாங்க

    மிக்க நன்றி கலை

    @AROUNA SELVAME

    காலத்திற்கேற்ப எல்ல்லாரும் வாழ பழகிவிட்டார்கள்
    இவர்கள் இன்னும் தன்னைத்தானே அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்
    அதனால்தான் சுய அடிமை என்றேன்

    மிக்க நன்றி

    @அரசன் சே
    நம் நாட்டில் உள்ள மனித உரிமை சங்கங்கள்
    எதை எல்லாமோ பார்க்கிறார்கள் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்
    அவர்களுக்கு இது தபு என்று போதிக்கவேண்டும்
    சாதாரண மனிதர்கள்போல் வாழ் சொல்லவேண்டும்

    அப்போது இது சரியாகும் நண்பா


    @Ramani

    என் சிறுவயசில் பார்த்து பயந்து இருக்கிறேன்
    வளந்தபின் அனுதாபப் பட்டு இருக்கேன்
    இன்றும் அவர்களை பார்க்கையில் வேதனையாக இருக்கு

    மிக்க நன்றி சார்

    @சசிகலா

    இன்னும் இருக்கிறார்கள் சகோ
    மிக்க நன்றி சகோ

    @ஹேமா

    சமூகம் கண்டிப்பா இதை உணர வேண்டும்
    சமூக ஆவலர்கள் அவர்களுக்கு நல்லதை போதிக்கவேண்டும்
    அவர்கள் வாழ்க்கையிலும் உண்டாமும்
    நல்ல திருப்பம்

    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  9. சிறந்த காட்சிக்கவிதை நண்பா.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...