Sunday, May 13, 2012

தாய் மனசு



என் 
பிறப்பில் 
பொருளும் சுகமும் குடும்பத்தில் 
தொலைந்ததாய் 
 உறவுகள் கூடிய சபையில் 
சொல்லிக் கொண்டிருந்தாள் 
பாட்டி 

(தாய் )
வடித்த கண்ணீரும் 
சுமந்த துக்கமும் 
இருந்த நோன்புகளும் 
பாட்டி சொல்லி முடிக்கும்முன் 
உடன் பிறப்புக்களின் விழிகளை நிரம்பியது 
கண்ணீர் 

 ம்மா... 
சள்ள பிள்ளை நான் 
பிழைக்காது செத்து போயிடும்ன்னு 
ஊரும் உறவும் சொல்லியும் 
அன்னைக்கே...ஏம்மா 
கொல்லல

அகம்
கனத்து 
விழியில் நீர் சொட்ட கேட்டேன் 
கொல்லவா சுமந்தேன் 
பத்துமாசம் 


தாய் 
சொல்
சபையில் வெறிக்காது கொட்டியது 
கண்ணீர் மழை 


*உதிரும் 
சருகுகள் முத்தமிடுகிறது 
தாய் காலடியை 

*அன்று 
இருமுறை உயிர் 
உடுத்திய  என் தாய்க்கும் தாய்மார்களுக்கும் 
அகம் கனிந்து சமர்ப்பிக்கிறேன் 

15 comments:

  1. அம்மா....சொல்லும்போதே அந்த வார்த்தையின் தூய்மை,பாசம் நெஞ்சை அடைக்கும்.உங்கள் கவிதை இன்னும் நெகிழவைக்கிறது தோழரே.அம்மாவின் பாதம் தொட்ட வணக்கம் !

    ReplyDelete
  2. நெகிழ வைக்கும் வரிகள்
    அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அம்மாவே தெய்வம் ஐயமில்லை
    கவிதை அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. இனிக்கிற ந்னைவுகளும்,கனக்கிற நினைவுகளுமாய் இருக்கிற தாயின் நினைவு.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ரொம்ப சூப்பர் ஆ இருக்குங்க அண்ணா ...
    நானும் அப்புடித் தான் பிறந்தேனாம்...


    சூப்பர் அண்ணா

    ReplyDelete
  6. அற்புதமான வரிகள் .

    ReplyDelete
  7. அம்மா!
    எழுத்துகள் சிக்கவில்லை வேறேதும் எழுத!

    ReplyDelete
  8. தாய்க்கு நிகரேது தாயின்றி நாம் ஏது ?அருமையான நெஞ்சை தொட்ட கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  9. //அன்று
    இருமுறை உயிர்
    உடுத்திய என் தாய்க்கும் தாய்மார்களுக்கும்
    அகம் கனிந்து சமர்ப்பிக்கிறேன் ... நெகிழ வைத்த வரிகள். இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வலைச்சரத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  11. சள்ளை பிள்ளை என்றாலும் நொள்ளை பிள்ளை என்றாலும் தாய்க்கு அது செல்லப்பிள்ளைதான். சொல்லப்போனால் அதுதான் மற்றெல்லாக் குழந்தைகளையும்விட தாயின் கவனத்தை முழுவதுமாய் பெறுகிறது. தாய்மையின் பெருமை போற்றும் கவிதைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் செய்தாலி.

    ReplyDelete
  12. @ஹேமா

    இந்த வை நிழலில் மறைந்திருப்பது
    என் வாழ்கையின் நிஜம்

    மிக்க நன்றி தோழி

    @மனசாட்சி™

    மிக்க நன்றி நண்பா

    @புலவர் சா இராமாநுசம்

    ஆம் அய்யா
    மிக்க நன்றி அய்யா

    @விமலன்

    மிக்க நன்றி சார்

    @கலை

    அப்படியா கலை
    உன் வெளிப்படையான கருத்திற்கும் அன்பிற்கும்
    மிக்க நன்றி கலை

    @சசிகலா

    மிக்க நன்றி சகோ

    @தமிழ் மீரான்

    மிக்க நன்றி தோழரே


    @PREM.S

    மிக்க நன்றி நண்பா


    @GowRami Ramanujam Solaimalai

    மிக்க நன்றி தோழரே


    @கீதமஞ்சரி

    உமைதான் தோழி
    அதனாலே எனக்கு நிறைய சலுகைகள் (செல்லம் )
    என் இஷ்டத்தில் நான் வளர்ந்தேன் (வார்த்தார்கள் )

    அன்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  13. செய்தாலி வார்த்தைகளை உள்வாங்கியதில் கனக்கிறது கண்கள் உணர்வுகளை உணர வைக்க உங்கள வார்த்தைகளால் முடிகிறது

    ReplyDelete
  14. @கோவை மு.சரளா

    எழுதும்போதே
    விழிகள் உதிர்த்துவிட்டது
    சிலதுளி கண்ணீரை

    மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  15. தாய் மனசு.... அருமைங்க செய்தாலி.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...