Monday, May 14, 2012

பழைய ....ப்பா கிறுக்கல்கள்




காத்திருப்பு

*இன்றும்
வரவில்லை அவள் பாதங்கள்
மூலையில் உறங்கும் செருப்பு

உள்குரல்

*அம்மா ...
உன் முகம் பார்க்காமல் போகிறேன்
கருவில் சிதையும் குழந்தை

தாசி

*சதைகளை
இரவலுக்கு எடுத்தவன் இறுதியில்
விட்டுச் சென்றான் காயங்களை


ஆத்மா
  
*பந்தங்களை
முறித்துக்கொண்டு நீ சென்றதால்
சுடுகாட்டில் எரிகிறது என் வெற்றுடல்


அந்திப்பொழுது

*யார் 
கிள்ளியது வானதேவதையின் 
கண்ணத்தை

கருவாட்டுகொழம்பு

*சந்தையிலே
காயிந்த பிணம்
வீட்டு சமையலில்

பைத்திக்கரன்  

*முகவரிமறந்து
உறவுகளை தொலைத்து வீதியில்
உலவும்உயிருள்ள பிணம்


கருணை பஞ்சம்

*வங்கியின்
வாசப்புரத்து வெற்றுத்
திருவோடுமாய் பிச்சைக்காரன்



முதுமை

*நித்திரை
நாழிகை தருணங்களில் சிறு
ஐயத்தோடே இமைமூடுகிறது விழிகள் 








15 comments:

  1. வணக்கம் நண்பா,
    குட்டிக் கவிதைகள் நிறைய கருத்துக்களோடு பிரவசமாகியிருக்கிறது.
    அருமை.

    ReplyDelete
  2. நாலு வார்த்தையில்....ஒவ்வொன்றும் கலக்கல்

    ReplyDelete
  3. சேக்காளி... பத்தும் முத்து... பதினோராவது அழகு... (புகைப்படத்தைக் கூறினேன் :))

    ReplyDelete
  4. குறிப்பிட்டுச் சொல்லத் தூண்டுபவை...
    காத்திருப்பும், முதுமையும்.

    பாராட்டுகள் சேக்காளி.

    ReplyDelete
  5. ப்பா.....எல்லாம் எல்லாமே மனதைத் தொடுகிறது.குறிப்பிட விருப்பமில்லை !

    ReplyDelete
  6. “உங்கள்
    கருத்து உளிகள்
    செதுக்குகிறது நல் சிந்தனை
    சிற்பத்தை“ - செய்தாலி

    சூப்பர்ங்க செய்தாலி.

    ReplyDelete
  7. ஒன்றென இல்லை நண்பரே..
    அத்தனை துளிப்பாக்களும்
    ஒளிப்பின்றி நெஞ்சில் தஞ்சமடைந்துவிட்டது..

    ReplyDelete
  8. உள்குரல் சற்று உரக்கவே கேட்கிறது அனைத்து கவிகளும் அருமைங்க .

    ReplyDelete
  9. கருவாடு, காத்திருப்பு, பைத்தியக்காரன் அருமை...

    ReplyDelete
  10. @நிரூபன்

    மிக்க நன்றி நண்பா

    @மனசாட்சி™

    மிக்க நன்றி நண்பா

    @சிசு

    மிக்க நன்றி சேக்காளி

    @ஹேமா

    மிக்க நன்றி தோழி


    @AROUNA SELVAME

    ம் (:
    மிக்க நன்றி


    @மகேந்திரன்

    மிக்க நன்றி தோழரே

    @சசிகலா

    மிக்க நன்றி தோழி

    @GowRami Ramanujam Solaimalai

    மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  11. துளித்துளியாய் கவிதைத்தோரணம்.

    ReplyDelete
  12. எல்லாமே சுப்பேரா இருக்குங்க அண்ணா ...அந்தி வானம் ரொம்ப சூப்பர் அண்ணா

    ReplyDelete
  13. மிகவும் சிறப்பான கற்பனை சிறந்த வளம் உண்மையில் இன்றைய நிலையை படம் பிடித்து கட்டியுள்ளீர் பாராட்டுகள்

    ReplyDelete
  14. மிகவும் சிறப்பான கற்பனை சிறந்த வளம் உண்மையில் இன்றைய நிலையை படம் பிடித்து கட்டியுள்ளீர் பாராட்டுகள்

    ReplyDelete
  15. இரண்டு வரியில் அழகான வர்ணனை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...