Wednesday, May 16, 2012

....லைக்கு பிறந்த நாள்
தளிர் 
பள்ளிப் பருவம் 
விடுமுறை நாட்களும் நூலக அறிவாலய 
தரிசனமும் 


நல் 
புத்தக நண்பகர்களும் 
ஆழ்ந்த வாசிப்பில் கழித்த 
அழகிய தருணங்கள் 
  
மதியை 
சூழ்ந்திருந்த இருளை
தன் ஒளிகளால் விரட்டியடித்தது
சில எழுத்து வரிகள்

எதோ எதோ 
படித்தேன் எண்ணத்தில் உதித்தவைகளை
கிறுக்கினேன்

இராத்திரிமுளுக்க
என்னதான் படிப்பானோ...
விடிஞ்சு பார்த்த தாள் குப்பையா கிடக்குது
அம்மாவின்  தினப் புராணம்

கவிதை 
போல் இருக்கே 
கிறுக்கி கசக்கி எறிந்த தாளை
வாசித்த பால்ய நண்பன் 

 ஆமா 
நாளைக்கு அதுதான்....
பசிக்கு சோறு போடப்போகுது
அப்பாவின் நகைப்பு

நல்லா 
எழுதிரிக்கியே ம்ம்ம் ..சபாஷ் 
பிழைகளை திருத்தி  தோள்தட்டிய 
தமிழ் ஆசிரியர் 

நல்ல 
புத்தகங்களை வாசிக்கையில்
அறிவுடன் மன மகிழ்ச்சியும்
 சுயம் உணர்ந்த வாழ்கையின்
புதிய கோட்பாடுகளும்

உண்மையை 
கிறுக்கி ஊருக்குச் சொல்கையில்
அகத்தில் சாந்தம் கொள்கிறது 
ஆன்மா 

குறிப்பேட்டில் 
கர்ப்பம் கொண்ட கிறுக்கல்கள் 
வலைகளில் பிரசவமான இரண்டாம் 
ஜென்ம நாள் 


வலையில் 
கிறுக்கலை விதைத்தேன் 
மனம் நிறைய சம்பாதித்தேன் 
நல் உறவுகளை 

அன்றும் 
இன்றும் என்றும் ஊக்கம் ஊட்(டிய)டும்  
நல் தோழமை உறவுகளுக்கு 
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 26 comments:

 1. வலைக்கு பிறந்த நாள் கண்டுபிடிச்சி போட்டேநேல்லோ ...முதலில் கலைக்கு தான் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லுரின்களோ எண்டு நினைத்தேன் அண்ணா ,,,,தலைப்பை பார்த்தவுடன் கலை ஆரோ இருக்குமெண்டு நடுவில் ஒரு ஆராய்ச்சி வேற எனக்கு வந்தது ..


  இனிய இரெண்டாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ...

  ReplyDelete
 2. நிஜமாகவே நிறைய நல்ல உறவுகளை சம்பாதித்து இருக்கோம் அண்ணா ...

  அண்ணா, அக்கா ,மாமா என்ர முகமறியா பாசம் எப்போதும் இருக்கணும் என்று கடவுளை வேண்டுகிறேன் அண்ணா ....

  ReplyDelete
 3. அண்ணா உங்களில் எனக்கு முதலில் ஒரு பயம் உண்டு ...கலை நிலா அண்ணா விடம் லாம் ஜாலி யா பேசுவேன் ..இப்போ கலை நிலா அண்ணா ப்லோக்ஸ் ஓபன் ஆறது இல்லை எனக்கு ..என்ன எண்டுத தெரியல ...

  ReplyDelete
 4. அண்ணா அந்த பயம் என்னத் தெரியுமா ...நீங்கள் ஒருக்கா கவிதை எழுதிப் போட்டு போய்டீங்க ...நானும் தங்கச்சி விநிதாவும் கவிதை நல்ல இருக்கு நு சொல்லிப் போட்டோம் ..அப்புறம் உங்க கவிதைக்கு கமெண்ட்ஸ் போடுறவங்க எல்லாருக்கும் நானும் விநிதாவும் கமென்ட் போடுவோம் ,"பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்செய்தாலி அண்ணா சார்பாக "எண்டு ...

  அப்போ தான் தொட்ட்டத்தில் இருந்து ஒருவர் சொன்னார் இந்த மாறி லாம் செய்தாலி அண்ணாகிட்ட விளையாடிநீங்க என்றால் அவர் கோவப் படுவார் என்று .....அப்புறம் ஒரே அமைதியா இருந்தொன்னு தப்பாலாம் நினைக்கப் பிடாது ...அப்புறமும் நாங்க சேட்டை பண்ணிநோம்ல ...

  ஆனாலும் அதை கேட்டதிலிருந்து கொஞ்சம் பயம் இருந்தது ...இப்போலாம் இல்லை அண்ணா

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்!வளர்க மேலும்! புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. @கலை

  முதலில் கலைக்கு நன்றி

  கண்டிப்பா வலையில் எழுத வந்து நிறைய நல்ல உறவுகளை சம்பாதித்தேன்
  தங்கச்சியான உன் அன்பையும் சேர்த்து

  பயம் பற்றிய சொல்லி இருந்தாய்
  யார் அப்படி சொன்னார்கர் என்று தெரியவில்லை அப்படி சொல்ல
  என் செயல் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்

  நான் நிறைய தளங்களில் சென்று பதிவை பதிவதுண்டு அங்கு வாசிக்கும் பதிவுகளுக்கு
  கருத்க்க்களையும் பதிவதுண்டு அதோடு சரி
  வீண் அரட்டை விவாதம் அந்த பக்கமே செல்வதில்லை
  காரணம் நிறைய இருக்கு
  தளங்களில் ஆரம்ப காலத்தில் நல்முறையில் கருத்திட்டு பழகிவருவார்கள்
  எதோ ஒரு சிறு காரணங்கால் திடீர் என்று சண்டையிட்டு கொள்வார்கள்
  பிறகு போட்டியும் பொறாமையும்தான் நீளும்
  அது வேதனைக்கு உரிய விஷயம்

  எனக்கு தெரிந்தவர்களாக (வலைபழக்கம் )இருந்தாலும் சரி
  தெரியாதவர்களாக இருந்தாலும் சரி
  அவர்கள் மனம் சங்கடபடாமல் கருத்துப் பதிந்து வருகிறேன் அன்றும் இன்றும்

  நான் அதிகம் பேசாததால் கோபக்காரன் சிலருக்கு அப்படி தோன்றும்
  யார் கோபமும் யாரையும் ஒன்றும் செய்யாது கலை

  நம்
  பழக்கமும் பேச்சும்
  நடு நிலையோடு இருந்தால்
  நிறை உறவுகள் இல்லை என்றாலும்
  குறைந்த உறவுகளோடு நிம்மதியாய் இருக்கலாம்

  வலை
  விவாதிக்கமும் சண்டைபோடவும் அல்ல
  அறிவைத் தேட

  உன்னிடம் எனக்குப் பிடித்தது உன் களங்கமில்ல மனசு

  உன்னைப்போல் மிகக் குறைந்த உறவுகளை சம்தித்து இருக்கிறேன்


  உன் அன்பிற்கு மிக்க நன்றி
  இறைவனுக்கு நன்றி

  ReplyDelete
 7. அழகு நண்பா வாழ்த்துக்கள்......
  //கவிதை
  போல் இருக்கே
  கிறுக்கி கசக்கி எறிந்த தாளை
  வாசித்த பால்ய நண்பன் //
  இந்த வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது.
  நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கவிதை எழுத ஆரம்பித்தேன்
  என் பால்ய நண்பர்கள் யாரும் படித்ததும் இல்லை, பாரட்டியது இல்லை
  அவர்களுக்கு கவிதை பிடிக்காதோ என்னவோ?
  ஒரு பொறாமை தான் என் பால்ய நண்பர்களும் படிக்க மாட்டாற்கலா என்று.

  ReplyDelete
 8. '...லைக்கு’ என்னோட வாழ்த்துக்களும் நண்பா.

  ReplyDelete
 9. என்னுடைய இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே... கதை கவிதை எழுத முற்படும் போதெல்லாம் தவறாமல் எதிர்கொள்ளும் இதுவா நாளைக்கு சோறு போடப் போகுது என்ற நகைப்பு இயல்பாக உங்களின் வரிகளில் பிரதிபலித்திருப்பதை மிக ரசித்தேன். அருமை.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  தொடரட்டும்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் நண்பரே!

  (ஓ... நீங்கள் கோபக்காரரா..? அது தான் உங்களிடம் நல்ல குணங்கள் நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் வேற... மனத்தில் பட்டதைச் சட்டென்று எழுதிவிடுவேன். இனிமேல் உங்களைப் போலவே... “ம்ம்ம் நல்லா இருக்கு“ ன்னு எழுதிடுறேன். ஓகே வா..? நன்றிங்க நண்பரே.)

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் அன்பரே இன்னும் பல கவிதைகளை தீட்டுங்கள்

  ReplyDelete
 13. @புலவர் சா இராமாநுசம்

  உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா

  @இளந்தமிழன்

  அப்படியா....!
  சிலர் நண்பர்கள் அப்பாடிதான் ம்ம்ம் (:
  மிக்க நன்றி நண்பா


  @சத்ரியன்

  வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா  @கணேஷ்

  மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள் சார்

  @மனசாட்சி™

  வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

  @AROUNA SELVAME

  மனதில்
  பட்டதை பட்டுன்னு சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும்
  அது எல்லாருக்கும் இருப்பதில்லை அது உங்களுக்கு இருக்கு

  யாருக்காகமும் உங்கள் சுயத்தை மாற்றாதீர்கள்

  மிக்க நன்றி


  @PREM.S

  வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் மிகவும் ரசித்தேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. கீறிட்ட சொற்களை நிரப்புக ஹாஹாஹா.....அருமையான கற்பனை.இங்கயும் கலைக்கு......காக்கா வானத்திலயும் இல்லாம பூமியலயும் இல்லாமக் குதிக்க்குதே.இதுதானா காரணம் !

  ReplyDelete
 16. உங்களுடன் அன்பாய் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன் ...வாங்கிக் கொண்டால் ரொம்ப சந்தோசம் கொள்வேன் ...

  ReplyDelete
 17. கீறிட்ட சொற்களை நிரப்புக ஹாஹாஹா.....அருமையான கற்பனை.இங்கயும் கலைக்கு......காக்கா வானத்திலயும் இல்லாம பூமியலயும் இல்லாமக் குதிக்க்குதே.இதுதானா காரணம் !
  May 17, 2012 1:43 PM///


  கவிதாயினி அக்கா காக்க்காக்கு பொறமை பொறாமை .......அவ்வவ் ....எண்ணப் பண்ணுறது அக்கா ..நீங்களும் சின்னப் புள்ளையா இருந்தா உங்களுக்கும் எல்லாரும் எழுதுவாங்க .....

  கவிதாயினி மேடம் அண்ணான் எழுதியது கலைக்கு இல்லை வலைக்கு ஓகே வா ....

  அன்புக்கு நன்றிங்க ஹேமா அக்கா ,செய்தலி அண்ணா

  ReplyDelete
 18. @யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி

  மிக்க நன்றி நண்பா

  @ஹேமா

  ம்ம்ம் ...(:

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 19. @கலை


  உன் அன்பிற்கும் விருதுக்கும்
  மிக்க நன்றி நன்றி ....தங்கச்சி (:

  ReplyDelete
 20. இனிய இரண்டாம் ஆண்டுக்கு
  எனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. மிகவும் சிறப்பான ஆக்கம் நல்ல கற்பனை சிறப்பு பாரட்டுகள்

  ReplyDelete
 22. என்னமோ ஆச்சு எனக்கு.மன்னிப்போடு உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழரே.தொடர்ந்தும் எழுதுங்கள் உங்கள் உணர்ச்சிக் கவிதைகளை !

  ReplyDelete
 23. அகத்தில் சாந்தம் கொள்கிறது
  ஆன்மா./// அருமை செய்தாலி..

  ReplyDelete
 24. வலைப்பூவின் இரண்டாவது பிறந்தநாளிற்கு இனிய வாழ்த்துக்கள்.. அழகிய கவிதை.

  ReplyDelete
 25. @Ramani

  வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்

  @மாலதி

  வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி

  @ஹேமா

  மன்னிப்பா எதுக்கு
  உங்கள் அன்பிற்கு வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி

  @Thenammai Lakshmanan

  மிக்க நன்றி கவிதாயினி

  @athira

  உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 26. வலைப்பூவின் இரண்டாவது பிறந்தநாளுக்கு இனிய வாழ்த்துக்கள் செய்தாலி. கவிதைப் பயணத்தின் வழிநடத்துநர்களைக் கண்டுகொண்டேன். அனைவரின் பங்களிப்பும் அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...