Sunday, May 20, 2012

அன்பின் பகிர்தல் (விருது )



புன்னகை விதைப்பில்
 மறு புன்னகை நீருற்றலில்
தளிர்கிறது அன்பு 

அன்பு 
வழிந்தொழுகும் நெஞ்சில் 
உயிர் நீத்துப் மடிகிறது 
வெறுப்புக் கனல் 

குவிந்தும் 
பகிராத பொருட்கள் சீழ்வடியும் 
அகத்தில் கனமாய் தேங்குகிறது 
பகிரப்படாத அன்பு 

 பகிர்தல் 
உணர்வோ பொருளோ 
இலகுவாகிறது மனித உறவுகளின் 
வாழ்க்கை 

தங்கை 
''கலை'' யின் அன்புப் பரிசு 
அகத்தில் ஏந்தினேன் பகிர்கிறேன் 
நன் உறவுகளோடு 

சிறந்த 
படைப்புக்களால் வலையாழும் 
நன் தோழமைகளுக்கு சமர்ப்பிக்கிறேன் 
அன்பை (விருதை )


19 comments:

  1. வாழ்த்துக்கள் விருதுக்கு.
    பாராட்டுக்கள் பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  2. ஆம் சகோ. பகிரும் போது பாரம் குறைகிறது, மனம் நிறைகிறது!
    விரு(ந்)து பெற்றமைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே!

    தாங்கள் எனக்குக் கொடுத்த விருதைப் பெருமையுடன் பெற்றுக் கொள்கிறேன். நன்றிங்க செய்தாலி.

    ReplyDelete
  5. மீண்டும் அருணா செல்வம்...

    ஏன் என் பெயருக்கு முன் மட்டும் புள்ளி வைத்து விட்டீர்கள்...? வேண்டுமானால் அந்தப் புள்ளியிட்ட இடத்தில் “கவிஞர்” என்று நிரப்பிவிடுங்கள். நான் ஏற்கனவே இரண்டு மரபுக்கவிதைகள் நுர்லை வெளியிட்டு இருக்கிறேன்.

    (இதை வெறியிடாமல் இருந்தால் மிகவும் மகிழ்வேன். நன்றிங்க நண்பரே.)

    ReplyDelete
  6. அன்பு வாழ்த்துக்கள் அண்ணா

    விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. விருதுக்கு வாழ்த்துக்கள் செய்தாலி. அதைப் பெற்றுக் கொண்டோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கொடுத்த உங்களுக்கும் வாங்கிய நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.தேர்ந்தெடுத்த எல்லாருமே அற்புதக் கவிஞர்கள் !

    ReplyDelete
  9. அன்பிற்கு அன்பு நண்பா.

    ReplyDelete
  10. @GowRami Ramanujam Solaimalai

    வாழ்த்துக்குமிக்க நன்றி நண்பா

    @சிவகுமாரன்

    வாழ்த்துக்குமிக்க நன்றி தோழரே

    @தமிழ் மீரான்

    வாழ்த்துக்குமிக்க நன்றி சகோ

    @மனசாட்சி™

    வாழ்த்துக்குமிக்க நன்றி நண்பா

    @AROUNA SELVAME
    வாழ்த்துக்கு மிக்க நன்றி

    .... இத வெற்றிடம் நீங்கள் தோழரா இல்லை தோழியா என்ற சந்தேகம்
    அருணா செல்வம் என்ற உங்கள் பெயரின் குளற்படிதான்

    அன்பிற்கு நன்றி

    PREM.S

    வாழ்த்துக்குமிக்க நன்றி நண்பா

    @கலை

    மிக்க நன்றி கலை

    @athira

    வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி

    @ஹேமா

    வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி

    @சத்ரியன்

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  11. அன்புக்கு நன்றி செய்தாலி.. அவ்வப்போது இந்த விருதுகள் ஊக்கமளிக்கின்றன.. நன்றி.:)

    ReplyDelete
  12. ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியை சொல்லிவிட முடிவதில்லை ................உள்ளம் பொங்கி வழிகிறது உங்களின் உபசரிப்பில் மகிழ்ச்சி செய்தாலி உங்களோட மின் அஞ்சல் முகவரி அனுப்பவும் saralafromkovai@gmail.com

    ReplyDelete
  13. சிறந்த பதிவர்களுடன் என்னையும் இணைத்து
    கௌரவப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. அறிவாளி பதிவர்களுடன் என்னையும் இணைத்த அன்பு விருதினை பகிர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். சகோ

    ReplyDelete
  15. வணக்கம் நண்பரே..
    விருதுபெற்ற தங்களுக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்..
    தான்பெற்ற இன்பத்தை எமக்கும் பகிர்ந்தளித்த உங்களுக்கு
    எமது மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  16. விருது பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றமைக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

    அன்பின் விருதை கீதமஞ்சரிக்கும் பகிர்ந்தளித்தமைக்கு மனம் நிறைந்த நன்றி செய்தாலி. விருது பெற்ற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...