Monday, May 28, 2012

வெளியேறியவன்
அவனை 
தேடி அலைகிறேன் 
அவனோ என்னிலிருந்து ஓடி ஒளிகிறான் 
நானும் விடாது துரத்திக்கொண்டு 

அந்தநாள் 
நினைவில் இல்லை இருப்பினும் 
சிந்தையின் ஒரு மூலையில் பதிந்திருந்தது 
அவன் இறங்கிச் சென்ற வடு 

ஒளிரும் 
சாயங்கள் பூசிக்கொண்டு வந்த  களங்கங்கள் 
பொய்யும்  வஞ்சனையும் ஆடைகழற்றிய தாண்டவம் 
தேங்கிய நஞ்சு சீழின் கொச்சை வாசம் 
திணறலில் அகம் புழுங்கி வெளியேறினான் 
அன்றுவரை என்னுள் இருந்தவன் 

பாலுக்கான 
யென்  கள்ளழுகையில் 
ஓ... பசி..குழந்தை என்றானோ... 

நினைவில் 
பதியாத மழலைப் பொய்யும்
...ம்மாவின் மிரட்டலும் தேம்பிய யென்   கண்ணீரும் 
பாவம் என்று இளகினானோ...

பால்யம் 
கடந்த பருவமும் பொடிக் கள்ளமும் 
மெல்ல பெருகிய நச்சு நீரூற்றும்

சிறைபட்டு 
உயிர் வதைபட்டு இருப்பானோ அவன் 
அகத்திலிருந்து  நழுவி ஒழுகிவிட்டானே 

அவன் 
என்னோக்கி மௌனிக்கிறான் 
யென் பொய்களோ என்னோக்கி அழுகிறது 

 ...ண்ணில்
யென்னுடல் சுமையாக 
வாழ்கையில் அகப்பொய் சுமைகள் 

...ப்பாவப் 
பொய்க் கறைகளை கழுவி கவிக்கிறேன் 
வாழ்வின் மோட்சமாய் 
மீண்டும் 
அவன் வருவான் என்ற நம்பிக்கையில் 

19 comments:

 1. கவிதை ரொம்ப அழகா இருக்குங்க அண்ணா எப்போதும் போல ...

  நிறைய தரம் படிச்சா தான் கொஞ்சம் விளங்குது எனக்கு ...

  ReplyDelete
 2. அருமை நண்பா..அழகான கவிதை

  ReplyDelete
 3. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 4. கள்ளமற்ற இளம்பருவம்,அல்லது உணமையாய் உங்களுக்குள் வாழ்ந்தவனைத் தேடுவதாகப் புரிந்துகொள்கிறேன்.அருமையான வார்த்தக் கோர்வைகள் !

  ReplyDelete
 5. ரொம்ப நல்லாவே எழுதியிருககீங்க அண்ணா! ஆனா எனக்குத்தான் சுலபமாய்ப் புரியவில்லை. ரெண்டு மூணு தரம் படிச்சு கொஞ்சம் மண்டையில ஏத்திக்கிட்டேன். (கலை அக்கா போலத்தான் நானும்)

  ReplyDelete
 6. வார்த்தை விளையாடுகிறது அவனை போலவே .............அருமை செய்தாலி அகமதின் ஆழ்ந்த வெளிப்பாடு

  ReplyDelete
 7. ''...நினைவில் இல்லை இருப்பினும்
  சிந்தையின் ஒரு மூலையில் பதிந்திருந்தது
  அவன் இறங்கிச் சென்ற வடு..''
  வடு உருவாக்கியவனைப் பற்றிய வேதனையின் விசும்பல்!....
  வித்தியாசமான கரு. நல்வாழ்த்து....
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 8. ...ப்பாவப்
  பொய்க் கறைகளை கழுவி கவிக்கிறேன்
  வாழ்வின் மோட்சமாய்
  மீண்டும்
  அவன் வருவான் என்ற நம்பிக்கையில் // வியப்பு மேலிடுகிறது தங்கள் தளம் வரும்போதெல்லாம் அருமை அருமை .

  ReplyDelete
 9. @கலை

  அப்படியா கலை
  அளவுக்கு அதிகமா பொய்யும் புரட்டும் மனதில் குடியேருகையில்
  நன்மையின் புகலிடமான அன்பு வெளியே போய்விடும்

  இந்த நவ கலியுகத்தில்
  அந்த நன்மையை தொலைத்த பெருண்பாண்மை மனிதர்களின்
  வரிசையில் நானும்

  இப்பம் புரிந்ததா கலை


  @இளந்தமிழன்

  மிக்க நன்றி தோழரே

  @ஹேமா

  நெருப்பு
  வெட்கை பட்டாலே பக்குன்னு எரியுமாம்
  கற்பூரம்

  அகப்பொருள் கவிதாயினி இல்லையா நீங்கள்

  புரிதல் கருத்திற்கு மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 10. @Niranjanaa Bala

  அப்படியா
  தங்கை கலைக்கு
  விளக்கம் சொல்லி இருக்கேன் பார் சகோ

  கலையைபோல்
  அண்ணா என்றழைக்கும்
  மற்றொரு தங்கை கிடைத்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete
 11. @கோவை மு.சரளா

  உங்கள் புரிதல் கருத்திற்கு மிக்க நன்றி தோழி

  @kovaikkavi

  மிக்க நன்றி தோழி

  @சசிகலா

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 12. பொய்க் கறைகளை கழுவி கவிக்கிறேன்
  வாழ்வின் மோட்சமாய்
  மீண்டும்
  அவன் வருவான் என்ற நம்பிக்கையில்²

  வெளியேறியவன் எங்கும் போகவில்லையே... உங்களுக்குள் தானே இருக்கிறான்..

  (நாமெல்லாம் மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை தானே தோழரே... எல்லோரிடமும் இருப்பதை அழகாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள்.)

  சூப்பருங்கள் தோழரே!

  ReplyDelete
 13. வாழ்வின் பொதுநிலையை
  நிதர்சன நிலையை
  அப்படியே தருவித்து இருக்கிறீர்கள்..

  நிதர்சனக் கவிதை.

  ReplyDelete
 14. இதோ உங்கள் தளத்துக்கு வந்துவிட்டேன் அங்கிள்.... இதுதான் என் முதல் வருகை ....

  ஒளிரும்
  சாயங்கள் பூசிக்கொண்டு வந்த களங்கங்கள்
  பொய்யும் வஞ்சனையும் ஆடைகழற்றிய தாண்டவம்
  தேங்கிய நஞ்சு சீழின் கொச்சை வாசம்
  திணறலில் அகம் புழுங்கி வெளியேறினான்
  அன்றுவரை என்னுள் இருந்தவன்

  உண்மையில் அழகான வரிகள் .......

  ReplyDelete
 15. ஆடும் வரை ஆடு, ஆடிமுடித்தப்பின் வந்துன் அகம் அமர்வேன் என்றபடி வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவன். விதி முடியும் தருவாயில் விரைந்தழைப்போம் அவனை. கட்டாயம் வந்து கலந்துகொள்வான் உயிர்த்தீயில். ஒவ்வொருவருக்குள்ளும் உணரப்படும் உணர்வின் தாக்கம் கவிதையாய் இங்கே பெரும் ஆக்கம். பாராட்டுகள் செய்தாலி.

  ReplyDelete
 16. @AROUNA SELVAME

  நமக்குள் இருப்பதாய் பாவிக்கிறோ
  உண்மையில் அகத்தில் இருந்து தொலைந்து விட்டது தோழரே

  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  @மகேந்திரன்

  உங்கள் புரிதல் கருத்திற்கு முக்க நன்றி தோழரே


  @எஸ்தர் சபி

  அங்கிளா....!!
  நல்லது
  வலையில் ஒரு மருமகள் கிடைத்ததில் மகிழ்ச்சி

  உங்கள் அருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 17. அருமை.. அருமை..

  ReplyDelete
 18. @கீதமஞ்சரி

  என் கிறுக்கலின்
  அகப்பொருளை ஆழமாய் சொன்னீர்கள்
  மிக்க நன்றி தோழி

  @கோவி

  வருகைக்கு மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 19. நம்மில் இருக்கும் போது உணர்வதை விட்டு, தொலைந்து போன பின் வருந்துவதே நம் வாடிக்கை நண்பா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...