Wednesday, May 30, 2012

சபிக்கப்ட்ட கண்ணீர்
முந்திய 
இரவின்  அரட்டைக் கிடையில் 
அறை நண்பர்  சொன்ன 
கதை 

இது 
கதையல்ல ''நிஜம்''
தொண்டை அடைத்த துக்கத்தில் 
கனத்த கரகர குரலில் இழுபட்டு உதிர்ந்தது 
சொற்கள் 

அங்கு வடக்கே''  
பாரில் கேட்டுதுண்டு இந்நாள்வரை 
கண்டிடாத நகரம் 

பதினெட்டை 
எட்டாத பதின் வயதுடயவளாம்
விரல் தும்பில் மாதங்கள்முன்   நடக்கப்பழகிய குழந்தை 
முதுகை சுற்றிய துணித்தொட்டிலில் உறங்குகிறது 
ஐந்து மாதம் கடக்காத மற்றொரு குழந்தை 

 இதில் 
வியப்பதற்கு என்னவென்க
 முடித்தபின் இடைபுகு என்றார் 
கடுத்த முகத்தில் நண்பர் 

மூன்று குழந்தைகள் 
நவ நாகரிகத்தில் வளர்ந்தது 
அறிவா ...? காமமா ...?
செவிடனைபோல் 
மௌனித்து  வேகமாய் நடக்குகிறது 
காலம் 

வினா 
எழுப்பலில்  
சற்றென அறையை ஆக்கிரமித்தது 
சிறு மௌனம் 

வஞ்சகன் 
ஒருவனின் காதல் மாயையில் விழுந்து 
தாலிச் சிறைக்குள் அகப்பட்டு ரத்த உறவுதுறந்து 
தெற்கிலிருந்து வடக்கே போனவள் 

ஆசை தீர்த்து 
பின் ஊருக்கு காட்சி வைத்தவன் 
கூவி விற்றான்
மனித அடிமைச் சந்தையில் 

விலை 
பொருளாய் ஆதரவற்ற 
அனாதைகள்  

விலைக்கு 
எடுப்பது சமூக மாநியனின் 
கறுத்த முகம் 

அந்த நகரில் 
பிச்சை கரம் நீட்ட சொல்கிறான் 
இல்லையேல் அரங்கேறுகிறது 
அடி உதை ரணவலிகள்

நான் கடவுள் 
படக்கதைபோல் இருக்கே 
என் நையாண்டியும் நண்பரின் 
கடுத்த புன்னையும் 

சதிக்குழி 
வீழ்ச்சியும் பெராழமும் 
விழித்தெழ சறுக்கல் தடுமாற்றமும் 
எழுதலில் வீழ்ந்தபடியே அவள் 

வேகமாய் 
ஓடிய கால நாழிகைகளில் 
ரணங்களை சுமந்து இழைந்தபடி அவள் 

பிச்சை 
பாத்திரம் நிரப்பியும் 
கால்வயிறு மூடாத பசியும் 

வற்றிய  வயிறு 
தளிராத மார்பில் 
சுரக்கத பாலுக்காக ஒப்பரிவைக்கும் 
கைக் குழந்தை 

இல்லா சுவற்றில் 
அவள் எழுதிய தன் 
விதி கவிதை ?

சிறை 
மீள் உறுதி மனமுமாய் 
தக்க தருணம் தேடி 
காலம் கடத்தி அவள் 

கயவக் கூட்டம் 
மதி மயங்கியதருணம் 
இருச் சுமையுமாய் சிறை உடைத்தாள்

ரயிலேறினாள்
விழித்த கயவர்களோ 
எட்டுத் திசை தேடியோடி ..

பசியில் 
நீண்டநேரம் ஒப்பாரிவைத்த 
கைக்குழந்தை மூர்ச்சையாகி  மௌனிக்க
 ஆள் கூடிய பயணச் சபையில் 
நெஞ்சடித்தழ இயலாதவளாய் அவள் 

இரவை 
விழுங்கிய நீண்ட ரயிலோட்டம் 
புலரில் கண்டு வியந்தாள் 
இறந்த கை குழந்தையின் நிறமாற்றம் 

அவளின் 
அக விதும்பலை உணர்ந்த பயணிகள் 
கேள்வி வினவ 
மனம் உடைத்தெறிந்து கொட்டினாள்
துக்கக் கதையை 


 வழிந்தொளுகிய
அவள் கண்ணீரை துடைக்க 
கரம் நீட்டினார்கள் 
நெஞ்சில் 
ஈரமுள்ள சிலமனிதர்கள் 

ரயில் 
நின்ற ஊரில் புதைத்தாள்
பசியில் இறந்த பச்சப் பிள்ளையை 

விரல் 
தும்பியில் தூங்கி நிற்கும் 
மீத குழந்தையுமாய் 
பிறந்த ஊருக்கு ரயிலேறினாள் 

எங்கோ 
உறங்கும் குழந்தையின் நினைவுமாய் 
சொந்த மண்ணில் உழைத்து மீத   குழந்தையுமாய் 
வாழ்கையை நகர்த்திகிறாள் 

உழைத்து 
வயிற்ருக்கு உணவு கொடுத்தாலும் 
வீதிக்கு வந்து பிச்சைக் கை நீட்டுதாம் 
பழக்கம் மறக்காத மூத்த குழந்தை 

நீண்ட பயணம் 
இறந்த பச்சக் குழந்தை 
நாள் முழுவது கண்ணீரை அடக்கிவைத்த 
பச்சிளம் தாய் 

அவளின் 
வலியும் உணர்வும் எப்படி இருந்திருக்கும் 
வினா முடிவில் முடிந்தது கதை .

கதையை 
சொல்லிவிட்டு உறங்க போய்விட்டார் நண்பர் 
என்னை இரவுமுழுக்க உறங்க விடாமல் செய்தது 
கதை 

நம்மை 
சுற்றிய எத்தனையோ கண்ணீர்கள் 
அதில் எத்தனையோ கதைகள் 

இந்த
கதையை ஏன் சொல்கிறேன் 
எனக்கு சொல்லத்தெரியவில்லை 
வாசித்து நீங்கள் சொல்லுங்கள் 
நான் ஏன் சொன்னேன் என்று .


13 comments:

 1. க(தை)விதை.....மனதை உலுக்கிவிட்டது.இன்றைய நாளை இந்த நிகழ்வு நிச்சயம் விழுங்கப்போகிறது.

  நாகரீகமும் ,விஞ்ஞானமும் உயர்ந்துவிட்டாலும் பெண்களின் வாழ்வு இன்றும் கேள்விக்குறிதான்.வேறென்ன சொல்ல இருக்கு நண்பரே !

  ReplyDelete
 2. இல்லா சுவற்றில்
  அவள் எழுதிய தன்
  விதி கவிதை // விதியோ மதியோ நெஞ்சம் கனத்துப்போனது .

  ReplyDelete
 3. மனம் கனத்து போனது
  வலியை உணர்கிறேன்

  வேதனையில் வார்த்தைகள்
  வெளிவர வில்லை செய்தாலி

  மீண்டும் ஒரு ஜென்மம்
  பெண் இல்லா உலகம் வேண்டும்
  பிராத்திகிறது மனம் ..........

  ReplyDelete
 4. உள்ளத்தை வருத்தும் இந்த உண்மைக்கதை இச் சமுதாயத்தின் அவலத்திற்கு எடுத்து்க் காட்டு! புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. “இந்த
  கதையை ஏன் சொல்கிறேன்
  எனக்கு சொல்லத்தெரியவில்லை
  வாசித்து நீங்கள் சொல்லுங்கள்
  நான் ஏன் சொன்னேன் என்று “

  மனித நேயம் மௌனம் காக்காது தோழரே...
  சமுதாயச் சாக்கடையைச்
  சந்தனமாக எண்ணும்வரை
  சபிக்கப்பட்டது கண்ணீர் மட்டுமல்ல
  தோழரே... பெண்ணினமும் தான்.

  கவிதை வடிவில் கதை அருமைங்க.

  ReplyDelete
 6. மிக நீண்ட பெண் வலி. மிக அருமை.. வலியுடன் ரசிக்க முடிந்தது.

  ReplyDelete
 7. மனதை உலுக்கும் ஒரு சிறுகதையை கவிதை வடிவில் சொல்லியிருக்கிறீர்கள் செய்தாலி! அந்தப் பெண்ணின் நிலையை எண்ணுகையில் உண்மையில் மனம் கனத்துத்தான் போனது. மனதில் ஈரம் உள்ள நபர்கள் அருகிவரும் காலமிது. ஹும்...!

  ReplyDelete
 8. @ஹேமா

  நண்பரிடம்
  வேடிக்கையாக கதையை கேட்டேன் என்றாலும்
  எதோ பரமாக இருந்தது, அதை இங்கு எழுதியபோது
  பாரம் குறைந்த உணர்வு

  கருத்திற்கு மிக்க நன்றி தோழி

  @சசிகலா
  அற்ப காதல் காரங்களுக்காக
  உறவை பிரிந்து போகும் நாளைய பதின் வயது பெண்களுக்கு
  இது ஒரு பாடம் சகோ

  மிக்க நன்றி

  @கோவை மு.சரளா

  பெண்
  ஜென்மம் என்ன செய்தது
  ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றும் கயவர்கள்
  இருந்துகொண்டே இருப்பார்கள் தோழி

  நம் காதுகளில் வந்து விழும் ஆயிரம் கதைகளில் இதும் ஒன்று

  @புலவர் சா இராமாநுசம்

  இன்று
  நகரங்களில் பிச்சி மாபியா
  மான்ய முமூடியிட்டு நடமாடுகிறது
  அவர்களை கண்டுபிடித்து ஒழித்தால்

  இந்த மாதிரியான கொடுமைகள் குறையும் அய்யா


  @AROUNA SELVAME

  நண்பரின்
  மனதை சலனம் செய்த கதையை
  என்னிடம் சொன்னார்
  நான் ஏந்திய பாரத்தை இங்கு உங்களிடம் பகிர்ந்துகொண்டேன்
  இது நிறைய பேரை போய்ச் சேரவேண்டும் என்றே எழுதினேன்

  மனிதாபிமானம்
  இருப்பதாக பாவிக்கிரர்ககள் மனிதர்கள் (என்னையும் சேர்த்து )

  மிக்க நன்றி தோழரே


  @ஆதிரா

  மிக்க நன்றி தோழி

  @பா.கணேஷ்

  இதை
  எப்படி எழுத என்ற கேள்வி இருந்தது எனக்குள்
  அவ்வளவு ரணமான நிகழ்வுகள்
  இந்த ரணத்தை அனுபவித்த அப்பெண் நிலை
  இனி வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காவே

  மிக்க நன்றி சார்

  ReplyDelete
 9. மிக சோகமும், குளப்பமும் சகோதரா.. இப்படி எத்தனை எத்தனையோ! மனிதம் வாழ வகை தான் வேண்டும். ம்.....
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 10. அபலைகளின் வாழ்க்கை பெரும்பாலும் இப்படித்தான் அவலப்பட்டு போகிறது. எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்காத எவரையும் அனுபவிக்க விடாத உலர் மனங்களுக்கு மத்தியில் சில ஈரமனங்களும் அவ்வப்போது தலைகாட்டி தம்மிருப்பை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. மனதை நெகிழவைத்த சம்பவம். இந்த மட்டிலும் அப்பெண் பிழைத்துவந்தது பெரிய விஷயம்தான்.

  ReplyDelete
 11. நவ நாகரீக மோகமும், பதின்ம வயதின் விபரம் அறியா விடலைப் பருவக் கோளாறுகளும்தான்
  இ(ந்தக் க)தைப் போன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்பது என் கருத்து.

  உங்கள் அறைத் தோழர் எதற்காக உங்களிடம் சொன்னாரோ, அத(ன் காரணத்தி)ற்காகத்தான்
  நீங்களும் எங்களிடம் சொன்னீர்கள், சரிதானே!

  ReplyDelete
 12. அச்சோ பாவம் அவங்க ....


  என்னோமோ மாறி இருக்குங்க அண்ணா படிச்சி முடிச்சப்புறம் ...


  இரண்டு தடவை படிப்பேன் எப்போதும் உங்களுத ...இந்த தரம் படிக்க தெம்பில்லை .....

  ReplyDelete
 13. மனம் கனக்கிறகு.சோகமும் குழப்பமும் சேர்ந்ததால்
  .சந்திப்போம் சொந்தமே

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...