Thursday, May 31, 2012

இரவின் சுவை

இரவின் 
சுவைகளை 
பகலில் மெல்லுகிறது சில இதழ்கள் 


முழு இரவில் 
அவர்களின் அறைநாழித் தேடல்
கிட்டா கனி புளிப்பு (நரி )


கள்ள விழிப்பு 
பொய்த் தூக்கங்கள் கனக்கும்
இரவுகள் 


ருசிக்கப்படாத சுவையில் 
கீழ்மேல் அடுக்குகிறார்கள் இ(ய)ல்லாக்
குறைகளை 


சீ ...
ஈன  ஜென்மங்கள்
திகட்டும் ஒவ்வாமை


அதாதி அவசரங்கள்
விரிசல் தேடி ....மன்ற வாசலில்
நெரிசல் 


''ருசி'' 
செத்த நாவிற்கு சபிக்கப்பட்டது 
வீதியில் கொட்டி கிடக்குது 
பச்சை வாந்திகள் 

16 comments:

 1. இரவென்பது ஓர் அற்புதமான நேரம்.. அதன் அருமை....

  ReplyDelete
 2. முழு இரவில்
  அவர்களின் அறைநாழித் தேடல்
  கிட்டா கனி புளிப்பு (நரி )

  //இதன் அர்த்தம் விளங்க வில்லை எனக்கு !

  ReplyDelete
 3. இரவின் தன்மையை
  அவரவர் இயல்பிற்கேற்ப
  உணர்தலை
  அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே..

  ReplyDelete
 4. எனக்கு ஒன்றும் புரியவில்லை தோழரே...

  ReplyDelete
 5. இப்போதெல்லாம் உரை நடை தமிழில் வடிக்கப்படும் கவிதை தான் எல்லோருக்கும் புரிகிறது .., என்னையும் சேர்த்துத்தான்.

  அதாவது கவிதையை கவிதையாய் வடித்தால் புரிவதில்லை :(

  ReplyDelete
 6. மனித மனத்தின் முகமூடியில்ல தோற்ற வெளிப்பாடுகளை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ( முகமூடியோடு இருபவர்களை மட்டுமே சமூகம் அன்கீகரிகிறது என்ன செய்ய ...)

  ReplyDelete
 7. இரவு சாட்சி சொல்லப் போனால் நிறையப்பேர் தலைகுனிய வரும்...பாவம் இரவென்ன செய்யும் !

  ReplyDelete
 8. எனக்கும் கொஞ்சம் புரியல அண்ணா ...


  ஹேமா அக்காளை மாறி நீங்களும் புரியாமல் எழுதினால் மீ எங்க போவேன் ....

  ReplyDelete
 9. அழகாயிருக்கு.

  ReplyDelete
 10. இரவுக்கு எல்லாமே கறுப்பு தான் மற்றபடி எதுவும் தெரியாது என்ற இளக்காரம் தான்...உண்மை அதுவல்ல..
  அருமையான படைப்பு.சந்திப்போம் சொந்தமே

  ReplyDelete
 11. இரவின் சுவை அருமை
  கொஞ்சம் கடிணமாக இருக்கிறது

  ReplyDelete
 12. இருள் என்பது அனைத்தின் இருப்புக்கூடம் செய்தாலி. அதனுள் அடங்கியிருக்கும் ‘அனைத்தும்’ இயற்கையின் வெளிப்பாடுகளே. சமூகக்கூட்டின் கட்டுப்பாடுகளை களைத்துப் போட்டால் புரிந்துக்கொள்ள முடியும் ‘இரவின் அத்தனை அவசியத்தையும்’.

  ReplyDelete
 13. //இரவு சாட்சி சொல்லப் போனால் நிறையப்பேர் தலைகுனிய வரும்...பாவம் இரவென்ன செய்யும் !//

  சரியான உண்மை.

  இரவுக்குள் இருக்குது
  இனம்புரியா
  இம்சைகளும் இன்பங்களும்..

  கவிதை மிக நன்று சகோ..

  ReplyDelete
 14. எனக்கும் கொஞ்சம் புரியவில்லைத் தான் ஆயினும் வாழ்த்து சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. @எஸ்தர் சபி

  மிக்க நன்றி எஸ்தர் சபி

  @PREM.S

  மேலே தொங்கும் திராட்ச்சையை
  கேளே நிற்ற நரி எட்டி எட்டி தின்ன பாத்துச்சாம்
  கடைசிவரை நரிக்கு திராட்ச்சை பழம் கிடைக்கவில்ல

  இறுதியில் நரி சொல்லிச்சாம் இந்த பழம் புளிக்குமாம் என்று
  நான் சொன்ன நரி (உவமை )

  மிக்க நன்றி நண்பா

  @மகேந்திரன்

  வரிகளின் முதிர்ச்சியில்
  கிறுக்கலில் அர்த்தம் உணர்ந்ததை உணர்த்துகிறது

  மிக்க நன்றி தோழரே

  @AROUNA SELVAME

  புரியும் படிதான் எழுதி இருக்கிறேன்
  இதற்குமேல் எழுதினால் கொச்சை ஆகிவிடும் எழுத்தும் பொருளும்

  காலம் இதன் அகப்பொருளை உங்களுக்கு உணர்த்தும் தோழரே

  மிக்க நன்றி நண்பரே

  @வரலாற்று சுவடுகள்

  சில உள் அர்த்தங்களை இப்படித்தான் எழுத வேண்டியுள்ளது தோழரே
  உங்களின் சுதாரிப்பு கருத்து சுவராசியமாக இருதது
  மிக்க நன்றி நண்பரே

  @கோவை மு.சரளா

  உண்மைதான் தோழி
  இப்படிப்பட்ட மனிதர்களை பார்க்கையில் ஆத்திரம் வருகிறது

  மிக்க நன்றி தோழி

  @ஹேமா

  கண்டிப்பாக
  தலைகுனிவு நிச்சயம் ஏற்ப்படும்

  ஆனால் இதை பகலில் மெல்லும் மனிதர்களை என்ன சொல்ல
  மிக்க நன்றி தோழி


  @கலை

  காலம் பதில் சொல்லும் கலை

  மிக்க நன்றி கலை

  @athira

  மிக்க நன்றி தோழி

  @Athisaya

  மிக்க நன்றி சகோ

  @இளந்தமிழன்

  மிக்க நன்றி தோழரே

  @சத்ரியன்

  உண்மைதான் நண்பா
  இரவின் சுவையை பகலில் மெல்லும்
  ஈன மனிதர்களை என்ன சொல்ல
  இப்படியும் இருக்கிறார்களே என்ற அந்த ஒரு ஆதங்கம் தான் நண்பா

  மிக்க நன்றி நண்பா

  @அன்புடன் மலிக்கா

  மிக்க நன்றி சகோ

  @kovaikkavi

  ம்(:
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 16. ஆம்'!
  அவசர ' கத்தியல் பல இரவுகள்-
  இப்படித்தானோ!

  புதிய வார்த்தைகள் -
  இன்னும் சிறப்புகள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...