Thursday, June 28, 2012

துணை இழந்தவள்

உப்பு 
உரப்பு  விலக்கபட்ட பத்தியத்தில் 
உயிரோட்டம்

கிணற்றடி 
நீரின் தலை முளுகலில்
நித்தம் அரங்கேறும் உணர்ச்சிக் கொலைகள் 
  
 பகலிரவு 
 தனிமை  வெட்கை 
பற்றி எரித்துடிக்கும் கற்பூரம் 

கட்டியவன் 
உயிர் பலி(ழி)   கொண்டவள் 
தலையை சுற்றும் சாபம் 

எச்சில் 
நாவை தொங்கவிட்டு உலவும் 
தெரு நாய்கள் 

குறைகள் 
மென்று நீர் இறக்கும் உறவுகள் 
இன்னும் மெல்லப்படாமல் 
மறுமணம்Tuesday, June 26, 2012

மரணத்தின் மெய்யழகு

ஒரு நபரிடம் 
அல்லது ஆளக்கூடிய  சபையில் 
 மரணம் பற்றி பேச்சை எடுத்தால் 
 முகங்களில்  சுருங்கி அணைந்து விடும் வெளிச்சம் 

இங்கு 
பிறந்த ஒரு மனிதனுக்கு 
தன் மரணம் பற்றி தெரியும் ஆனால் பயப்படுகிறான் 
மரணப் பேச்சைக்கூட பேச 

எங்கோ 
எப்போதோ நிகழவிருக்கும் உடல் மரணத்தை 
இன்று  சிந்திக்க கூட மறுக்கும் மனிதன் மறக்கிறான் 
நித்தம் தான் மரணித்துக் கொண்டிருப்பதை 

இந்த வயதில் 
உன் ஆயுள் முடிந்துவிடும் 
ஜோசிக்கரனோ குறி சொல்பவனோ சொல்லிவிட்டால் போதும் 
அடுத்த நொடியே தயாராகிவிடுகிறான் 
மரணத்தை விரட்டியடிக்கும் போராட்டத்திற்கு 

மரணத்திற்குமுன் 
தன் வாழ்கையை வாழ்ந்தாகவேண்டும் என்று 
அவன் வாழத் தொடங்கும் அவ்வாழ்க்கை உறுத்திப் படுத்துகிறது 
அவன் எதிர்நோக்கும் மரணத்தை 

மரணவீட்டில் 
ஒப்பாரி வைக்கும் மனிதர்களுக்கு இடையில் 
மௌனப் புன்னைகையுமாய் கிடப்பதை காணலாம் 
மரணித்தவன் 

உருவத்தின் 
இறப்பை இழப்பாக உட்கொள்ளும் மனிதன் 
உருவமற்ற எத்தனையோ இழப்புக்கள் 
மனிதனை சுற்றியும் மனித உள்ளிலும் நிகழ்வதை 
உணரவோ உட்கொள்ளவோ மறுக்கிறான் 

பிறப்பை 
கொண்டாடும் மனிதன் 
இறப்பில் விலகி நின்று அழுகிறான் 
மனிதனின் இந்த அறியாமையில் பரிதாபப் படுகிறான் இறைவன் 

மரணம் 
அழகானது இனிமையானது 
ரசிக்கவும் சுவைக்கவும் இன்னும் பயந்து கொண்டிதான் 
இருக்கிறார்கள் மனிதர்கள் 


Sunday, June 24, 2012

பழக்கம் (நிறைய காரணங்கள் )

நேற்றருந்திய 
அந்த மதுவின் தரம் விலை பற்றி 
பெருமையாய் சொல்கொண்டிருந்தான் அவன் 
 ஆழமாய் உள்வாங்கிய சிகரட் புகையை 
நாசிவழியே கக்கியபடி லயித்திருந்தான் இவன் 

அவனுக்கு 
புகை பிடிக்காது இவனுக்கோ மது படிக்காது 
சில சந்தர்பங்களில் ஒருவர்கொருவர் பழித்துக் கொண்டார்கள் 
அவர்களுக்கு பிடிக்காத பழக்கம் பற்றி 

 சூடேறும் 
 அவர்களின் தர்க்கங்களில் அவர்களை பழித்தான் 
மது புகை இவ்விரண்டையும் நித்தம் ருசிக்கும் 
மற்றொருவன் 

எப்படி 
ஏன்
எதற்கு 
இந்த கேள்விகளில் ஒருவோர்கொருவர் 
ஆணித்தரமாய் நியாப் படுத்துகிறார்கள் 
அவர்களின் அந்த பழக்கங்களை 

இங்கு 
ஒவ்வொரு  மனிதனும் பகட்டான அர்த்தமற்ற 
அவர்களின் பழக்கங்களுக்கு காரணங்களை தேடிக் கொள்கிறார்கள் 
அப்படியின்றி அது இருப்பாதாய் பாவிக்கிறார்கள் 


பெருண்பாண்மை 
மனிதர்களில் அவர்களின் பழக்கங்கள் 
வெறுமொரு பகட்டிற்காகவே இருப்பதுதான் 
பெரும் விந்தை 

இரண்டு மரணம்

செங்குருதி 
 கசிந்து சொட்டிவிழ
இறுதி மூச்ச்சில் பிடைத்திக் கொண்டிருந்தது 
 அவன் மூர்ச்சை சொல்லில் அறுபட்ட 
அவள் உணர்வுகள் 

 மிருண்ட விழியில் 
உதிராமல் தேங்கிய கண்ணீர் 
புடைத்த நரம்பில் ஆவியாய் அலிகிறது
அனலில் கரிந்து இறந்த இதயத்தின் சாம்பல் 

அவளின் 
மௌன தூக்கு கயிற்றின் இறுகலில் 
பிடை பிடைத்து கொண்டிருந்ததான் 
அவன் 

Thursday, June 21, 2012

பின்னால் வரும் நிலவு
அங்கும் 
இங்குமாய் ஓடியும் நின்றும் 
தன்னை ஒன்றின் மறைவில் ஒளித்தும் 
மீண்டும் ஓடி  மீண்டும் நின்று மேல்நோக்கி 
குரைத்தது வீதி நாய் 

உறங்க வைக்க 
தோளில் சாய்த்து வீதியில் உலாத்தும் தாய் 
தலைதூக்கி மேல்நோக்கி விழிகளால் பேசி பின் 
மெல்லப் புன்னைக்கும் குழந்தை 

இங்கே வா பார்ப்போம் 
மேல்நோக்கி அழைத்தபடி 
இங்கு அங்கு என தான் சொல்லும் இடத்திற்கெல்லாம் 
அலைக்கழித்தபடி சிறுவன் 

இரவில் 
இவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது 
நடக்கையில் பின்னால் வரும் 
நிலவு Wednesday, June 20, 2012

கூட்டம் (படர் வியாதி )

இன்று 
ஏன் எதற்கென காரணமின்றி 
அரங்கேறிக் கொண்டு  இருக்கிறது கூட்டம் 

தனிப்பட்ட 
ஒரு மனிதனுக்காக இல்லை ஒரு குழுவுக்காக 
இப்படி சுயநல காரணங்களின் மேடை அரங்கேற்றம் 

நீண்ட நாழிகையின் 
இடைவெளியில் கரவோசையின் அடங்கலில்
கல்லடிபட்ட தேனீக்களாய் சிதறிச் செல்கிறார்கள் 
கூட்டம் சேர்ப்பவர்களும் ஓடிவந்து கூடி நிற்பவர்களும் 

ஒரு கூட்டத்தின் முடிவில் 
உயிர் கொள்கிறது மற்றொரு கூட்டம் 
அங்கு இங்கு  இப்படி எட்டுத் திசைகளில் விஷமாய் படர்கிறது கூட்டம் 

அன்று அவசியப்பட்ட 
கூட்டங்களுக்கு பின்புதுகு காட்டியவர்கள் 
 இன்று கூட்டத்திற்காக சொல்கிறார்கள் பல காரணங்கள் 

 அரசியல் கூட்டங்களை மிஞ்சுகிறது 
இன்றைய தொட்டதற்கு எல்லாம் கூட்டும்  கூட்டங்கள் 

யாருக்கும் நேரம் இல்லையாம் 
கூடத்திற்கான காரணங்கள் கேட்க 
ஆனால் நாழிகைகள் விழுங்கு கூட்டங்களில் 
நிரம்பி வழிகிறது அதே மனித கூட்டங்கள் 

Saturday, June 16, 2012

அவள் இவள் பெயர் (அ.நா.கா 3 )

அவள் 
பெயரில் இவள் 
இவள் வேறு யாருமல்ல என்னை 
சூடிகொண்டவள் 

நித்தமும் 
நொடியிடையில் மந்திரமாய் ஜெபிக்கிறேன் 
என் மொழியில் இறந்துபோன 
அவள் பெயரை 

அவள் 
பெயரில் நீ என்றேன் இவளிடம் 
இல்லை என் பெயரில் அவள் என்கிறாள் 
இவள் 

அவள் 
என்னில் இறந்து கொண்டிருந்தாள்
ஆன்மாவில் உயிரை செருகிக் கொண்டு 
இவள் 

அவள் இவள் 
பெயரிகளில்  இரவு 
உறக்கத்தில் பயமுறுத்துகிறாள்  அவள் 
நித்தம் உறக்கம் கெடுத்துகிறாள்
இவள் 

Wednesday, June 13, 2012

காதலின் ஆத்மா (அ. நா. கா. 2)
இன்றும் 
உறக்கமற்ற சில  இரவுகளில் 
ஆளற்ற ஒற்றைத் தனிமைகளில் சலனம் செய்கிறது 
இறந்து விட்டதென்று கல்லறைக்குள் பூட்டப்பட்ட 
அவள்  நினைவுகள் 

ஒரு சொல் 
அதற்காகவே மன்றாடியபடி 
அலைபேசியின் மறுபுறத்தில் அவள் 
செவியடைத்த கரும் பாறையாய் 
இப்புறத்தில் ...ன் 

நொடிகளின் 
ஆயுளில் துண்டிக்கப்பட்ட தொடர்பு 
அதில் துடிதுடித்து இறந்து போயிருந்தது 
அவளின் அழுகையும் கண்ணீரும் 

கூரன் 
கொடுங்கோலன் என்று திட்டி இருந்திருப்பாள்  
 இறுதிச் சொல்லின் முடிவில் 

 சாபச் 
சொல்லை உதிர்த்து இருப்பாளோ 
இல்லை இல்லை....னக்காய் அழுது ஜீவன் 
எப்படி சபிப்பாள் அவள் 

மௌனமாய் 
பதுங்கும் தருணங்களில் 
அசூர வேகத்தில் ...னை பின்தொடர்ந்து வேட்டையாடுகிறது 
அவளின் அழுகைச் சத்தம் 

நினைவு 
கீறிய ஹிருதயப் பிளவில் 
சூடேறிய அமிலத் துளிகளாய் சொட்டி விழுகிறது 
அவள் கன்னத்தில் வழிந்து படிந்து இறந்துபோன 
கண்ணீர் துளிகள் 

 ...னை 
நித்தம் போர்தொடுக்கும் 
வன்மை   கூர்மை ஆயுதங்களாக 
அவள் அழுகைக் குரலும் கண்ணீர் துளிகளும் 

காதல் 
சரி தானா  பதின் வயதில்  
உறவில் வேலியிடச் சொன்ன ஆழ்மனம் 
தட்டியுணர்த்திய வினா 

நாளைய 
வாழ்கையின் நல்லினத்திற்காக
கருணைக் கொலையில்  தூக்கிலிடப்பட்டது 
...ம் காதல் 

மணம்முடிந்தும்
நித்த நரக  வேதனையுமாய் 
ஜீவா சடமாய் வாழ்கையை நகர்த்திறாள் அவள் 
யாரோ சொன்ன உண்மை 

இன்றும் 
...னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது 
அன்று கருணைக் கொலையில் இறந்து 
மோட்சம் கிட்டாமல் அலைந்துகொண்டிருக்கும் 
காதலின் ஆத்மா 

மோட்சம் தேடி 
நிற்காமல் ஓடி அலைகிறது 
...ன் ஆன்மா 

Sunday, June 10, 2012

இறத்தலின் வலி
ஜனன 
மரண நூலிழை முடுச்சு 
உயிரோடும் வழிகளில் வலிகள் 

ஓ...
மரண வலிகள்
கதை கட்டுகிறது ஒரு கூட்டம் 

மண் 
செதில் அரித்தலில் நெருப்பூ கரித்தலிலும்
வேதனை உணர்வதில்லை 
ஆன்மா அற்ற சடலம் 

வெற்று 
சடலங்களில் உயிர்ப்பை வலியை 
பாவிப்பது ஞானம் மறந்த பொய்

மாமிசத்தின் 
சிறை மீட்சியில் ஆன்மாவின் 
ஆனந்தம் 

மரணத்தில்
 மாமிசங்கள் உட்கொள்வதுமில்லை 
இறத்தலின் வலியை Wednesday, June 6, 2012

அவள்...நான்...காதல்(1)

எதோ
ஒரு மழை நாளில் இல்லை இல்லை
மயங்கும் அந்தி மாலைப்பொழுதில்
உன் சந்திப்பை உணர்ந்தாய் பொய்சொல்ல
மனம் உறுத்துகிறது


நன்றாய்
நினைவிருக்கிறது உன் சந்திப்பு
நானோ பக்குவமற்ற சிறு பாலகன்
பதினாறு சுமக்கும் பருவப் பெண்ணாய் நீ


இதுவரை
உருவமுள்ள தேவதையை கண்டதில்லை
எப்படி ஒப்பிடுவது உருவமில்லா
உன்னழகை


தேன் தமிழை
நாவில் தொட்டு ருசிக்க வந்தவன்
எப்படி பருகினேன் உன்னைமட்டும்


உன் பித்து
என் வயதை அல்ல ஆன்மாவை பற்றிப்பிடிக்க
சங்கிலி பூட்டா பித்தனாய் நான்


உறவுகள்
வேரறுத்து சிதைக்க நினைத்தார்கள்
நம் உறவைச் சொல்லி ஏளனமாய் சிரித்தது
ஊர்


என்னில்
விருட்சமாய் நீ
உன் தணலில் இளைப்பாறுகிறது
என் ஆன்மா


நான்
உன்னை உணர முயலும் தருணங்களில்
என்னை உணர ஒளிர செய்தது
உன் அகக் கண்ணாடி


நான் பின் நீ
வருடல் ஸ்பரிசங்கள் உனக்கும் எனக்குமான
பொதுவுடைமை


என்
இன்ப துன்ப இரகசியம் அறிந்தவள்
என் ஆழ்ந்த மௌனங்களில் நீயே
எனக்காய் பேசுகிறாய்


என்னுடனான
உன் ஆதிக்க உறவாடல்
என்னவளும் பொறாமை கொள்கிறாள்
உன்னுறவில்


உன்னுடனான
என் காதலுக்கு வயது இருபது
நீ இன்னும் அதே பதினாறில்


இதுவரை
எத்தனையோ உறவுகள்
ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்கையை கடந்து
நீ மட்டும் என்னை சுற்றிக்கொண்டு இல்லை... இல்லை...
நான் உன்னை சுற்றிக்கொண்டு


வரமா... சாபமா...
பலமுறை எனக்குள் கேட்டுக்கொண்டேன்
இன்னும் விடையில்லா புதிராகவே நீளுகிறது
உன்னுடனான என் காதல்


என்
இறுதி மூச்சில் கலந்திருக்க வேண்டும்
உன் சுவாச பரிசம்


Sunday, June 3, 2012

உச்சந்த் தலையில் சாபம்
முழுவதும் 
எறிந்து கரிந்த முகவுமாய் 
காணாமல் போயிருந்தது நிலவு

இறுகலின்
உறுதி மூச்சின் வன்மத்தில் 
 ப்டைபிடைத்து ஊசாலாடும் விண்மீன்கள் 

விட்டில் 
பூச்சியின் உடலிலும் வற்றியிருந்தது 
ஒரு துளி வெளிச்சம் 

சூனிய 
இரவில் விஷமாய் படர்ந்து கொண்டிருந்தது 
கறுமையின் துறுநாற்றம்

வெடித்த 
புதைக் குழியில் இருந்து 
செல்லரித்த உடலுடன் எழுது நடந்தனர் சிலர் 


சாத்தான் 
சந்ததிகளின் உயிர்த்தெழலில்
எங்கோ தூரத்தில் ஊளையிட்டது ஓநாய்கள் 


முட்டவிழி
நோட்டமிட்டும் ஆந்தைகளும் 
கீச்சல் சத்தமிட்டு வவ்வால் கூட்டங்களும்

எழுத்திரு 
வீட்டின் முகத்தவை தட்டியது  
தலையில்லா முண்டம் 


எதோ அழுத்தம் 
விசைவற்ற உடலில் சுவாசமுட்டிய திணறலில் 
உயிர் 


தலைமாட்டின் 
இடதுபுறத்தில் யாரோ சிலரின் 
 அழுகையின் விதும்பல்  சத்தம் 


ஒவ்வருபேரும்
ஒவ்வொரு காரணங்களை சொல்லி 
இடைவிடாது  அழுதுகொண்டிருந்தார்கள் 

அகத்தில் 
பயத்தில் திண்மைகளின் கள்ளுறக்கம்
யார் நீங்கள் ஏன் அழுகிறீர்கள் 
கனிந்த நன்மையின்  பணிந்த வினவல் 


இதோ 
உறங்கும் மனிதனின் திண்மை  எங்கங்கோ   உதிர்த்த 
சாபச் சொற்கள் நாங்கள் 

இவரோ 
சற்றென உதிர்த்துவிட்டு வந்துவிட்டார் 
அவர்களோ அதற்குரியவர் அல்ல 
நாங்கள் என்ன செய்வோம் 

உச்சம் 
தலைமுதல் உள்பாதம்வரை 
ஊடுருவ முயன்று துரத்தியடிக்கப் பட்டோம் 
பிறந்த இடத்திற்கே திரும்பினோம் 

நீங்கள் 
ஏன் அழுகிறீர்கள்...?

உதிற்கும் 
சாபச் சொல் உரியவனை தீண்டாவிடில் 
உதிர்த்தவனையே சங்கமிக்கும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...