Wednesday, June 13, 2012

காதலின் ஆத்மா (அ. நா. கா. 2)
இன்றும் 
உறக்கமற்ற சில  இரவுகளில் 
ஆளற்ற ஒற்றைத் தனிமைகளில் சலனம் செய்கிறது 
இறந்து விட்டதென்று கல்லறைக்குள் பூட்டப்பட்ட 
அவள்  நினைவுகள் 

ஒரு சொல் 
அதற்காகவே மன்றாடியபடி 
அலைபேசியின் மறுபுறத்தில் அவள் 
செவியடைத்த கரும் பாறையாய் 
இப்புறத்தில் ...ன் 

நொடிகளின் 
ஆயுளில் துண்டிக்கப்பட்ட தொடர்பு 
அதில் துடிதுடித்து இறந்து போயிருந்தது 
அவளின் அழுகையும் கண்ணீரும் 

கூரன் 
கொடுங்கோலன் என்று திட்டி இருந்திருப்பாள்  
 இறுதிச் சொல்லின் முடிவில் 

 சாபச் 
சொல்லை உதிர்த்து இருப்பாளோ 
இல்லை இல்லை....னக்காய் அழுது ஜீவன் 
எப்படி சபிப்பாள் அவள் 

மௌனமாய் 
பதுங்கும் தருணங்களில் 
அசூர வேகத்தில் ...னை பின்தொடர்ந்து வேட்டையாடுகிறது 
அவளின் அழுகைச் சத்தம் 

நினைவு 
கீறிய ஹிருதயப் பிளவில் 
சூடேறிய அமிலத் துளிகளாய் சொட்டி விழுகிறது 
அவள் கன்னத்தில் வழிந்து படிந்து இறந்துபோன 
கண்ணீர் துளிகள் 

 ...னை 
நித்தம் போர்தொடுக்கும் 
வன்மை   கூர்மை ஆயுதங்களாக 
அவள் அழுகைக் குரலும் கண்ணீர் துளிகளும் 

காதல் 
சரி தானா  பதின் வயதில்  
உறவில் வேலியிடச் சொன்ன ஆழ்மனம் 
தட்டியுணர்த்திய வினா 

நாளைய 
வாழ்கையின் நல்லினத்திற்காக
கருணைக் கொலையில்  தூக்கிலிடப்பட்டது 
...ம் காதல் 

மணம்முடிந்தும்
நித்த நரக  வேதனையுமாய் 
ஜீவா சடமாய் வாழ்கையை நகர்த்திறாள் அவள் 
யாரோ சொன்ன உண்மை 

இன்றும் 
...னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது 
அன்று கருணைக் கொலையில் இறந்து 
மோட்சம் கிட்டாமல் அலைந்துகொண்டிருக்கும் 
காதலின் ஆத்மா 

மோட்சம் தேடி 
நிற்காமல் ஓடி அலைகிறது 
...ன் ஆன்மா 

18 comments:

 1. ம்....புள்ளி வைத்தாலும்.....அதை நிரப்பி வாசிப்போம்ல

  ReplyDelete
 2. அந்த நாள் காதல் இன்றும் நினைவுகளில் - கொளுத்துங்க

  ReplyDelete
 3. வணக்கம்

  கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.http://www.googlesri.com/

  யாழ் மஞ்சு

  ReplyDelete
 4. என்ன தலைவா!?

  காதல் கசக்கிவிட்டதா?

  கவிதைக்கே கண்ணீர் வந்ததா?

  எது எப்படியோ-
  கவிதை என்னை ஆழ பாதித்து விட்டது!

  இடை வெளி .... அதில் நா என்பதை-
  எனைத்தே படித்தேன்!

  ReplyDelete
 5. மோட்சம் தேடி
  நிற்காமல் ஓடி அலைகிறது // என்னமா சொல்லிடிங்க உருகிட்டேன் போங்க .

  ReplyDelete
 6. காதலில் தேவை கருணை. ஆனால் கருணை என்ற பெயரில் கொலை செய்துவிட்டப்பின் புலம்பி அழுவதில் என்ன பயன்? மனவாழம் வரை கீறிப்பாய்ந்த வரிகளில் வலியின் வலி தெரிகிறது. அருமை செய்தாலி.

  ReplyDelete
 7. கீறிவிட்டு சுகம் தேடச்சொல்வது காதல் தோல்வியின் பிறவி குணம் நண்பா.

  ReplyDelete
 8. சோகம் தளும்புகிறது..

  ReplyDelete
 9. //மௌனமாய்
  பதுங்கும் தருணங்களில்
  அசூர வேகத்தில் ...னை பின்தொடர்ந்து//

  //கீறிய ஹிருதயப் பிளவில்
  சூடேறிய அமிலத் துளிகளாய்//

  வார்த்தைகளுக்குள் அடக்கிவிடமுடியாத உணர்வுகளின் கோர்வை .........அருமை நண்பா

  ReplyDelete
 10. சாபச்
  சொல்லை உதிர்த்து இருப்பாளோ
  இல்லை இல்லை....னக்காய் அழுது ஜீவன்
  எப்படி சபிப்பாள் அவள்


  ம்ம்ம்ம்ம்ம

  அருமையாக கவி அங்கிள்....

  ReplyDelete
 11. நண்பரே....
  அந்தக் கவிதைப்பெண் இந்தக் கவிதையைப் படித்தவிட்டு
  ஆத்ம சாந்தி அடைந்திருப்பாள்.

  ReplyDelete
 12. நினைவு
  கீறிய ஹிருதயப் பிளவில்
  சூடேறிய அமிலத் துளிகளாய் சொட்டி விழுகிறது
  அவள் கன்னத்தில் வழிந்து படிந்து இறந்துபோன
  கண்ணீர் துளிகள் //

  பிரிவின் வலி எமக்குள்ளும்
  மீண்டும்மீண்டும் படித்து ரசித்தேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. இன்றும்
  ...னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது
  அன்று கருணைக் கொலையில் இறந்து
  மோட்சம் கிட்டாமல் அலைந்துகொண்டிருக்கும்
  காதலின் ஆத்மா......
  என்று தீருமோ இந்ந வேதனை விசும்பல்கள்....:(
  வாழ்த்துக்கள் சொந்தமே..

  ReplyDelete
 14. மிக ஆழமான வரிகள்.
  தொகை வலியின் வரிகள்.
  மிக அழுத்தித் துடைத்து
  அக மகிழ்வு தேடினால்
  வெகு நிம்மதி வருமே!
  ஆழ்ந்த கருத்துச் சொற்கட்டு.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. outstanding நண்பரே., இதை தவித்து ஒன்றும் சொல்ல தோணவில்ல எனக்கு .!

  ReplyDelete
 16. ஒரே சோகமயமாக உள்ளது

  ReplyDelete
 17. குறிச்சொல்லில் அனுபவம்னு போட்டிருக்கீங்க. காதல் வலிகள் கொடுமையானது. அதனை அருமையான வார்த்தைகளால் கோர்த்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 18. கல்லறைகளும்,ஆளற்றஒற்றைத்தனிமையும்,நினைவுகளும் மனிதனுக்கு வரமாயும்,சாபாயும் வாய்த்துப்போன ஒன்றாய்/

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...