Saturday, June 16, 2012

அவள் இவள் பெயர் (அ.நா.கா 3 )





அவள் 
பெயரில் இவள் 
இவள் வேறு யாருமல்ல என்னை 
சூடிகொண்டவள் 

நித்தமும் 
நொடியிடையில் மந்திரமாய் ஜெபிக்கிறேன் 
என் மொழியில் இறந்துபோன 
அவள் பெயரை 

அவள் 
பெயரில் நீ என்றேன் இவளிடம் 
இல்லை என் பெயரில் அவள் என்கிறாள் 
இவள் 

அவள் 
என்னில் இறந்து கொண்டிருந்தாள்
ஆன்மாவில் உயிரை செருகிக் கொண்டு 
இவள் 

அவள் இவள் 
பெயரிகளில்  இரவு 
உறக்கத்தில் பயமுறுத்துகிறாள்  அவள் 
நித்தம் உறக்கம் கெடுத்துகிறாள்
இவள் 

20 comments:

  1. ////அவள்
    என்னில் இறந்து கொண்டிருந்தாள்
    ஆன்மாவில் உயிரை செருகிக் கொண்டு
    இவள் ///

    ரசித்து வியக்க வைத்த வரிகள்.!

    ReplyDelete
  2. அருமை சார் !
    உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

    இனி தொடர்வேன். நன்றி !

    ReplyDelete
  3. காதலில் தோல்வியுற்றும்
    வாழ நேர்ந்த காதலனின் மன அவஸ்தையை
    சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உறக்கம் கெடுக்கிற அவளும் இவளும் எவளாக இருக்க முடியும்?

    ReplyDelete
  5. இவளில் அவளை மறந்திட நினைத்து
    அவளும் இவளும் இணைந்து மறக்கச்செய்யும் இந்த விந்தைக்கு பெயர் தான் காதலோ...

    ஏகவசனத்திற்கு மன்னிக்கவும் சகோ:)

    ReplyDelete
  6. பெயராவது அவள் பெயராய் கிடைத்ததே இவளுக்கு அருமை அன்பரே மனம் கணக்க வைத்தது

    ReplyDelete
  7. ஓகோ... ரெண்டு பொண்டாட்டிக்காரரா?

    ReplyDelete
  8. தவிப்பின் தருணங்கள்
    பூடகமாய்த் தெரிகிறது கவியில்..

    ReplyDelete
  9. அவளும் இவளும் ஒன்றாக
    அளித்த கவிதை நன்றாகும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. அவளும் இவளும் சிந்தனையை பாடாய் படுத்தி உசுப்பிய கவி... அருமை அண்ணா :)

    ReplyDelete
  11. அவள் இவளென்று தவழ்ந்த உறவு
    ஒன்றில் ஒன்றை ஈடுகட்டும் உறவு.
    வாழ்க தங்கள் உறவுக் குளப்பம்.
    கவிதை அர்த்தமுடைய
    சொல் வினையாட்டுத் தானே.
    இப்படி நான் கூறுவேன்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. அவள்
    என்னில் இறந்து கொண்டிருந்தாள்
    ஆன்மாவில் உயிரை செருகிக் கொண்டு
    இவள்ஃஃஃஃஃஃஆஹா◌ா◌ா◌ாஅருமை சொந்தமே

    ReplyDelete
  13. அருமையான வரிகள் நன்றி நண்பா

    ReplyDelete
  14. ஓ... அவளே தானா இவளும்...
    பேஷ் பேஷ்...

    ReplyDelete
  15. அவளும் இவளும் என்னை நன்றாகவே கவர்ந்தார்கள் அங்கிள்... ஆகா அருமையான கவி அங்கிள்....

    ReplyDelete
  16. இருப்பதில் இல்லாமையையும்

    இல்லாமையில் இருப்பையும்

    நிலைநாட்டுவது ஒரு வித்தை

    அது உங்களுக்கு கைவருகிறது ............

    செய்தாலி.............



    உங்களின் கவிதைகளில் ஒரு சூட்சும ஒளி ஒளிர்வதை பார்க்க முடிகிறது ......

    ReplyDelete
  17. அவள் இவள்.... வரிகள்

    பலே பலே தோழா

    ReplyDelete
  18. அவள்
    பெயரில் நீ என்றேன் இவளிடம்
    இல்லை என் பெயரில் அவள் என்கிறாள்
    இவள் //அருமையான கவி

    ReplyDelete
  19. உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சும்மா கலக்கல்..,

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...