Sunday, June 3, 2012

உச்சந்த் தலையில் சாபம்
முழுவதும் 
எறிந்து கரிந்த முகவுமாய் 
காணாமல் போயிருந்தது நிலவு

இறுகலின்
உறுதி மூச்சின் வன்மத்தில் 
 ப்டைபிடைத்து ஊசாலாடும் விண்மீன்கள் 

விட்டில் 
பூச்சியின் உடலிலும் வற்றியிருந்தது 
ஒரு துளி வெளிச்சம் 

சூனிய 
இரவில் விஷமாய் படர்ந்து கொண்டிருந்தது 
கறுமையின் துறுநாற்றம்

வெடித்த 
புதைக் குழியில் இருந்து 
செல்லரித்த உடலுடன் எழுது நடந்தனர் சிலர் 


சாத்தான் 
சந்ததிகளின் உயிர்த்தெழலில்
எங்கோ தூரத்தில் ஊளையிட்டது ஓநாய்கள் 


முட்டவிழி
நோட்டமிட்டும் ஆந்தைகளும் 
கீச்சல் சத்தமிட்டு வவ்வால் கூட்டங்களும்

எழுத்திரு 
வீட்டின் முகத்தவை தட்டியது  
தலையில்லா முண்டம் 


எதோ அழுத்தம் 
விசைவற்ற உடலில் சுவாசமுட்டிய திணறலில் 
உயிர் 


தலைமாட்டின் 
இடதுபுறத்தில் யாரோ சிலரின் 
 அழுகையின் விதும்பல்  சத்தம் 


ஒவ்வருபேரும்
ஒவ்வொரு காரணங்களை சொல்லி 
இடைவிடாது  அழுதுகொண்டிருந்தார்கள் 

அகத்தில் 
பயத்தில் திண்மைகளின் கள்ளுறக்கம்
யார் நீங்கள் ஏன் அழுகிறீர்கள் 
கனிந்த நன்மையின்  பணிந்த வினவல் 


இதோ 
உறங்கும் மனிதனின் திண்மை  எங்கங்கோ   உதிர்த்த 
சாபச் சொற்கள் நாங்கள் 

இவரோ 
சற்றென உதிர்த்துவிட்டு வந்துவிட்டார் 
அவர்களோ அதற்குரியவர் அல்ல 
நாங்கள் என்ன செய்வோம் 

உச்சம் 
தலைமுதல் உள்பாதம்வரை 
ஊடுருவ முயன்று துரத்தியடிக்கப் பட்டோம் 
பிறந்த இடத்திற்கே திரும்பினோம் 

நீங்கள் 
ஏன் அழுகிறீர்கள்...?

உதிற்கும் 
சாபச் சொல் உரியவனை தீண்டாவிடில் 
உதிர்த்தவனையே சங்கமிக்கும்

17 comments:

 1. கவிதை நல்லா இருக்கு அண்ணா ...


  நீங்கள் எழுதும் கவிதையா புரிந்துக் கொள்ளவே ரொம்ப ஞானம் வேணும அண்ணா ..


  எனக்கு கொஞ்சம்புரியாமல தான் இருக்கு ...

  ReplyDelete
 2. உதிற்கும்
  சாபச் சொல் உரியவனை தீண்டாவிடில்
  உதிர்த்தவனையே சங்கமிக்கும்ஃஃஃஃஃ

  அருமை இந்த உண்மை எல்லோர்க்கும் உறைத்து விட்டால் யார் தலையையும் எந்தச்சாபமும் சுடாது.அருமை சகோ....!

  ReplyDelete
 3. யார் விட்ட சாபம்..... அருமை

  ReplyDelete
 4. கவிதை அழகாக இருக்கு... பாதிதான் புரிந்திருக்கு:(

  ReplyDelete
 5. கவிதை நல்லா இருக்கு அங்கிள் மூனு தரம் வாசிச்சு பார்த்தேன் பொருள் அறிந்தேன்

  சூப்பர்ர்ர்ர்ர்ர் அங்கிள்......

  ReplyDelete
 6. அருமையான வாழ்வியல் தத்துவக் கவிதை நண்பரே.
  இனியவை இருக்க இன்னாத சொற்களை
  பரண் ஏற்றி வைப்போம்....
  சாபச் சொற்களை புறம் தள்ளி வைப்போம்...

  ReplyDelete
 7. உதிற்கும்
  சாபச் சொல் உரியவனை தீண்டாவிடில்
  உதிர்த்தவனையே சங்கமிக்கும்//உண்மை உணர்த்தும் வரிகள் அருமை அருமை .

  ReplyDelete
 8. “உதிற்கும்
  சாபச் சொல் உரியவனை தீண்டாவிடில்
  உதிர்த்தவனையே சங்கமிக்கும்²

  தோழரே... இந்த வரிகளை வைத்துக்கொண்டு உங்கள் முழுகவிதையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  திரும்பவும் வருகிறேன்.

  ReplyDelete
 9. வாழ்வியல் தத்துவம்..

  ReplyDelete
 10. சிறப்பான கவிதை பாராட்டுகளும் நன்றியும்

  ReplyDelete
 11. வார்த்தைகள் உயிரைப் பிய்த்தெடுப்பதுபோல வேறேந்த ஆயுதமும் எடுப்பதில்லை ...வலி மாறாது சாகிறவரை !

  ReplyDelete
 12. சகோதரா!

  நான் உங்கள் ப்ளாக்கருக்கு பின் தொடர்பவனாக -
  இருந்தேன் ஏனோ-எனக்கு டாஷ்போர்டில் சிலகாலம் தெரியவில்லை!


  மீண்டும் உங்களது கவிதை தொடரவும்!@
  படிக்கவும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 13. @கலை

  என்
  குட்டி தங்கச்சி கலைக்கு

  இங்கு சொல்லப்பட்ட விஷயம் சாதாரணமான ஒன்னு
  அது என்னனா

  கோபத்தில நாம் சிலரை திட்டுவோம்
  சில ஆவேஷ கோபத்தில் வாய் ததவரி சபித்தும் விடுவோம்
  அப்படி சபிப்பது தவறு
  ஏன் என்றால்
  நாம் யாரை நோக்கி சபிக்கிரோமோ அவர் அந்த சாபத்திற்கு உகந்த(தகுந்த )ஆள் இல்லை என்றால்
  அந்த சாபம் நம்மிடையே திரும்பி வரும்

  இதுதான் இக்கிருக்கலின் பொருள்

  மேல் சொல்லபட்ட உவமைகள்
  திண்மையின் ஆழ்மனம்

  ReplyDelete
 14. @வரலாற்று சுவடுகள்

  மிக்க நன்றி தோழரே

  @Athisaya

  கண்டிப்பாக சகோ
  வருகைக்கு மிக்க நன்றி

  @இளந்தமிழன்

  யாரும் விட்ட சாபம் இல்லை
  யாரையும் சபிக்க வேண்டாம் என்கிறேன்

  மிக்க நன்றி தோழரே

  @athira

  அப்படியா
  கலைக்கு விளக்கம் சொல்லி இருக்கேன் பாருங்கோ

  @எஸ்தர் சபி

  மிக்க நன்றி மருமகளே ...

  @மகேந்திரன்

  கண்டிப்பா...
  மிக்க நன்றி தோழரே

  @Sasi Kala s

  மிக்க நன்றி சகோ

  @AROUNA SELVAME

  ம்(:
  மிக்க நன்றி தோழரே

  @ரிஷபன்

  மிக்க நன்றி கவிஞரே

  @மாலதி

  மிக்க நன்றி தோழி

  @ஹேமா

  உண்மைதான் தோழி
  வருகைக்கு மிக்க நன்றி தோழி

  @Seeni

  அப்படியா
  தொடருங்கள் உறவாய் தொடர்வோம்

  ReplyDelete
 15. ஓ...
  நீங்கள் சொன்னபிறகு பொருள் நன்றாக விளங்குகிறது.
  ஏனோ தெரியவில்லை... சங்க இலக்கியங்கள் படித்தால் என் மண்டைக்கு உடனே ஓரளவு பொருள் விளங்குகிறது்....
  ஆனால் உங்கள் கவிதையும் ஹேமா கவிதையும்....ரொம்ப கஷ்டப்பட்டாலும்... உம்ம்ம்...
  நீங்களெல்லாம் மிகப்பெரிய உவமைக் கவிகள்!!!
  வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...