Wednesday, June 6, 2012

அவள்...நான்...காதல்(1)

எதோ
ஒரு மழை நாளில் இல்லை இல்லை
மயங்கும் அந்தி மாலைப்பொழுதில்
உன் சந்திப்பை உணர்ந்தாய் பொய்சொல்ல
மனம் உறுத்துகிறது


நன்றாய்
நினைவிருக்கிறது உன் சந்திப்பு
நானோ பக்குவமற்ற சிறு பாலகன்
பதினாறு சுமக்கும் பருவப் பெண்ணாய் நீ


இதுவரை
உருவமுள்ள தேவதையை கண்டதில்லை
எப்படி ஒப்பிடுவது உருவமில்லா
உன்னழகை


தேன் தமிழை
நாவில் தொட்டு ருசிக்க வந்தவன்
எப்படி பருகினேன் உன்னைமட்டும்


உன் பித்து
என் வயதை அல்ல ஆன்மாவை பற்றிப்பிடிக்க
சங்கிலி பூட்டா பித்தனாய் நான்


உறவுகள்
வேரறுத்து சிதைக்க நினைத்தார்கள்
நம் உறவைச் சொல்லி ஏளனமாய் சிரித்தது
ஊர்


என்னில்
விருட்சமாய் நீ
உன் தணலில் இளைப்பாறுகிறது
என் ஆன்மா


நான்
உன்னை உணர முயலும் தருணங்களில்
என்னை உணர ஒளிர செய்தது
உன் அகக் கண்ணாடி


நான் பின் நீ
வருடல் ஸ்பரிசங்கள் உனக்கும் எனக்குமான
பொதுவுடைமை


என்
இன்ப துன்ப இரகசியம் அறிந்தவள்
என் ஆழ்ந்த மௌனங்களில் நீயே
எனக்காய் பேசுகிறாய்


என்னுடனான
உன் ஆதிக்க உறவாடல்
என்னவளும் பொறாமை கொள்கிறாள்
உன்னுறவில்


உன்னுடனான
என் காதலுக்கு வயது இருபது
நீ இன்னும் அதே பதினாறில்


இதுவரை
எத்தனையோ உறவுகள்
ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்கையை கடந்து
நீ மட்டும் என்னை சுற்றிக்கொண்டு இல்லை... இல்லை...
நான் உன்னை சுற்றிக்கொண்டு


வரமா... சாபமா...
பலமுறை எனக்குள் கேட்டுக்கொண்டேன்
இன்னும் விடையில்லா புதிராகவே நீளுகிறது
உன்னுடனான என் காதல்


என்
இறுதி மூச்சில் கலந்திருக்க வேண்டும்
உன் சுவாச பரிசம்


36 comments:

 1. கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை.

  ReplyDelete
 2. ஒவ்வொரு பூவாக கோர்த்து-
  மாலை கட்டியது போல் -
  அழகு -உங்கள்

  கவிதை!

  ReplyDelete
 3. நல்ல கவிதை சகோ!!

  ReplyDelete
 4. ஏதோ காதல் தோல்வி என்றெல்லாம் சொல்கிறார்களே.... அதெல்லாம் சுத்தமானப் பொய் என்று உங்கள் கவிதை அப்பட்டமாக உணர்த்துகிறது நண்பரே.

  காதல் வலிகள் சுகமானது தான்.
  எனக்கும் புரியும் படி கவிதை கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க செய்தாலி.

  ReplyDelete
 5. காதல் சுமக்கும் நினைவுகள்.
  இனிக்கிறது,நல்ல சுகமான சுமை நிறைந்த நினைவுகள்/

  ReplyDelete
 6. என்றும் பதினாறு!
  அவள் யாரோ?
  என்னப் பேரோ?
  எந்த ஊரோ?

  சா இராமாநுசம்

  ReplyDelete
 7. ///////////நான்
  உன்னை உணர முயலும் தருணங்களில்
  என்னை உணர ஒளிர செய்தது
  உன் அகக் கண்ணாடி/////////////////

  நான் ரசித்த அருமையான வரிகள் .. :)

  ReplyDelete
 8. //சங்கிலி பூட்டா பித்தனாய் நான்//அடடா அப்படி ஆகிட்டீன்களா

  ReplyDelete
 9. //கண்டத்தில்லை//எழுத்து பிழையை கவனிக்கவும் அன்பரே

  ReplyDelete
 10. உன் பித்து
  என் வயதை அல்ல ஆன்மாவை பற்றிப்பிடிக்க
  சங்கிலி பூட்டா பித்தனாய் நான்

  கவிதையில் ஒவ்வொரு சொல்லும் உயிரைச் சுமந்துள்ளது. ஆன்மா பேசும் பேச்சாக..

  ReplyDelete
 11. இதுவரை
  எத்தனையோ உறவுகள்
  ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்கையை கடந்து
  நீ மட்டும் என்னை சுற்றிக்கொண்டு இல்லை... இல்லை...
  நான் உன்னை சுற்றிக்கொண்டு// அற்புதமான வரிகள் அழகு ரசித்துப் படித்தேன் .

  ReplyDelete
 12. @கோவி

  மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 13. @AROUNA SELVAME

  இன்னும் நீங்கள் கவிதையை புரிந்து கொள்ளவில்ல்லையே
  என் அருமைத் தோழரே

  இது
  ஒரு மனித பெண்ணுடனான காதல் அல்ல
  கவிதை (பெண் ) உடனான காதல்

  அவள் என்றதற்கு பொருள் (கவிதை)

  ReplyDelete
 14. @புலவர் சா இராமாநுசம்

  அவள்
  வேறு யாரும் அல்ல
  ''கவிதை'' பெண்

  என் கவிதை காதலி
  அன்றும் இன்று அந்த பதினாரிலேயே நிற்கிறாள்

  ReplyDelete
 15. @வரலாற்று சுவடுகள்

  உங்கள் ரசனைக்கு
  மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 16. @PREM.S

  கவிதை
  பெண்ணை காதலிப்பவர்கள் எல்லாரும்
  அப்படித்தான் ஆகிவிடுவார்கள் நண்பா

  ReplyDelete
 17. காதல் ரசம் சொட்டுகிறது நண்பரே..
  கவிதையில்..

  ReplyDelete
 18. நண்பரே...
  அக்காகிட்ட நல்லா மாட்டிக்கினீங்களா...?
  யார் அவள் என்று சிண்டைப் பிடித்துக் கேட்டாங்களா...?
  நல்லா வேணும்.
  நான் அப்பவே நினைத்தேன்.
  இப்படியெல்லாம் உண்மையை எழுதினா மாட்டிக்க மாட்டாங்களா என்று...

  தப்பிக்கிறதுக்கு “கவிதை பெண்“ என்ற பெயர் சாக்கா உங்களுக்கு....

  சரி சரி புரியுது...

  ReplyDelete
 19. காதலின் கண்ணியம் உங்கள் கவிதையில்.......அழகான உணர்வுகள்.....

  ReplyDelete
 20. வரமா... சாபமா...
  பலமுறை எனக்குள் கேட்டுக்கொண்டேன்
  இன்னும் விடையில்லா புதிராகவே நீளுகிறது
  உன்னுடனான என் காதல்////////
  எனக்குப்பிடித்த வரிகள்.இன்று வரை இந்த ஐயப்பாடுகள் தீரவேயில்லை பலருக்கும்.அழகான கவிதை...!சந்திப்போம் சொந்தமே..!

  ReplyDelete
 21. நல்ல கவிதை... காதல் ரசம் அப்படியே இஷ்டத்துக்கும் சொட்டுது.......

  புதிய வரவுகள்:
  பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?,கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

  எனது தள கட்டுரைகளில் சில:
  அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-தளத்திற்கு வந்து உங்க கருத்தை தெரிவியுங்கள்........www.tvpmuslim.blogspot.com

  ReplyDelete
 22. @AROUNA SELVAME


  ம் (:

  கவிதை மேல் எனக்குள்ள காதல்
  அவங்களுக்கு நல்லா தெரியும் தோழரே
  அதனால் அவங்க சண்டைக்கு வர மாட்டாங்க ம்(:

  இரண்டாம் வருகைக்கும்
  நல் சுவராசியமான கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 23. நீண்ட நாட்களாக செய்தாலி என்ற பெயர் ஏன் என்று எண்ணி செய்யதலி என்று முடிவெடுத்துள்ளேன்.
  கவிதை மிக அருமை. சொற்தோரணம் மிக அழகு. நான் முதலில் மகள் என்று ஊகித்தேன். பின் தாங்களே போட்டு உடைத்தாயிற்றே. அருமை...அருமை..நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 24. ஏக்கத்தோடு ஒரு காதல் கவிதை உங்கள் பக்கத்திலும்...ம்ம் !

  ReplyDelete
 25. //என் காதலுக்கு வயது இருபது
  நீ இன்னும் அதே பதினாறில்//

  கை கூடாத காதலன்/காதலி மனதின் ஆழத்தில் பதிந்துவிடும் “அவ்வயது” உருவம் நீங்குவதே இல்லை.

  அழகு.

  ReplyDelete
 26. கன்னிப் பருவத்தைக் கடக்காத கட்டழகி - தமிழன்றி யாராய் இருக்க முடியம்?

  ReplyDelete
 27. @சத்ரியன்


  நீங்க சொன்ன விஷயம் மறுக்கமுடியாதது

  காதலிதான் நண்பா
  இன்றும் விரிசல் இல்லாமல் எங்கள் காதல்

  இது பெண்ணுடனான காதல் இல்லை நண்பா
  தமிழ் ''கவிதைப்'' பெண்ணுடனான காதல்

  ReplyDelete
 28. @சிவகுமாரன்

  உங்கள் புரிதல் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...