Sunday, June 10, 2012

இறத்தலின் வலி




ஜனன 
மரண நூலிழை முடுச்சு 
உயிரோடும் வழிகளில் வலிகள் 

ஓ...
மரண வலிகள்
கதை கட்டுகிறது ஒரு கூட்டம் 

மண் 
செதில் அரித்தலில் நெருப்பூ கரித்தலிலும்
வேதனை உணர்வதில்லை 
ஆன்மா அற்ற சடலம் 

வெற்று 
சடலங்களில் உயிர்ப்பை வலியை 
பாவிப்பது ஞானம் மறந்த பொய்

மாமிசத்தின் 
சிறை மீட்சியில் ஆன்மாவின் 
ஆனந்தம் 

மரணத்தில்
 மாமிசங்கள் உட்கொள்வதுமில்லை 
இறத்தலின் வலியை 



14 comments:

  1. //மண்
    செதில் அரித்தலில் நெருப்பூ கரித்தலிலும்
    வேதனை உணர்வதில்லை
    ஆன்மா அற்ற சடலம் //மின் மயானங்களில் எப்படியோ சற்று பயம் தான்

    ReplyDelete
  2. படிக்கலை நாளைக்கு வாரேன் தோழா

    ReplyDelete
  3. ''...மாமிசத்தின்
    சிறை மீட்சியில் ஆன்மாவின்
    ஆனந்தம் ..''

    மிகவும் கனதியான - வலி - வரிகள்.
    உண்மையான வரிகள்.
    நலவாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. இறத்தலில் வலி உணரப்படாவிடினும் அதை நினைக்கையில் வலி தோன்றும்.

    ReplyDelete
  5. வரிக்கு வரி இறத்தலின் வலி இப்படி இருக்குமோ என சித்திக்க வைக்கிறது .

    ReplyDelete
  6. தோழரே

    தங்கள் என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்ததை காலம் கடந்து காண நேர்ந்தது (நான் பிரேக் இல் இருந்த நேரம்) கண்டேன் சந்தோசம் - மனசாட்சியை அறிமுகம் செய்த விதம் அந்த குசும்பு, லொள்ளு பிடிச்சிருக்கு ரசித்தேன்.

    ReplyDelete
  7. இறத்தலின் வலி புரியுது

    ReplyDelete
  8. என் மனம் கண்ட குமுறலை கவி வடிவில் கண்டேன்...

    இறத்திலின் வலி ம்ம்
    அருமை அங்கிள்...

    ReplyDelete
  9. மாமிசத்தின்
    சிறை மீட்சியில் ஆன்மாவின்
    ஆனந்தம்
    காத்திரமான வலிகள் கவிதை வலி செய்து போகிறது..அருமை,அவசியமாயுள்ளது

    ReplyDelete
  10. வெற்று
    சடலங்களில் உயிர்ப்பை வலியை
    பாவிப்பது ஞானம் மறந்த பொய்ù

    உண்மைதாங்க தோழரே...

    அருமையான கவிதை.
    (முக்கியமாக எனக்கு புரிந்தது - நன்றி)

    ReplyDelete
  11. சில வரிகள் என்றாலும்
    உள்ளுக்குள் ஏதோ செய்கிறது
    வார்த்தைகள்...

    வலியெடுக்க பிறப்பெடுத்த
    ஜனனத்திற்குப் பின்
    ஜென்மத்தில் ....

    மரணத்தின் சுவடுகள்
    உண்டாக்கும் வலிகளை
    அற்புதமா சொல்லிட்டீங்க நண்பரே...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...