Thursday, June 21, 2012

பின்னால் வரும் நிலவு




அங்கும் 
இங்குமாய் ஓடியும் நின்றும் 
தன்னை ஒன்றின் மறைவில் ஒளித்தும் 
மீண்டும் ஓடி  மீண்டும் நின்று மேல்நோக்கி 
குரைத்தது வீதி நாய் 

உறங்க வைக்க 
தோளில் சாய்த்து வீதியில் உலாத்தும் தாய் 
தலைதூக்கி மேல்நோக்கி விழிகளால் பேசி பின் 
மெல்லப் புன்னைக்கும் குழந்தை 

இங்கே வா பார்ப்போம் 
மேல்நோக்கி அழைத்தபடி 
இங்கு அங்கு என தான் சொல்லும் இடத்திற்கெல்லாம் 
அலைக்கழித்தபடி சிறுவன் 

இரவில் 
இவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது 
நடக்கையில் பின்னால் வரும் 
நிலவு 



17 comments:

  1. தோழரே... நிலவு பாடல் நன்றாக உள்ளது.

    நிச்சயமாக நிலவைத்தானே சொன்னீர்கள்... எப்படி டைரக்ட்டா சொன்னீர்கள் என்று சற்று குழப்பமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நிலவு விளையாட்டை நானும் பார்த்து இரசித்தேன் நண்பா.

    ReplyDelete
  3. நிலவு ரம்யமானது.
    உங்கள் கவிதை அதைவிட அழகாக இருக்கிறது...
    ரசித்தேன்.

    ReplyDelete
  4. ரசித்து எழுதியிருப்பீர்கள் போல., அருமை .!

    ReplyDelete
  5. ''...இவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது
    நடக்கையில் பின்னால் வரும்
    நிலவு...''
    ஆமாம் ரசிக்கும் விளையாட்டே..நல்ல கரு. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. siru vayathai -
    ninaivupaduthiteenga!

    ReplyDelete
  7. குழந்தைகளுக்கு நிலவு என்றுமே அழகுதான். நல்ல தோழனும்கூட. அழகான கவிதை.

    ReplyDelete
  8. ஆ,,,,அருமையான கவிதை.நல்ல கற்பனை.படித்ததும் மனதை சொடுக்குப்போடவைக்கிற கவிதை,
    அதுதான் குழந்தை,அதுதான் நிலா,நிலாவின்பின்னால் குழந்தையும்,குழந்தையின் பின்னால் நிலாவுமாய் வசந்தம் வீசுகிற வாழ்க்கை/வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  9. நிலாப் பாட்டு அருமை....

    ReplyDelete
  10. இந்தக்கவிதை எழுதின கைக்கு மோதிரம் போடல◌ாம்.அவ்வளவு அழகு..!

    ReplyDelete
  11. தாய் மடியில் இருந்தபடி நிலா ரசித்த அனுபவம் தரும் வரிகள் அருமை சகோ .

    ReplyDelete
  12. பின் தொடரும் நிலவு நல்ல கருத்து கவிதை அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. அண்ணா ஆஆஆஆஆஆஆஅ எப்படி இருக்கீங்க ...ஊருக்கு போயிட்டேன் அதான் எங்கயும் சரியா வர முடியல ..

    அண்ணா கவிதை எப்பவும் போல அழகு

    ReplyDelete
  14. பின் தொடரும் நிலவை ரசித்தேன். நன்றி !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...