Wednesday, June 20, 2012

கூட்டம் (படர் வியாதி )





இன்று 
ஏன் எதற்கென காரணமின்றி 
அரங்கேறிக் கொண்டு  இருக்கிறது கூட்டம் 

தனிப்பட்ட 
ஒரு மனிதனுக்காக இல்லை ஒரு குழுவுக்காக 
இப்படி சுயநல காரணங்களின் மேடை அரங்கேற்றம் 

நீண்ட நாழிகையின் 
இடைவெளியில் கரவோசையின் அடங்கலில்
கல்லடிபட்ட தேனீக்களாய் சிதறிச் செல்கிறார்கள் 
கூட்டம் சேர்ப்பவர்களும் ஓடிவந்து கூடி நிற்பவர்களும் 

ஒரு கூட்டத்தின் முடிவில் 
உயிர் கொள்கிறது மற்றொரு கூட்டம் 
அங்கு இங்கு  இப்படி எட்டுத் திசைகளில் விஷமாய் படர்கிறது கூட்டம் 

அன்று அவசியப்பட்ட 
கூட்டங்களுக்கு பின்புதுகு காட்டியவர்கள் 
 இன்று கூட்டத்திற்காக சொல்கிறார்கள் பல காரணங்கள் 

 அரசியல் கூட்டங்களை மிஞ்சுகிறது 
இன்றைய தொட்டதற்கு எல்லாம் கூட்டும்  கூட்டங்கள் 

யாருக்கும் நேரம் இல்லையாம் 
கூடத்திற்கான காரணங்கள் கேட்க 
ஆனால் நாழிகைகள் விழுங்கு கூட்டங்களில் 
நிரம்பி வழிகிறது அதே மனித கூட்டங்கள் 

11 comments:

  1. கூட்டத்தின் சைக்காலஜியை ஆராய்ந்தால் தனியே கட்டுரையே எழுதலாம். உங்களின் கவிதை எழுப்பிய கேள்வி எனக்குள்ளும். அற்புதமான கவிதையை மிக ரசித்தேன்.

    ReplyDelete
  2. /ஒரு கூட்டத்தின் முடிவில்
    உயிர் கொள்கிறது மற்றொரு கூட்டம் /

    ஆம். அருமை. நல்ல கவிதை.

    ReplyDelete
  3. sariyaa sonneenga !
    puriyumpadi sonneenga!

    ReplyDelete
  4. கூட்டம்... படர் வியாதி இல்லைங்க.
    அதுவும் தொத்து வியாதி.

    அருமையான கவிதைங்க தோழரே.

    ReplyDelete
  5. ஏன் எதற்கு என்று கேட்காமல், கை தட்டினால் தட்டுவதும், சிரித்தால் சிரிப்பதும் தானே இன்றைய பிழைப்பாய் கிடக்கிறது!

    நல்ல கவிதை செய்தாலி.

    ReplyDelete
  6. சரியாச் சொன்னீங்க சார் !

    ReplyDelete
  7. ஆட்டு மந்தைகள் போலவே அழைத்த திக்கெல்லாம் செல்லும் அறிவிலி கூட்டம் மதியற்ற கூட்டம் இந்த மாந்தர்கள் கூட்டம்

    அருமை.!

    ReplyDelete
  8. அற்புதமான கருத்து அங்கிள்....

    அருமை.....

    ReplyDelete
  9. "ஒரு கூட்டத்தின் முடிவில்
    உயிர் கொள்கிறது மற்றொரு கூட்டம்"

    "யாருக்கும் நேரம் இல்லையாம்
    கூடத்திற்கான காரணங்கள் கேட்க"

    போன்ற வரிகள் யோசிக்க வைக்கிறது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. கூட்டம் கூட்டத் தெரிந்தவன்தானே தலைவனாகிறான்
    கூட்டமானவன்தானே ஏமாளியாகிறான்
    அருமையான சிந்தனையை கவியாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. கூட்டம் கூட்டத் தெரிந்தவன்தானே தலைவனாகிறான்
    கூட்டமானவன்தானே ஏமாளியாகிறான்
    அருமையான சிந்தனையை கவியாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...