Tuesday, June 26, 2012

மரணத்தின் மெய்யழகு





ஒரு நபரிடம் 
அல்லது ஆளக்கூடிய  சபையில் 
 மரணம் பற்றி பேச்சை எடுத்தால் 
 முகங்களில்  சுருங்கி அணைந்து விடும் வெளிச்சம் 

இங்கு 
பிறந்த ஒரு மனிதனுக்கு 
தன் மரணம் பற்றி தெரியும் ஆனால் பயப்படுகிறான் 
மரணப் பேச்சைக்கூட பேச 

எங்கோ 
எப்போதோ நிகழவிருக்கும் உடல் மரணத்தை 
இன்று  சிந்திக்க கூட மறுக்கும் மனிதன் மறக்கிறான் 
நித்தம் தான் மரணித்துக் கொண்டிருப்பதை 

இந்த வயதில் 
உன் ஆயுள் முடிந்துவிடும் 
ஜோசிக்கரனோ குறி சொல்பவனோ சொல்லிவிட்டால் போதும் 
அடுத்த நொடியே தயாராகிவிடுகிறான் 
மரணத்தை விரட்டியடிக்கும் போராட்டத்திற்கு 

மரணத்திற்குமுன் 
தன் வாழ்கையை வாழ்ந்தாகவேண்டும் என்று 
அவன் வாழத் தொடங்கும் அவ்வாழ்க்கை உறுத்திப் படுத்துகிறது 
அவன் எதிர்நோக்கும் மரணத்தை 

மரணவீட்டில் 
ஒப்பாரி வைக்கும் மனிதர்களுக்கு இடையில் 
மௌனப் புன்னைகையுமாய் கிடப்பதை காணலாம் 
மரணித்தவன் 

உருவத்தின் 
இறப்பை இழப்பாக உட்கொள்ளும் மனிதன் 
உருவமற்ற எத்தனையோ இழப்புக்கள் 
மனிதனை சுற்றியும் மனித உள்ளிலும் நிகழ்வதை 
உணரவோ உட்கொள்ளவோ மறுக்கிறான் 

பிறப்பை 
கொண்டாடும் மனிதன் 
இறப்பில் விலகி நின்று அழுகிறான் 
மனிதனின் இந்த அறியாமையில் பரிதாபப் படுகிறான் இறைவன் 

மரணம் 
அழகானது இனிமையானது 
ரசிக்கவும் சுவைக்கவும் இன்னும் பயந்து கொண்டிதான் 
இருக்கிறார்கள் மனிதர்கள் 


13 comments:

  1. தோழா மரணத்தை சொன்ன விதம் அழகு.

    //
    உருவமற்ற எத்தனையோ இழப்புக்கள்
    மனிதனை சுற்றியும் மனித உள்ளிலும் நிகழ்வதை
    உணரவோ உட்கொள்ளவோ மறுக்கிறான் //

    சிந்திக்க வைத்த வரிகள்

    ReplyDelete
  2. பிறப்பதே இறப்பதற்க்காகவே., இடையில் இறந்தும்., இறந்துவிடாமல் இருக்க ஏதாவதொன்றை நமது வாழ்க்கை பக்கங்களில் பதிவு செய்துவிட்டு செல்வதே வாழ்க்கை.!

    அழகான கவி.!

    ReplyDelete
  3. பிறப்பை
    கொண்டாடும் மனிதன்
    இறப்பில் விலகி நின்று அழுகிறான்
    மனிதனின் இந்த அறியாமையில் பரிதாபப் படுகிறான் இறைவன் // வித்தியாசமான சிந்தனை கண்டு வியக்கிறேன் .

    ReplyDelete
  4. // உருவத்தின்
    இறப்பை இழப்பாக உட்கொள்ளும் மனிதன்
    உருவமற்ற எத்தனையோ இழப்புக்கள்
    மனிதனை சுற்றியும் மனித உள்ளிலும் நிகழ்வதை
    உணரவோ உட்கொள்ளவோ மறுக்கிறான்//

    சீரிய சிந்தனை!கவிவடிவம் பெற்றுள்ளது சா இராமாநுசம்

    ReplyDelete
  5. உண்மையான விடயத்தை அழகாக கூறியுள்ளீர்கள்.....:)

    ReplyDelete
  6. எத்தனைதான் இழந்தாலும் தான் இருப்பதாக உணர்வத்ற்கும்
    எததனை அடைந்தாலும் தானில்லையென்ற
    நினைப்பிற்கும் உள்ள வேறுபாடுதானே அது ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சிந்திக்க வைக்கும் கவிதை சார் !

    ReplyDelete
  8. ஒரு கவிதை படித்திருக்கிறேன்.. மரணத்திற்கு பயபடுவதில்லை, ஏனெனில் அதை நான் சந்திக்கும்போது உயிருடன் இருக்க போவதில்லை.. அருமையான கவிதை சகோ..

    ReplyDelete
  9. மரணம் ரசனைக்குரியதே.

    ReplyDelete
  10. மரணம்
    அழகானது இனிமையானது
    ரசிக்கவும் சுவைக்கவும் இன்னும் பயந்து கொண்டிதான்
    இருக்கிறார்கள் மனிதர்கள் ஃஃஃஃஃ
    இந்த விடயத்தில் தங்களை ஒத்துப்போகிறேன்..மரணம் விசித்திர இன்பம்.இன்று வந்தாலும் அப்படியே அணைத்து விடுஆவன்.அரமை சொந்தமே..!

    ReplyDelete
  11. //பிறப்பை
    கொண்டாடும் மனிதன்
    இறப்பில் விலகி நின்று அழுகிறான் //உண்மை தான் பலர் அப்படி தான் நான் உட்பட

    ReplyDelete
  12. வாழ்வை இனிப்பாக வாழ்பவன் மரணத்தை நினைக்க, விரும்பவே மாட்டான். இவ்வளவு தெளிவாக மரணம் பற்றி சகோதரா. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...