Sunday, June 24, 2012

பழக்கம் (நிறைய காரணங்கள் )





நேற்றருந்திய 
அந்த மதுவின் தரம் விலை பற்றி 
பெருமையாய் சொல்கொண்டிருந்தான் அவன் 
 ஆழமாய் உள்வாங்கிய சிகரட் புகையை 
நாசிவழியே கக்கியபடி லயித்திருந்தான் இவன் 

அவனுக்கு 
புகை பிடிக்காது இவனுக்கோ மது படிக்காது 
சில சந்தர்பங்களில் ஒருவர்கொருவர் பழித்துக் கொண்டார்கள் 
அவர்களுக்கு பிடிக்காத பழக்கம் பற்றி 

 சூடேறும் 
 அவர்களின் தர்க்கங்களில் அவர்களை பழித்தான் 
மது புகை இவ்விரண்டையும் நித்தம் ருசிக்கும் 
மற்றொருவன் 

எப்படி 
ஏன்
எதற்கு 
இந்த கேள்விகளில் ஒருவோர்கொருவர் 
ஆணித்தரமாய் நியாப் படுத்துகிறார்கள் 
அவர்களின் அந்த பழக்கங்களை 

இங்கு 
ஒவ்வொரு  மனிதனும் பகட்டான அர்த்தமற்ற 
அவர்களின் பழக்கங்களுக்கு காரணங்களை தேடிக் கொள்கிறார்கள் 
அப்படியின்றி அது இருப்பாதாய் பாவிக்கிறார்கள் 


பெருண்பாண்மை 
மனிதர்களில் அவர்களின் பழக்கங்கள் 
வெறுமொரு பகட்டிற்காகவே இருப்பதுதான் 
பெரும் விந்தை 

15 comments:

  1. சிந்திக்க வைக்கும் கவி.!

    ReplyDelete
  2. பெருண்பாண்மை
    மனிதர்களில் அவர்களின் பழக்கங்கள்
    வெறுமொரு பகட்டிற்காகவே இருப்பதுதான்
    பெரும் விந்தை //


    நிச்சயமாக
    கருத்துள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எல்லோரும் பகட்டு மனிதர்கள் தான் இங்கே.

    ReplyDelete
  4. கருத்தாழக் கவிதைங்க தோழரே.

    ReplyDelete
  5. உண்மைதான் சகோ..ஒரு பழக்கத்திற்கு அடிமைஆகிவிட்டார்கள் எனில் அது நல்லதா,கெட்டதா என்பது தெரிந்திருந்தாலும் அதற்கு பல காரணங்களை சொல்லியே நியாயம் பேசுவார்கள்.இந்த மாதிரி பேசுபவர்களை மனிதனாக ஏற்றுக்கொள்ள கூடாது..

    ReplyDelete
  6. இங்கு
    ஒவ்வொரு மனிதனும் பகட்டான அர்த்தமற்ற
    அவர்களின் பழக்கங்களுக்கு காரணங்களை தேடிக் கொள்கிறார்கள்
    அப்படியின்றி அது இருப்பாதாய் பாவிக்கிறார்கள்

    உண்மைதான் நண்பரே.

    ReplyDelete
  7. ''...பெருண்பாண்மை
    மனிதர்களில் அவர்களின் பழக்கங்கள்
    வெறுமொரு பகட்டிற்காகவே இருப்பதுதான்
    பெரும் விந்தை..''
    இதைத் தான் இன்று என் ஆசை
    ஆக்கத்திலும் கூறியுள்ளேன்.
    சரியான கருத்தே. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. உண்மை தான் நீங்கள் சொல்வது ..

    ReplyDelete
  9. உண்மையை உரித்துக் காட்டும் கவிதை.
    அருமை.

    ReplyDelete
  10. ஆம் நண்பரே,
    வெட்டியாய் ஒரு வேற்று உணர்வுக்காய்
    தத்தம் உடல்நிலை பாதிக்கும் பழக்கங்களுக்கு
    அடிமையாய் வாழ்வை நகர்த்துதளுக்கு அருமையான
    ஒரு சாடல் கவிதை...

    ReplyDelete
  11. உண்மைதாங்க பகட்டிர்க்காய் சில பழக்கங்கள் விட முடியாமல் தொற்றி நிற்கும் சில அல்ல பல பேர் .

    ReplyDelete
  12. எப்படி
    ஏன்
    எதற்கு
    இந்த கேள்விகளில் ஒருவோர்கொருவர்
    ஆணித்தரமாய் நியாப் படுத்துகிறார்கள்
    அவர்களின் அந்த பழக்கங்களை ஃஃஃஃஃஃஃஃஃஃ
    அற்புதமான படைப்பு..

    ReplyDelete
  13. உண்மையை அப்பட்டமாக்கியுள்ளீர்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...