Wednesday, July 25, 2012

22 Female Kottayam

இது 
நான் ரசித்த என்னை பாதித்த  திரைப்படம் அல்ல 
மாறாக இந்த கதைக்கு இப்படித்தான் முடிவு 
இருக்கமேண்டும் என்று எதிபார்த்துக் கொண்டே பார்த்த படம் 

நம் சமூகத்தில் 
முந்திய காலத்தைவிட இந்த நவ உலகில் 
ரெம்பவே கீழ்த்தரமாய் பெருகிக்கொண்டு இருக்கிறது 
பெண் மீதான ஆணின் பாலில் பலாத்காரங்கள் 

ஒரு நாளிதழை  எடுத்து வாசித்தால் ஊடகத்தை திறந்தால்
அகம் குமட்டும் கீழ் தரமான நிகழ்வுகள் 
ச்சீ... இந்த சமூகத்திலா நாமும் வாழ்கிறோம் என்ற உவப்பு ஏற்பட்டதுண்டு பலமுறை 

ஒன்றை குறிப்பிட்டு சொல்ல மனம் தயங்குகிறது 
எத்தனையோ நிகழ்வுகள் 

ஒரு சிசுவில் கூட காமம் தேடிய தந்தை 
மிகச் சதரானமாய் ஊடங்களில் காட்டபடுகிறது 
அதையும் அண்ணாந்து பார்த்து ,கேட்டு விட்டு பின் அதை அப்படியே மறந்து விடுகிறது இந்த கேடுகெட்ட சமூகம் 

கிணற்றில் 
ஆற்றில் 
மலை அடிவாரத்தில் 
புதரில்  பாதி எறிந்த உடல் 
இது எல்லாம் பாலில் பலாத்தகாரம் செய்யபட்டு கொல்லப்பட்ட  மூன்று முதல் பத்து வயதுள்ள குழந்தைகள் 

நம் சமூகம் எத்தனை கேவலம் என்றால்...! 
ஒரு கொச்சையான எழுத்தையோ பொருளையே கண்டால் உடனே படை திரட்டுகிறது இந்த நவ கலிகால சமூகம் 

நாரீகம்... நாகரீகம் ...
எங்கும் எதிலும் நாகரீகம் இப்போ அந்த நாகரீகங்கள் அநாகரீகமாய் 
நம்மை நம் உறவுகளை நம் சமூகத்தை கொன்று தின்று கொண்டு இருக்கிறது 
இதுபோன்ற 
சமூக அவலங்களை நான் பலமுறை கிறுக்கி இருக்கிறேன் 
இதில் எதுவும் என் சொந்த கற்பனை அல்ல 
மாறாக இந்த சமூகத்தில் நிகந்தவைகள் தான் இவைகள் 

ஆனால் அந்த கிறுக்கல்கள் கவனிக்கப்டமாலே இருந்தது 
அதில் எனக்கு வருத்தம் இருந்தது  யாரும் வாசிக்க வில்லையே என்று அல்ல 
இந்த சமூகம் இப்படி இருக்கிறதே என்று 

பெண்ணையும் 
பெண் அங்கத்தையும் ஒரு விளையாட்டுப் பொருளாய் 
சீர்குலைக்கும் இந்த கேவல மனிதர்களுக்கு  ஒரு தண்டனை 
என் எண்ணத்தில் உதித்தது

''ஆணின் மர்மத்தை அறுத்து எரிவதே அந்த தண்டனை ''


இந்த படத்தின் கதையை சொன்னால் பார்க்கப் போகும்போது அதன் 
உள்ளுணர்வு நமக்கு கிட்டாமல் போய்விடும் 

படத்தின் பெயர் 

 22 Female Kottayam

கோட்டயம் பெண் இருபத்தி இரண்டு வயது (மலையாளப் படம் )

ரீமா கல்லிங்கல்
பாஹத் பாசிசில் -(காதலுக்கு மரியாதை இயக்குனர் பாசில் அவர்களின் மகன் )
பிராதாப் போத்தன்-(நீண்ட நாள் கழித்து மலையாளத்தில் நடித்த படம் )

இயக்குனர் ஆஷிக் அபு 


இந்த படத்தில் 
வசனங்களும் ,காட்சிகளும் கவனிக்கப் படவேண்டியவை 
அப்போதுதான் படமும் படத்தில் கருவும் உணர முடியும்

தொடக்கம் முதல் இறுதிவரை 
இருக்கையில் அமர்ந்தே நம்மை பார்க்க வைக்கிறது படம் 

கடைசியாக 
இது வெறும் ஒரு படமல்ல 
தவறு செய்பவருக்கும் செய்யப் முனைபவருக்கும் 
ஒரு பாடம் 

இது
ஒரு படத்தை பார்க்க செய்வதற்கான ஊக்கபடுத்துதல் அல்ல 
ஒரு விழிப்புணர்வு மட்டுமே 


அவன் இவள் முத்தங்கள் (அ.நா.கா 6)அவனின் 
தாராளமும் 
இவளின்  
கஞ்சத்தனமும் 
இன்றும் தொடர்கிறது   அவன் இவளின் 
முத்தங்களில் 

சற்றென
கொட்டித்தீர்க்கும் 
பெரும் மழையாய்  அவன்  முத்தங்கள் 
விட்டு விட்டு பெய்யும் 
அடை மழையாய் இவள்  முத்தங்கள் 

மண்ணை 
ஈரப்படுத்துவதில்லை 
பெரும் மழை

மண்ணையும் 
உயிரையும் ஈரப்படுத்துகிறது 
அடை மழை 

அவனின்  
உயிர் உலரும் தருணங்களில் 
நீரூற்றி  உயிரூட்டுகிறது 
இவளின் முத்தத்தின்   எச்சத்தின் 
ஈரம் 

அவனின் 
முத்த தவமும் 
இவளின் முத்த வரமும் 
இன்று தொடர்கிறது அவன் இவளின் 
காதல் ஆலையத்தில் 


Tuesday, July 24, 2012

வெள்ளி மெட்டி (அ.நா.கா 5)

 கட்டியவள் 
கால் சிறு விரலுக்கு 
வெள்ளி மெட்டி 

இவன் 
நெஞ்சில் பொத்திவைத்த 
அவளுக்காக இவனின் 
ஆசை 


புது மெட்டி 
விரல் கடித்து ரத்தம் சொட்டி விழ 
ரண வலி  உடையாத மௌனமாய்  
அவள் 

 இவன் 
மெட்டியை கழற்ற 
 அவளோ  வலியில் துடிதுடிக்க 
பிடை பிடித்து  இவன் நெஞ்சம் 

அவளை  
காயப்படுத்தும் 
 இவனின் ஆசைகளை 
தூக்கில் ஏற்றினான் இவன் 


அவள் இவன் 
இருவரையும் 
தன் கூர்மையால் காயப்படுத்தியது 
அன்பு 

Monday, July 16, 2012

நான்காம் முடிச்சு
அவன் 
பெண் பித்தன் 
சபையிலும் ரகசியமாகவும் 
வெறும் வாயை மெல்லும் ஊர் 


அவ 
முந்தானை முடிச்சில் புருஷன்  
நையாண்டி சொல்லில்
எச்சம் இறக்கும் தோழிகள் 

''மை''...
வசியக்காரி .....
வெட்கையில் புழுங்கும் ரத்தபந்தம் 
புகையில்  ஊதும் உறவுகள் 


துரத்தும் 
சுடுச்  சொற்கள் 
ஒளித்தும் ஒளிந்தும்  கொள்கிறார்கள் 
நவ தம்பதிகள் 


மூன்று 
முடிச்சுக்குள்ளே 
வாழ்கையை நகர்த்தியவர்களில்  
நீளுகிறது நான்காம் முடிச்சின் மேலான 
பொறாமை 


மூன்று முடிச்சில் 
உறவில் நுழையும் உறவுகளின் 
இதயங்கள்  இட்டுக்கொள்ளும் காதல் முடிச்சுதான் 
நான்காம் முடிச்சு 


இன்றும் 
பெருண்பாண்மையோரில்  நீளுகிறது 
மூன்று முடிச்சின் கடமை வாழ்க்கை 


ரசித்து 
சுவையுங்கள் 
நான்காம் முடிச்சின் 
ருசியை 

Thursday, July 12, 2012

அவள் இவள் மற்றொருவள்(அ .நா .கா 4)
இவள் 
இவள் அல்ல அவளும் அல்ல 
இவள் மற்றொருவள் 

முதல்  
காதல் ,முத்தம் ......, ......, ......
இவனில் பதித்த இவள்தான் இந்த 
மற்றொருவள் 


அவள் 
ஒரு சிறு கதை 
இவள் தொடரும் நெடுங்கதை 
பிள்ளையார் சுழி மற்றொருவள் 

பால்யத்தில் 
காளைப் பருவத்தில் 
இவனின் நாட்களில் நிறைந்து  நின்றவள் 
மற்றொருவள் 

விதி 
இவனில் பிரித்து 
மற்றொருவனின் அடையாளமாய் 
மற்றொருவள் 

தன்பின் 
எச்சில் பால் குடித்தவளை
இவனில் கோர்க்க மற்றோருவளின் தந்திரம் 
அதையும் உடைத்து  இறை விதி 

இவனில் 
அவள் வந்து போனாள்
இவளும் உயிரில் தொடர்கிறாள் 
இவனில் இவள் மட்டும் தொடர்கிறாள் 
இவனரியாது இவனுள் மற்றொருவள் 

அவள் 
இவளை மற்றவளுக்கு தெரியும் 
அவளுக்கும் இவளுக்கும் இன்றும்  தெரியாது 
மற்றொருவளை 

இவளிடமும் 
உறவுகளிடத்திலும் 
இவனின் விசாரிப்புக்களுமாய் 
மற்றொருவனின் உறவில் தொடர்கிறாள் 
மற்றொருவள் 

அவள் மாயை 
இவள் ஆன்மா 
மற்றொருவள் ''வடு''


Wednesday, July 11, 2012

நிர்வாணம்நிர்வாணம் 
சொல்லில் சொல்லப்படலில்
வெட்கப்படுகிறார்கள் 
இல்லையேல் முகம் சுளிக்கிறார்கள் 

இங்கு 
யாரும் எதுவும்   நிர்வாணமாய் இல்லை 
எதை எவர் நிர்வாணமாக உட்கொள்கிரார்களோ 
 அதிலும்  நிர்வாணம் இல்லை 

ஆடையற்ற 
ஆணிலும் பெண்ணிலும் கூட 
 நிர்வாணம் இருப்பதில்லை  இல்லை 
அவர்கள் வெட்கத்திற்கு திரை(மறை) இடுகையில் 
வெறும் உடல் மட்டும் எப்படி 
நிர்வாணமாகும் 

நிர்வாணத்தை 
 பாலின உடல்களில்  மட்டுமே 
இங்கு கற்பிக்கிறார்கள் அடையாளப் படுத்துகிறார்கள் 
 நிர்வாணத்தை அறியாதவர்கள் 

ஒரு 
சொல்லில் திரை(மறை )விலகுகையில் 
பச்சை ,கொச்சை சொல் என்பார்கள் 
எத்துனைபேர் திரைமறை இடுகிறார்கள் 
சொல்லில்கூட 

சொல்லில் 
செயலில் 
பொருளில் 
ஏன்  உருவமற்றதிலும் உண்டு 
நிர்வாணம் 

தன் 
நிர்வாணத்தை உணர்ந்தபோதுதான் 
மரக் கிளைகளில் தன்  உடல் போர்த்தினான் 
ஆதிமனிதன் 

உங்களை 
நீங்கள் போர்த்திக் கொள்ளுங்கள் 
போர்த்தல் என்தின் பொருள் 
உடலுக்கு மட்டுமல்ல 

அகத்தில் 
நிர்வாணமாய் இருப்பவன்(ள் )
அவனி(ளி)ன்ஆடை போர்த்தலில்  மறைந்திடுமா 
புரத்தின் நிர்வாணம் 

இங்கு 
திரை மறையை அகத்தில் இடாமல் 
புறத்தில் மட்டுமே  போர்த்திக் கொள்கிறார்கள் 
நிர்வாண மனிதர்கள் 

நாம் 
நம் நிர்வாணத்தை உணர்கையில் 
முதலில் போர்த்திக்கொள்வோம் 
உள்ளத்தை பின் 
....லை

Thursday, July 5, 2012

சுமக்கும் இறைவன்

இழுத்து 
பிழிந்த கரைவைக்காரன் 
இறுதிச் சொட்டில் உதிரம் 
பிந்திய நாளில் 
கோவில் ஒன்றுக்கு நேர்ச்சையானது 
முதிச்சியில் மடி வற்றிய 
பசு 
 
தந்தையின் மரணம் 
பிள்ளைகளின் 
சொத்து பாகப்பிரிவு 
யார் சுமப்பது  வீட்டுக்கு  வெளியில் 
பெற்ற தாய் 

வீதியில் 
கையேந்திய பணத்தில் 
 பழம் வாங்கி உண்டு முதியவள்  தோலை வீச 
பசியில் ஓடிவந்த  வந்த பசுவோ 
அதை உண்டது 

பாரம் 
உறவுகளின் கைவிடல் 
உணவுப் படியளந்து இன்னும் அவர்களை சுமக்கிறான் 
இறைவன் 
 

அன்பும் விருதும்
மனிதனுக்கு
மனிதன் அலங்கரித்துக்கொள்ள
இறைவன்  அருளிய வரப்பிரசாதம்
அன்பு


இறைவனின்
அன்புக் கருணையின் ஒருதுளியே
இவ்வுலகத்தின் அன்பு


அந்த
இறையன்பை ருசிக்க
நாம் உறவுக்குள் விதைப்போம்
நல் அன்பை


அன்பை
நாம் சிறையிடுகையில்
நம்முள் விலங்கை அவிழ்க்கிறது
மிருகம்


புன்னகை 
விதிப்பில் நல் எண்ண நீரூற்றலில்
நிழல் தரும் விருட்சமாகிறது 
அன்பு 


ஒரு 
உண்மையை சொல்லனும்ன்னா (யாரும் தப்பா நினைக்க வேண்டாம் )
விருது அப்படின்னா  எனக்கு ஒவ்வாமை (அலர்ஜி )
அதனால்தான் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொண்டத்தில்லை 
என்னை அழைப்பவர்களிடம் எப்படி சொல்வது விருது என்றாலே பயம் என்று ம் :)

பால்யத்தில் 
படிப்பிலும் சரி சிறு சிறு பந்தயங்களிலும் சரி 
தற்கால வாழ்க்கையிலும் சரி  இடை நிலையிலேயே நிற்கிறேன் 

முயன்று 
ஜெயிப்பவனின் புனைகையும் 
தொற்பவனின் கண்ணீரையும் 
 இடைநிலையில் நிற்கும் நான் உணர்ந்ததுண்டு 


இன்று 
பணம் ,பொருள்  ஈட்டி 
 சுயமாய் மகுடம் சூடிக்கொள்கிறார்கள் 
இன்றைய நவ நாகரிகமும் இதுதான் 

விருந்து 
வயிறு நிறைக்கும் 
விருது 
மனது நிறைக்கும் 
முகநூலில் தோழி மு. சரளா சொன்னது 

அன்பின் தங்கை (நீரு) நிரஞ்சனா வின் அன்பு ''விருது'' 
கொடுத்த இந்த அன்புப் பரிசை நிறைந்த மனதுடன் ஏற்றுக்கொண்டும் 
அதைஎன் அன்பின்  சகோதரிகளுக்கு பகிர்ந்துகொள்கிறேன் 

மனித 
சமூகம் சார்ந்த நிறைய நல்ல கட்டுரைகள் ,கவிதைகளை 
தன் மழை கழுவிய பூக்கள் வலையில் எழுதும் 

தன் ஈழ மண்ணின் 
நிஜங்களை மன்வாசையியுடன்  
என் இதயம் பேசுகிறது வலையில் எழுதும்  
என் மருமகள் எஸ்தர் சபி


குடும்பம் 
சமூகம் ,இயற்கை இப்படி 
தான் கோர்க்கும் எழுத்துக்களில் நம்மையையே 
ஊருக்கு உரைக்குகிறார் 

ஒவ்வொரு முறையும் 
கவிதை வாசிக்க செல்லும்போதும் 
நம் புருவத்தையும் சிந்தனையையும் 
தன் வரிகளால் உயர்த்த வைக்கிறார் 
சகோ ரேவா  

இசையால் 
பின்னி குளைக்கப்படாத பாடல்கள் 
இதழில் உச்சிர்க்கும்போதே தேனாய் தித்திக்கும் 
 சகோ ரூபிக்க அம்பாடியாள்

உருவமற்ற 
அன்பு மிகக் கனமானது 
உருவமுள்ள இந்த விருதும் கனமானதே ம்(:
அதலால் பகிந்து விடுங்கள் 
அன்பையும் விருதையும் 


அன்பை விதையுங்கள் 
நல் உறவுகளை அறுவடை செய்யுங்கள் 

Monday, July 2, 2012

அவளுக்காக நான்

வாழ்த்து 
சொல் மலரை வீசுகிறார்கள் 
உறவும் நட்பும் 

என் 
பிறப்பும் இந்த வாழ்த்தும் 
அவளுக்கு உரியது 

என்னை 
என் ஜென்மத்தை அவளில் 
அர்த்தப் படுத்துகிறான் இறைவன் 

 உனக்காக 
அல்ல அவள் அவளுக்காக  நீ 
அவளில் ஒட்டப்பட்ட என் ஆன்மாவின் 
இறை வெளிச்சம் 

அவளுக்கான 
ஜென்மத்தில்  உறவுகள் நிமித்தம் (வழி )
அவள் மெய் 

காலம் 
போர்த்தும் பருவம் 
அதில்  நித்தம் இறக்கிறேன்   நான் 
உயிர்  செருகுகிறாள் அவள் 

இன்றும் 
குழந்தை நான் 
என் தாய்க்கு பின் அவளுக்கும் 

அவளால் 
வாழ்த்தப் படுகிறேன் நான் 
அவளை வாழ்த்துகிறது 
என் ஆன்மா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...