Wednesday, July 25, 2012

22 Female Kottayam

இது 
நான் ரசித்த என்னை பாதித்த  திரைப்படம் அல்ல 
மாறாக இந்த கதைக்கு இப்படித்தான் முடிவு 
இருக்கமேண்டும் என்று எதிபார்த்துக் கொண்டே பார்த்த படம் 

நம் சமூகத்தில் 
முந்திய காலத்தைவிட இந்த நவ உலகில் 
ரெம்பவே கீழ்த்தரமாய் பெருகிக்கொண்டு இருக்கிறது 
பெண் மீதான ஆணின் பாலில் பலாத்காரங்கள் 

ஒரு நாளிதழை  எடுத்து வாசித்தால் ஊடகத்தை திறந்தால்
அகம் குமட்டும் கீழ் தரமான நிகழ்வுகள் 
ச்சீ... இந்த சமூகத்திலா நாமும் வாழ்கிறோம் என்ற உவப்பு ஏற்பட்டதுண்டு பலமுறை 

ஒன்றை குறிப்பிட்டு சொல்ல மனம் தயங்குகிறது 
எத்தனையோ நிகழ்வுகள் 

ஒரு சிசுவில் கூட காமம் தேடிய தந்தை 
மிகச் சதரானமாய் ஊடங்களில் காட்டபடுகிறது 
அதையும் அண்ணாந்து பார்த்து ,கேட்டு விட்டு பின் அதை அப்படியே மறந்து விடுகிறது இந்த கேடுகெட்ட சமூகம் 

கிணற்றில் 
ஆற்றில் 
மலை அடிவாரத்தில் 
புதரில்  பாதி எறிந்த உடல் 
இது எல்லாம் பாலில் பலாத்தகாரம் செய்யபட்டு கொல்லப்பட்ட  மூன்று முதல் பத்து வயதுள்ள குழந்தைகள் 

நம் சமூகம் எத்தனை கேவலம் என்றால்...! 
ஒரு கொச்சையான எழுத்தையோ பொருளையே கண்டால் உடனே படை திரட்டுகிறது இந்த நவ கலிகால சமூகம் 

நாரீகம்... நாகரீகம் ...
எங்கும் எதிலும் நாகரீகம் இப்போ அந்த நாகரீகங்கள் அநாகரீகமாய் 
நம்மை நம் உறவுகளை நம் சமூகத்தை கொன்று தின்று கொண்டு இருக்கிறது 
இதுபோன்ற 
சமூக அவலங்களை நான் பலமுறை கிறுக்கி இருக்கிறேன் 
இதில் எதுவும் என் சொந்த கற்பனை அல்ல 
மாறாக இந்த சமூகத்தில் நிகந்தவைகள் தான் இவைகள் 

ஆனால் அந்த கிறுக்கல்கள் கவனிக்கப்டமாலே இருந்தது 
அதில் எனக்கு வருத்தம் இருந்தது  யாரும் வாசிக்க வில்லையே என்று அல்ல 
இந்த சமூகம் இப்படி இருக்கிறதே என்று 

பெண்ணையும் 
பெண் அங்கத்தையும் ஒரு விளையாட்டுப் பொருளாய் 
சீர்குலைக்கும் இந்த கேவல மனிதர்களுக்கு  ஒரு தண்டனை 
என் எண்ணத்தில் உதித்தது

''ஆணின் மர்மத்தை அறுத்து எரிவதே அந்த தண்டனை ''


இந்த படத்தின் கதையை சொன்னால் பார்க்கப் போகும்போது அதன் 
உள்ளுணர்வு நமக்கு கிட்டாமல் போய்விடும் 

படத்தின் பெயர் 

 22 Female Kottayam

கோட்டயம் பெண் இருபத்தி இரண்டு வயது (மலையாளப் படம் )

ரீமா கல்லிங்கல்
பாஹத் பாசிசில் -(காதலுக்கு மரியாதை இயக்குனர் பாசில் அவர்களின் மகன் )
பிராதாப் போத்தன்-(நீண்ட நாள் கழித்து மலையாளத்தில் நடித்த படம் )

இயக்குனர் ஆஷிக் அபு 


இந்த படத்தில் 
வசனங்களும் ,காட்சிகளும் கவனிக்கப் படவேண்டியவை 
அப்போதுதான் படமும் படத்தில் கருவும் உணர முடியும்

தொடக்கம் முதல் இறுதிவரை 
இருக்கையில் அமர்ந்தே நம்மை பார்க்க வைக்கிறது படம் 

கடைசியாக 
இது வெறும் ஒரு படமல்ல 
தவறு செய்பவருக்கும் செய்யப் முனைபவருக்கும் 
ஒரு பாடம் 

இது
ஒரு படத்தை பார்க்க செய்வதற்கான ஊக்கபடுத்துதல் அல்ல 
ஒரு விழிப்புணர்வு மட்டுமே 


30 comments:

 1. உங்களின் ஒவ்வொரு வரியுமே பாடத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது சார்...

  ReplyDelete
 2. வணக்கம் அண்ணா !

  நீண்ட நாளுக்கு பின் வரேன் ...
  ப்லாகில் நிறைய மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன போலும் ...  இன்னும் இந்த மாறி நடந்து தானே இருக்குது..

  என்ன சொல்ல ...சின்ன பிள்ளைகள் ரொம்ப கஷ்டம ....
  நிறைய பேரு சின்ன வயசுல பக்கத்துவீடு ஏன் தெரிஞ்சவங்க சொந்தக் காரங்க ல பதிக்க பட்டு இருப்பாங்க ...சின்ன பிள்ளைகள் வெளிய எப்படி சொல்லுரதுன்னு தெரியாம சொல்லாம விட்டுருவாங்க ..

  நாம தான் குட்டி பிள்ளைகள் எல்லாம் பத்திரமா பார்த்துக்கணும் ....


  படம் பார்க்க முடியாது நாளும் நல்லா கருத்து சொல்லி இருக்கீங்க அண்ணா ,,,

  ReplyDelete
  Replies
  1. கலை
   எப்படி இருக்க நலமா

   கருத்துக்கு நன்றி

   Delete
 3. நன்றி...இப்பவே யூ ட்யூப்ல தேடப்போறேன்.நன்றி செய்தாலி !

  ReplyDelete
  Replies
  1. உடனே பாருங்கள்
   கருத்தை சொல்ல மறக்கவேண்டாம்

   Delete
 4. நல்ல படத்துக்கான ஒரு பகிர்வு.
  வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. அண்ணனா ...?

   தோழரே..
   வயதில்
   இளையவன் நான்

   Delete
 5. மனித உருவில் உலாவும் அந்த மிருங்கங்கள்.., கொல்லப்படுவது கூட குறைந்தபட்ச தண்டனையே என் அகராதியில்!

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றபட்டாலே போதும்
   கொலைகள் அவசிப்படாது நண்பா

   Delete
 6. பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே ...
  பார்த்தவிட்டு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என் கருத்தை ..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா

   Delete
 7. விரைவில் பார்த்துவிடுகிறேன்.

  ReplyDelete
 8. ungal kopam niyaayamaanathu....

  ketteengale oru kelvi-
  kochai vaarthaikku ethirppu

  kochai nadathaiku....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா

   Delete
 9. நிச்யமாய் உச்சபட்ச தண்டனை கிடைக்கவேண்டும்.பகிர்விற்கு நன்றி.நியாயமான உளக்குமுறல் சொந்தமே!சந்திப்போம்.!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சொந்தமே

   Delete
 10. என்னாச்சு அன்பரே ஏகப்பட்ட எழுத்து பிழைகள் கவனித்தீர்களா //நாளிதை,புதலில்// தவறெனில் மன்னிக்க

  ReplyDelete
  Replies
  1. கவனித்தேன் திருத்தி விட்டேன்
   மிக்க நன்றி நண்பா

   Delete
 11. இது போன்ற சமூக அவலங்கள் எப்பொழுதிலிருந்து முளை விடுகின்றன?எதற்கப் புறமாக?நமக்குத்தெரிந்து இது சட்டென சில வருடங்களில் முளைவிட்டதுதானா? இப்படிமுளை விடுமளவு விஷவிதைகளை தூவியது யார்?எனக்குத்தெரிந்து ஒரு செய்திப்பத்திரிக்கையின் பத்துபக்கத்தையும் வரிவிடாமல் படிப்பவர்கள் அதிகம் பேசுகிற விசயம் கள்ளக்காதல்பற்றியே?அது தவிர விபத்து,கொலை,கொள்ளை,,,,,,,எகஸட்ரா.எட்ஸட்ரா/ஏன் செய்தாலி சார்,இது தவிர ஒரு சமூகத்தில் வேறு எதுவுமே இல்லையா செய்தியாகப் போடுவதற்கு?ஒரு நல்ல புத்தகம்,ஒரு நல்ல செய்தி,ஒரு நல்ல கவிதை,ஒரு நல்ல கட்டுரை,ஒரு நல்ல விவாதம்,ஒரு நல்ல அறிவியல் விஷயம்,,,,,,,,,,,,என எத்தனை போடலாம்.அப்படி போடுகிறவைகளை படிக்கும் போது மனம் பண்படும் தானே?அப்படி பண்படும்போது இது மாதியான கண்றாவிகள் நடப்பது குறையும்தானே?

  ReplyDelete
 12. கண்டிப்பா
  உங்கள் கருத்தை ஆதங்கத்தை உணர்கிறேன்
  மிகச் சரியாக சொன்னீர்கள்

  இந்த
  நிலை நம் சமூகத்தில் மாற வேண்டும்

  சிறந்த கருத்துக்கு மிக்க நன்றி சார்

  ReplyDelete
 13. நோன்பு மாதத்தில் படம் பார்க்கிற ஐடியா இல்லை மன்னிகவும்
  உங்கள் விமர்சன போக்கு அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக நல்லதுதான் நோன்பை

   நுனுக்கமாக கடைப்பிடியுங்கள்...

   Delete
 14. படம் பார்க்க கிடைத்தால் மிக்க சந்தோஷம்

  யுடியூப்பில் கிடைக்குமா அங்கிள்...

  ReplyDelete
 15. நல்ல திறனாய்வு
  வாழ்த்துக்கள்  வானம் கண்மூடியதால்
  மேகம் இருட்டானதோ
  மேகம் கைவிட்டதனால்
  மழை நீர் நிலம் தொட்டதோ

  பூமி அணைக்காததால்
  வெள்ளம் நதி சென்றதோ
  நதிகள் வளைவென்றதால் - அது
  வழுக்கி கடல் சென்றதோ

  கடலில் அலை செல்வதால் - என்
  காதலும் அலைகின்றதோ
  அலைகள் கரை தட்டுவதால் - நான்
  கரையில் காத்து நிற்பதோ

  ReplyDelete
 16. தினம்தோறும் கொடூரச்செய்திகள்தான்.

  படம் முடிந்தால் பார்க்கின்றேன்.

  ReplyDelete
 17. நாகரீகம் என்ற பெயரில் பல அநாகரீகங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதைத்தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். வாய்ப்பு கிடைத்தால் படம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 18. நல்ல பதிவு. அண்மையில் இவ்வாறான கோர சம்பவம் ஒன்று இலங்கையிலும் நடைபெற்றது. இந்தக் கொடுமைகள் எல்லாம் என்று தீருமோ? நமது தளத்துக்கும் வரவேற்கிறேன்.
  http://newsigaram.blogspot.com

  ReplyDelete
 19. நியாயமான உணர்வு. நான் படங்கள் பார்ப்புது குறைவு. ஆயினும் விவரத்திற்கு நன்றி சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...