Tuesday, July 24, 2012

வெள்ளி மெட்டி (அ.நா.கா 5)





 கட்டியவள் 
கால் சிறு விரலுக்கு 
வெள்ளி மெட்டி 

இவன் 
நெஞ்சில் பொத்திவைத்த 
அவளுக்காக இவனின் 
ஆசை 


புது மெட்டி 
விரல் கடித்து ரத்தம் சொட்டி விழ 
ரண வலி  உடையாத மௌனமாய்  
அவள் 

 இவன் 
மெட்டியை கழற்ற 
 அவளோ  வலியில் துடிதுடிக்க 
பிடை பிடித்து  இவன் நெஞ்சம் 

அவளை  
காயப்படுத்தும் 
 இவனின் ஆசைகளை 
தூக்கில் ஏற்றினான் இவன் 


அவள் இவன் 
இருவரையும் 
தன் கூர்மையால் காயப்படுத்தியது 
அன்பு 

30 comments:

  1. மெட்டியின் மேன்னை தெரிகிறது....

    உங்கள் கவிகளில் அதிகம் அவன் இவன் அவள் இவள் போன்ற சொற்கள் அதிகம் உலாவுவதை என்னால் காணமுடிகிறது... என்மோ புரியவில்லை....

    ReplyDelete
    Replies
    1. அதில்
      ஒரு சின்ன ரகசியம்
      ஒளிந்து இருக்கிறது சபி

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி தோழரே

      Delete
  3. நல்ல கவிதை சார் !
    அன்பு இருந்தால் மட்டும் போதுமே ! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. இதைச் சொல்லிக்கொண்டே ஒவ்வொருநாளும் காலைத்தொட்டுக் காதல்தான் !

    ReplyDelete
    Replies
    1. தன் கூர்மையால் காயப்படுத்தியது அன்பு

      அன்பின் ஆட்சி !

      Delete
    2. காயம் ஆருவதுற்கு
      ஒருவாரம் ஆச்சு
      இன்னும் ஆறாத காயமாய் ....

      நம் ஆசைகள்
      நம்மவங்க்ளை காயபடுத்துபோது
      அவங்களைவிட நமக்குத்தான்
      வலி இருக்கும்

      Delete
  5. அவளின் மேல் கொண்ட
    ஆசைகளை அவிழ்க்கவும்
    முடியாமல் .........

    இவளின் மீது கண்ட பிணைப்பை
    இறுக்கவும் முடியாமல் .......

    இருதலை கொள்ளியாய்
    எரிகிறது இவனின் மனம் .........

    அருமை செய்தாலி

    நினைவுகள்
    அழிக்க முடியாத
    கோலங்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிதையாய்
      அழகா சொல்லிடீங்க தோழி

      ஆனால்
      அந்த நிகழ்வையும்
      ஒரு வாரத்தையும்
      இன்னும் மறக்க முடியவில்லை

      Delete
  6. நல்ல தரமான கவிதை நண்பரே (TM 1)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழரே

      Delete
  7. அன்பின் இறுக்கத்தை அழகா சொல்லிட்டீங்க சகோ..

    ReplyDelete
    Replies
    1. ம் (: மிக்க நன்றி சகோ

      Delete
  8. மெட்டிக்குள் மெதுவாக கீதம் கேட்கிறது.

    ReplyDelete
  9. ஆறாத காயம் தான்.
    கவிதையில் ஆற்றிவிட்டீர்கள்....
    வாழ்த்துக்கள் தோழரே.

    ReplyDelete
    Replies
    1. கவிதையில் ஆற்றினாலும்
      இன்னும் ஆறவில்லை
      இதயத்தில்

      ம்(: மிக்க நன்றி

      Delete
  10. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  11. //விரல் கடித்து//

    ரசித்தேன் அன்பரே இவ்வரியை! தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  12. அவள் இவன்
    இருவரையும்
    தன் கூர்மையால் காயப்படுத்தியது
    அன்பு //ஆஹா...!

    ReplyDelete
    Replies
    1. ம் (:
      ரசித்தமைக்கு நன்றி சகோ

      Delete
  13. Replies
    1. ம் (:
      வருகைக்கு மிக்க நன்றி கவிஞரே

      Delete
  14. ''...அவளை
    காயப்படுத்தும்
    இவனின் ஆசைகளை
    தூக்கில் ஏற்றினான் இவன் ...''
    இது தான் அன்பு .வெல்க அன்பு. நன்று நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    Well come to my site.

    ReplyDelete
    Replies
    1. ம் (:
      மிக்க நன்றி தோழி

      Delete
  15. அம்பு அன்பான வித்தை அழகு.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...