Monday, July 2, 2012

அவளுக்காக நான்





வாழ்த்து 
சொல் மலரை வீசுகிறார்கள் 
உறவும் நட்பும் 

என் 
பிறப்பும் இந்த வாழ்த்தும் 
அவளுக்கு உரியது 

என்னை 
என் ஜென்மத்தை அவளில் 
அர்த்தப் படுத்துகிறான் இறைவன் 

 உனக்காக 
அல்ல அவள் அவளுக்காக  நீ 
அவளில் ஒட்டப்பட்ட என் ஆன்மாவின் 
இறை வெளிச்சம் 

அவளுக்கான 
ஜென்மத்தில்  உறவுகள் நிமித்தம் (வழி )
அவள் மெய் 

காலம் 
போர்த்தும் பருவம் 
அதில்  நித்தம் இறக்கிறேன்   நான் 
உயிர்  செருகுகிறாள் அவள் 

இன்றும் 
குழந்தை நான் 
என் தாய்க்கு பின் அவளுக்கும் 

அவளால் 
வாழ்த்தப் படுகிறேன் நான் 
அவளை வாழ்த்துகிறது 
என் ஆன்மா

17 comments:

  1. நல்ல வாழ்த்து மடல்... எனது வாழ்த்துக்களையும் அவங்களிடம் சேர்த்து விடுங்கள் நண்பரே

    ReplyDelete
  2. தோழா, அந்த புகைப்படத்தை சற்று முன் பார்த்தேன் சேமித்தேன் அதுக்கு என்ன மாதிரி கமெண்டலாம்னு ராத்திரி யோசிக்கல்லாம் அப்ப தானே மூடுல இருப்போம்.. ஹி ஹி

    என் கடையில் தெரிந்தவங்க பக்கத்தில் உங்களின் பதிவு கண்டு உங்க வலைப்பூவை பார்த்தால் அதிசயம் அந்த படம் அதுக்கு அழகான வரிகளில் அருமையான வாழ்த்து மடல் - வியப்பு

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. unmai sako!

    thaayikku naam makan!

    oru thaay kooduthalaaka-
    nam makal!

    arumai!

    ReplyDelete
  4. //இன்றும்
    குழந்தை நான்
    என் தாய்க்கு பின் அவளுக்கும் //

    அழகு.

    ReplyDelete
  5. அருமை சார் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. அருமையான வாழ்த்து கவிதை.

    ReplyDelete
  7. // நித்தம் இறக்கிறேன் நான்
    உயிர் செருகுகிறாள் அவள் //அருமை அன்பரே உங்கள் கவிதையின் ரசிகன் நான்

    ReplyDelete
  8. நாங்கள் பிறக்கும்போது அம்மாவும் இறந்து பிறக்கிறாள்.அழகான கவிதை.இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே !

    ReplyDelete
  9. இன்றும்
    குழந்தை நான்
    என் தாய்க்கு பின் அவளுக்கும்

    அற்புதம்.

    ReplyDelete
  10. ஒவ்வொறு நாளும் அவள்
    உங்களுள் பிறந்து கொண்டு தான் இருக்கிறாள் தோழரே.

    கவிதை அருமைங்க.

    ReplyDelete
  11. அருமை அங்கிள் நல்ல கவிதை....

    ReplyDelete
  12. மிக நல்ல கவிதை ஒன்றை வாசித்த திருப்தி எனக்கு.

    எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். என் தளத்துக்கு வந்து இந்த விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்தும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    http://nirusdreams.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
  13. இப்படி ஒரு கவிஞனை
    எங்களுக்கு ஈன்றளித்த அந்தத் தாய்க்கு
    என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    Vetha. Elangathilakam.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...