Thursday, July 5, 2012

அன்பும் விருதும்
மனிதனுக்கு
மனிதன் அலங்கரித்துக்கொள்ள
இறைவன்  அருளிய வரப்பிரசாதம்
அன்பு


இறைவனின்
அன்புக் கருணையின் ஒருதுளியே
இவ்வுலகத்தின் அன்பு


அந்த
இறையன்பை ருசிக்க
நாம் உறவுக்குள் விதைப்போம்
நல் அன்பை


அன்பை
நாம் சிறையிடுகையில்
நம்முள் விலங்கை அவிழ்க்கிறது
மிருகம்


புன்னகை 
விதிப்பில் நல் எண்ண நீரூற்றலில்
நிழல் தரும் விருட்சமாகிறது 
அன்பு 


ஒரு 
உண்மையை சொல்லனும்ன்னா (யாரும் தப்பா நினைக்க வேண்டாம் )
விருது அப்படின்னா  எனக்கு ஒவ்வாமை (அலர்ஜி )
அதனால்தான் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொண்டத்தில்லை 
என்னை அழைப்பவர்களிடம் எப்படி சொல்வது விருது என்றாலே பயம் என்று ம் :)

பால்யத்தில் 
படிப்பிலும் சரி சிறு சிறு பந்தயங்களிலும் சரி 
தற்கால வாழ்க்கையிலும் சரி  இடை நிலையிலேயே நிற்கிறேன் 

முயன்று 
ஜெயிப்பவனின் புனைகையும் 
தொற்பவனின் கண்ணீரையும் 
 இடைநிலையில் நிற்கும் நான் உணர்ந்ததுண்டு 


இன்று 
பணம் ,பொருள்  ஈட்டி 
 சுயமாய் மகுடம் சூடிக்கொள்கிறார்கள் 
இன்றைய நவ நாகரிகமும் இதுதான் 

விருந்து 
வயிறு நிறைக்கும் 
விருது 
மனது நிறைக்கும் 
முகநூலில் தோழி மு. சரளா சொன்னது 

அன்பின் தங்கை (நீரு) நிரஞ்சனா வின் அன்பு ''விருது'' 
கொடுத்த இந்த அன்புப் பரிசை நிறைந்த மனதுடன் ஏற்றுக்கொண்டும் 
அதைஎன் அன்பின்  சகோதரிகளுக்கு பகிர்ந்துகொள்கிறேன் 

மனித 
சமூகம் சார்ந்த நிறைய நல்ல கட்டுரைகள் ,கவிதைகளை 
தன் மழை கழுவிய பூக்கள் வலையில் எழுதும் 

தன் ஈழ மண்ணின் 
நிஜங்களை மன்வாசையியுடன்  
என் இதயம் பேசுகிறது வலையில் எழுதும்  
என் மருமகள் எஸ்தர் சபி


குடும்பம் 
சமூகம் ,இயற்கை இப்படி 
தான் கோர்க்கும் எழுத்துக்களில் நம்மையையே 
ஊருக்கு உரைக்குகிறார் 

ஒவ்வொரு முறையும் 
கவிதை வாசிக்க செல்லும்போதும் 
நம் புருவத்தையும் சிந்தனையையும் 
தன் வரிகளால் உயர்த்த வைக்கிறார் 
சகோ ரேவா  

இசையால் 
பின்னி குளைக்கப்படாத பாடல்கள் 
இதழில் உச்சிர்க்கும்போதே தேனாய் தித்திக்கும் 
 சகோ ரூபிக்க அம்பாடியாள்

உருவமற்ற 
அன்பு மிகக் கனமானது 
உருவமுள்ள இந்த விருதும் கனமானதே ம்(:
அதலால் பகிந்து விடுங்கள் 
அன்பையும் விருதையும் 


அன்பை விதையுங்கள் 
நல் உறவுகளை அறுவடை செய்யுங்கள் 

11 comments:

 1. விருது பெற்ற உங்களுக்கும்
  உங்களிடமிருந்து விருதைப் பெற்ற ஐவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 2. அன்பின் அண்ணா... மகிழ்வுடன் நான் பகிர்ந்த விருதை ஏற்று உவப்புடன் அதைப் பகிர்ந்தளித்த உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியோட என் நன்றி.

  தென்றல் சசி அக்காவும். எஸ்தரும். அம்பாளடியாள் அவர்களையும் படித்திருக்கிறேன். மற்ற இருவரையும் இனி தெரிந்து கொள்கிறேன்.

  உங்களிடம் இருந்து விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!..பாராட்டுக்கள் சகோ .. விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள், விருது பெற்றமைக்கு!

  ReplyDelete
 5. விருது பற்றிய தங்கள் எண்ணம் எண்ணிடத்திலும் உண்டு நட்பே. விருது பெற்று அதை ஐவருக்கு பகிர்ந்தளித்த தங்களுக்கும் மற்ற சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 6. வாழ்த்துகள்

  ReplyDelete
 7. அன்பின் சகோ...தங்களின் விருதிற்கு மிகவே நன்றி.உண்மை சொல்வதென்றால் இந்த வலையுலக விருதுகள் எனக்குப்பரீட்சையமற்றவை..புதியவளான என்னை அங்கீகரித்து 2வது விருது வழங்கிய உங்களுக்கு மிகவே நன்றி..உங்களுக்கு என்இனிய வாழ்த்துக்கள்..வருதை பெற்ற அன்பின் சொந்தங்களுக்கு என் வாழ்த்துக்கள். சகோ நீருவிற்கும் என் நன்றிகள்.சந்திப்போம் சொந்தமே..!

  ReplyDelete
 8. மிக்க நன்றி சகோ சிறு இடைவெளியின் பின் இன்றே வலைத்தளம் வந்தேன், மிக்க நன்றி இந்த விருதுக்கு, நம் எழுத்துகளுக்கு பின்னான தட்டிகொடுத்தலாய் இந்த விருதுகள் இருப்பது என்பதில் எவ்வித தயக்கமும் இல்லை, உங்கள் அன்பில் நெகிழ்ந்தேன், நட்பின் விருது கொடுத்தமைக்கும், வாங்கிய ஏனைய சகோதர உறவுகளுக்கும் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 9. மிக்க நன்றி அங்கிள் தங்கள் அன்பு தந்த விருதுக்குஇ.... மிக்க நன்றி என்னை மருமகளாக்கி விட்டீர்களே.... hahahaha

  ReplyDelete
 10. அன்பை
  நாம் சிறையிடுகையில்
  நம்முள் விலங்கை அவிழ்க்கிறது
  மிருகம்

  அருமை...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...