Wednesday, July 11, 2012

நிர்வாணம்



நிர்வாணம் 
சொல்லில் சொல்லப்படலில்
வெட்கப்படுகிறார்கள் 
இல்லையேல் முகம் சுளிக்கிறார்கள் 

இங்கு 
யாரும் எதுவும்   நிர்வாணமாய் இல்லை 
எதை எவர் நிர்வாணமாக உட்கொள்கிரார்களோ 
 அதிலும்  நிர்வாணம் இல்லை 

ஆடையற்ற 
ஆணிலும் பெண்ணிலும் கூட 
 நிர்வாணம் இருப்பதில்லை  இல்லை 
அவர்கள் வெட்கத்திற்கு திரை(மறை) இடுகையில் 
வெறும் உடல் மட்டும் எப்படி 
நிர்வாணமாகும் 

நிர்வாணத்தை 
 பாலின உடல்களில்  மட்டுமே 
இங்கு கற்பிக்கிறார்கள் அடையாளப் படுத்துகிறார்கள் 
 நிர்வாணத்தை அறியாதவர்கள் 

ஒரு 
சொல்லில் திரை(மறை )விலகுகையில் 
பச்சை ,கொச்சை சொல் என்பார்கள் 
எத்துனைபேர் திரைமறை இடுகிறார்கள் 
சொல்லில்கூட 

சொல்லில் 
செயலில் 
பொருளில் 
ஏன்  உருவமற்றதிலும் உண்டு 
நிர்வாணம் 

தன் 
நிர்வாணத்தை உணர்ந்தபோதுதான் 
மரக் கிளைகளில் தன்  உடல் போர்த்தினான் 
ஆதிமனிதன் 

உங்களை 
நீங்கள் போர்த்திக் கொள்ளுங்கள் 
போர்த்தல் என்தின் பொருள் 
உடலுக்கு மட்டுமல்ல 

அகத்தில் 
நிர்வாணமாய் இருப்பவன்(ள் )
அவனி(ளி)ன்ஆடை போர்த்தலில்  மறைந்திடுமா 
புரத்தின் நிர்வாணம் 

இங்கு 
திரை மறையை அகத்தில் இடாமல் 
புறத்தில் மட்டுமே  போர்த்திக் கொள்கிறார்கள் 
நிர்வாண மனிதர்கள் 

நாம் 
நம் நிர்வாணத்தை உணர்கையில் 
முதலில் போர்த்திக்கொள்வோம் 
உள்ளத்தை பின் 
....லை

15 comments:

  1. அண்ணே வணக்கம்னே

    புரியுதுண்ணே.. சூப்பர் அண்ணே,

    ReplyDelete
  2. நிர்வாணம் அது அவரவர் பார்வையில் உண்டு......... நன்றாய் சொன்னீர்கள் நண்பா

    ReplyDelete
  3. நிர்வாணம் அதில் ஒன்றும் இல்லைதான் அங்கிள்...

    ஆதியில் யார் உடையுடன் இருந்தனர்...
    அது வெறும் நாகரீகத்தின் வளர்ச்சியே....

    அருமையான கவிதை...

    ReplyDelete
  4. அருமை அருமை
    அதிகம் சிந்திக்கச் செய்துபோகும்பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நிர்வாணத்திற்கு
    நிர்மலமாய் விளக்கும்
    நித்திலக் கவிதை....

    ReplyDelete
  6. நல்ல கவிதை படம் தான் ம்ம்

    ReplyDelete
  7. உங்களை
    நீங்கள் போர்த்திக் கொள்ளுங்கள்
    போர்த்தல் என்பதின் பொருள்
    உடலுக்கு மட்டுமல்ல ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

    அருமை சொந்தமே அழகாக சொல்லிப்போயுள்ளீர்கள் உங்கள் கருத்தை.!
    முதல்முதலாய் முடிவாய்!!!! ..!!!!

    ReplyDelete
  8. unmai thaan!
    sako...!

    arumaiyaa sonneenga!

    ReplyDelete
  9. அருமையான கருத்து நண்பரே... புத்தர் மனத்தின் நிர்வாணத்தினைக் குறிப்பிட்டு போதித்தார். உங்களின் கருத்துக்கள் சிறப்பு.

    ReplyDelete
  10. நாம்
    நம் நிர்வாணத்தை உணர்கையில்
    முதலில் போர்த்திக்கொள்வோம்
    உள்ளத்தை பின்
    உடலை.

    அற்புதம்.

    ReplyDelete
  11. நிர்வாணம் என்பது ஒன்றும் இல்லாதது அது ஒரு ஞானம் ...........அந்த நிலையை அடைவது எளிதல்ல ........எல்லாவற்றையும் துரத்தல் .......உறவில் இருந்து விடுபடுதல் ........உள்ளத்தில் இருந்து விலகுதல் .........எதுவும் இல்லாதவன் எதையும் என்னாதவன் .......அவன் மட்டுமே நிர்வாணமாய் இருக்க முடியும் உடலிலும் மனதிலும் ..........உங்கள் கவிதைகள் குறியீடுகளை கொண்டது ............வரவேகிறேன்

    ReplyDelete
  12. சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள்...
    அழகாக முடித்துள்ளீர்கள்...
    பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. நிர்வாணம் அழகு. பொய்யும் புரட்டும் போர்த்தாத மனதின் நிர்வாணம் அழகு. மனங்கவர்ந்த படைப்பு. பாராட்டுகள் செய்தாலி..

    ReplyDelete
  14. நிர்வாணம்.... மேகமற்ற நீலவானம்....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...