Thursday, July 12, 2012

அவள் இவள் மற்றொருவள்(அ .நா .கா 4)




இவள் 
இவள் அல்ல அவளும் அல்ல 
இவள் மற்றொருவள் 

முதல்  
காதல் ,முத்தம் ......, ......, ......
இவனில் பதித்த இவள்தான் இந்த 
மற்றொருவள் 


அவள் 
ஒரு சிறு கதை 
இவள் தொடரும் நெடுங்கதை 
பிள்ளையார் சுழி மற்றொருவள் 

பால்யத்தில் 
காளைப் பருவத்தில் 
இவனின் நாட்களில் நிறைந்து  நின்றவள் 
மற்றொருவள் 

விதி 
இவனில் பிரித்து 
மற்றொருவனின் அடையாளமாய் 
மற்றொருவள் 

தன்பின் 
எச்சில் பால் குடித்தவளை
இவனில் கோர்க்க மற்றோருவளின் தந்திரம் 
அதையும் உடைத்து  இறை விதி 

இவனில் 
அவள் வந்து போனாள்
இவளும் உயிரில் தொடர்கிறாள் 
இவனில் இவள் மட்டும் தொடர்கிறாள் 
இவனரியாது இவனுள் மற்றொருவள் 

அவள் 
இவளை மற்றவளுக்கு தெரியும் 
அவளுக்கும் இவளுக்கும் இன்றும்  தெரியாது 
மற்றொருவளை 

இவளிடமும் 
உறவுகளிடத்திலும் 
இவனின் விசாரிப்புக்களுமாய் 
மற்றொருவனின் உறவில் தொடர்கிறாள் 
மற்றொருவள் 

அவள் மாயை 
இவள் ஆன்மா 
மற்றொருவள் ''வடு''


14 comments:

  1. கவிதை நன்று. இரண்டு முறை படித்தேன்.

    ReplyDelete
  2. இவள் தொடரும் நெடுங்கதை .
    அழகு.

    ReplyDelete
  3. aval!
    ival!
    ena alaikazhithu vitteerkal!

    ReplyDelete
  4. இவள் சிறுகதை அவள் நெடுங்கதை ............

    இரண்டு கதைகளையும் பிறழாமல் எழுதும் எழுத்தாளன் ........

    திறமைமிக்கவனாக தான் இருக்க வேண்டும் ............

    உள்ளீடுகள் ........குறியீடுகள் ...............கண்களை அகலவிடாமல் யோசிக்க வைத்தது காட்சிகளை .......

    ReplyDelete
  5. உண்மையில் கவிதை என்ன சொல்ல வருகிறது என்று தெரிந்து கொள்ள நிறுத்தி நிதானமாக இரண்டு முறை படித்தேன். அருமை.

    ReplyDelete
  6. அருமை ஏதோ ஒரு கதை பொதிந்து கிடக்கிறது போல தோன்றுகிறது அங்கிள்....

    ReplyDelete
  7. அவள் மாயை
    இவள் ஆன்மா
    மற்றொருவள் ''வடு''ஃஃஃஃஃஃஃ
    இறுதி வரிகள் சொல்லமுடியாத ஈர்ப்பு.அருமை!

    ReplyDelete
  8. அவள் இவள் மற்றொருவள்.....ம்ம் ரசித்தேன்...சில நிமிடங்களுக்கு பின் புரிந்தேன்

    ReplyDelete
  9. கவிதை அருமைங்க தோழரே....

    (சூடு கண்ட பிறகு தானே வடு தெரியும்...
    அப்படியென்றால்.... இன்னொறுவள் என்று ஒருத்தி வருவாளா....)

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...