Monday, July 16, 2012

நான்காம் முடிச்சு




அவன் 
பெண் பித்தன் 
சபையிலும் ரகசியமாகவும் 
வெறும் வாயை மெல்லும் ஊர் 


அவ 
முந்தானை முடிச்சில் புருஷன்  
நையாண்டி சொல்லில்
எச்சம் இறக்கும் தோழிகள் 

''மை''...
வசியக்காரி .....
வெட்கையில் புழுங்கும் ரத்தபந்தம் 
புகையில்  ஊதும் உறவுகள் 


துரத்தும் 
சுடுச்  சொற்கள் 
ஒளித்தும் ஒளிந்தும்  கொள்கிறார்கள் 
நவ தம்பதிகள் 


மூன்று 
முடிச்சுக்குள்ளே 
வாழ்கையை நகர்த்தியவர்களில்  
நீளுகிறது நான்காம் முடிச்சின் மேலான 
பொறாமை 


மூன்று முடிச்சில் 
உறவில் நுழையும் உறவுகளின் 
இதயங்கள்  இட்டுக்கொள்ளும் காதல் முடிச்சுதான் 
நான்காம் முடிச்சு 


இன்றும் 
பெருண்பாண்மையோரில்  நீளுகிறது 
மூன்று முடிச்சின் கடமை வாழ்க்கை 


ரசித்து 
சுவையுங்கள் 
நான்காம் முடிச்சின் 
ருசியை 

43 comments:

  1. அருமையாச் சொன்னீங்க சார் !

    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  2. அட அட அழாகா சொன்னீங்க நான்காம் முடிச்சை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழரே

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  4. மூன்று முடிச்சில்
    உறவில் நுழையும் உறவுகளின்
    இதயங்கள் இட்டுக்கொள்ளும் காதல் முடிச்சுதான்
    நான்காம் முடிச்சு .

    அழகான முடிச்சு அருமை.

    ReplyDelete
  5. உண்மை நண்பா ....

    ஊருக்காக வாழ்வதிலே
    உறைந்து போகிறது
    உணர்வுகள் ..........

    காதலால் மட்டுமே
    கறக்க முடியும்
    மீண்டும் .........

    நான்காம் முடிச்சி
    நாகரீகம் ...........

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா...

      புரிதலும்
      பாசிட்டிவான கருத்துக்கு மிக்க நன்றி தோழி

      Delete
  6. அழகான கருத்து. மூன்று முடிச்சுடன் தொடங்கும் வாழ்க்கையில் நான்காவது காதல் முடிச்சு எப்போது விழுமென்பதுதான் தெரிவதில்லை. சூப்பர்ப்.

    ReplyDelete
    Replies
    1. புரிதலும்
      விட்டுக் கொடுத்தாலும்
      உறவில் வந்துவிட்டால்
      தானாக விழும்
      நான்காம் முடிச்சு


      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்

      Delete
  7. நான்காம் முடிச்சு என்னையும் சேர்த்து முடிந்து கொண்டது..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சார் ம் (:

      Delete
  8. மூன்று முடிச்சில்
    உறவில் நுழையும் உறவுகளின்
    இதயங்கள் இட்டுக்கொள்ளும் காதல் முடிச்சுதான்
    நான்காம் முடிச்சு //

    பலருடைய வாழ்வு நான்காம் முடிச்சைப்
    பாராமலே முடிவதுதான் பெருத்த சோகம்
    வித்தியாசமான அருமையான சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சார்
      இந்த தலை முறையினர் ஆவது
      இட்டுக் கொள்ளட்டும் நான்காம் முடிச்சை

      வருகைக்கும் கருத்துக்கம் மிக்க நன்றி சார்

      Delete
  9. ரசித்து
    சுவையுங்கள்
    நான்காம் முடிச்சின்
    ருசியை!!

    கிடைத்தவர்கள் ருசிக்கலாம் தாங்க நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ருசிக்க வேணும்மா
      அதுக்கு நீங்க முதலில்
      கல்யாணம் பன்னனும்கோ ...ம் (:

      Delete
  10. நான்காம் முடிச்சு....காதலின் மற்றொரு பரிமாணம்.!அருமை சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  11. நான்காம் முடிச்சு....காதலின் மற்றொரு பரிமாணம்.!அருமை சொந்தமே!

    ReplyDelete
  12. நான்காம் முடிச்சு விளக்கம் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. ம்(:
      மிக்க நன்றி சகோ

      Delete
  13. Replies
    1. மிக்க நன்றி தோழரே

      Delete
  14. புதிய கோணத்தில் புதிய சிந்தனை ..
    முடிச்சில் அவிழ்ந்து விடுகிறது வாழ்வின் விளக்கம் ..
    வாழ்த்துக்கள் தோழமையே ..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  15. முடிச்சை பற்றியான ஓர் அற்புதமான கவிதை....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழரே

      Delete
  16. ''...''மை''...
    வசியக்காரி .....
    வெட்கையில் புழுங்கும் ரத்தபந்தம்
    புகையில் ஊதும் உறவுகள்....
    மிக வித்தியாசமான கருத்து சகோதரா. நன்றாக உள்ளது.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி

      Delete
  17. "நான்காம் முடிச்சு" அன்பின் முடிச்சு அருமையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி

      Delete
  18. வாழ்க்கையின் முடிச்சு புரிவதில்லை எப்போதும்

    ReplyDelete
  19. ம்ம்ம் அருமை அங்கிள்..

    துரத்தும்
    சுடுச் சொற்கள்
    ஒளித்தும் ஒளிந்தும் கொள்கிறார்கள்
    நவ தம்பதிகள் ............

    அருமையான வரிகள்......

    ReplyDelete
  20. நான்காம் முடிச்சு அது அன்பின் முடிச்சு
    கிட்டயும் கிட்டாமல் போகும் பலரது
    வாழ்வின் எல்லைகளை சிந்திக்க வைத்த
    கவிதை அருமை!...தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  21. மூன்று முடிச்சுக்களின் இறுக்கத்தால் நான்காவது முடிச்சு அவிழாமல் இருக்கும்.அழகான முடிச்சும் கவிதை தோழரே !

    ReplyDelete
    Replies
    1. ம் .. கண்டிப்பா தோழி

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...