Thursday, July 5, 2012

சுமக்கும் இறைவன்





இழுத்து 
பிழிந்த கரைவைக்காரன் 
இறுதிச் சொட்டில் உதிரம் 
பிந்திய நாளில் 
கோவில் ஒன்றுக்கு நேர்ச்சையானது 
முதிச்சியில் மடி வற்றிய 
பசு 
 
தந்தையின் மரணம் 
பிள்ளைகளின் 
சொத்து பாகப்பிரிவு 
யார் சுமப்பது  வீட்டுக்கு  வெளியில் 
பெற்ற தாய் 

வீதியில் 
கையேந்திய பணத்தில் 
 பழம் வாங்கி உண்டு முதியவள்  தோலை வீச 
பசியில் ஓடிவந்த  வந்த பசுவோ 
அதை உண்டது 

பாரம் 
உறவுகளின் கைவிடல் 
உணவுப் படியளந்து இன்னும் அவர்களை சுமக்கிறான் 
இறைவன் 
 

13 comments:

  1. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரம்...

    ReplyDelete
  2. nampaa!

    nitharsanam!

    unmai!
    kanankkuthu-
    manathu!

    ReplyDelete
  3. அவன் பாகுபாடு பார்ப்பதுமில்லை
    அனைவருக்கும் படியளக்க மறப்பதுமில்லை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தந்தையின் மரணம்
    பிள்ளைகளின்
    சொத்து பாகப்பிரிவு
    யார் சுமப்பது வீட்டுக்கு வெளியில்
    பெற்ற தாய் .

    நெஞ்சம் கனத்துப்போனது.

    ReplyDelete
  5. சுமக்கும் இறைவன் -

    சுகமாக இறக்கியுள்ளீர்.

    ReplyDelete
  6. கனமான கவிதை.வாழ்த்துக்கள் சொந்தமே.சந்திப்போம்.!

    http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
  7. ''...உறவுகளின் கைவிடல்
    உணவுப் படியளந்து இன்னும் அவர்களை சுமக்கிறான்
    இறைவன்...''
    இந்த எண்ணத்தில் தானே உலகம் இயங்குகிறது. கனமான கவிதை.
    நல்வாழ்த்து.;
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. ''...உறவுகளின் கைவிடல்
    உணவுப் படியளந்து இன்னும் அவர்களை சுமக்கிறான்
    இறைவன்...''
    இந்த எண்ணத்தில் தானே உலகம் இயங்குகிறது. கனமான கவிதை.
    நல்வாழ்த்து.;
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. மனிதனிடம் கருணை காணாமல் போனால் இறைவன்தானே காக்க வேண்டும்.
    படித்து உணர வேண்டிய கவிதை.

    ReplyDelete
  10. இருக்கும் மட்டும் உறவுகளின் நிலையை கூறும் அழிய கவி அங்கிள் சூப்பர்ர்ர்ர்............................

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...