Thursday, August 23, 2012

உறகத்தின் களவு (அ .நா.கா 7)

முந்தின 
இரவில் உறக்கம் கெடுத்தியதாய்
அவளிடம் இவன் 

இல்லை இல்லை 
அவள்  உறக்கம் தொலைந்ததாய் 
அவனிடம் இவள் 

அவன் அவளின் 
ஒளிப் பிம்பம் இரவை கீறியதால் 
அவன் அவளில் உடைந்தது உறக்கம் 

அவன் 
கனவில் இவளும் 
அவள் கனவில் இவனின் 
 நினைவுகளின் ரகசிய ஊருடுவல் 

அவன் அவள் 
உறக்கத்தை கெடுத்தியது
அவன் அவளில் இடையே  இழையும்  
கா(தல்)மம்

அவன் இவளில் 
களவு போன உறக்கம் 
மென்று துப்பிய இரவின் எச்சிலில் 
ச்சீ..... அசிங்கம் 

Wednesday, August 22, 2012

முள் சொல்
சொல்லை 
உருட்டி யெடுத்து 
தின்னக் கொடுக்கிறார்கள் 
வலிக்க வலிக்க மெல்கிறேன் சொல்லை 

முள்ளின் 
முனை சொல் சில 
இடையில் அகப்பட்டு கீறுகிறது 
அகத்தில் கசிகிறது ரத்தம் 

வலியில்
சொல் உதிரக் காத்திருக்கிறார்கள் 
 அவர்களின் அர்த்த விசுபரூபத்திற்கு பயந்து 
மௌனமாய் மெல்கிறேன் 

நஞ்சில் 
 மறுநொடி மரணம் 
சொல்லை மெல்லக் கொடுத்து 
ரணத்தை ரசிக்கிறது உலகம்      


இது என் 350வது கிறுக்கல் 
************************************************


ரெட்டை விருதுகள் 

எனக்கு ரெட்டை விருது கொடுத்த 
அன்பின் சகோ ராதாராணி அவர்களுக்கு   நன்றி ..நன்றி ..நன்றி 

என் கிறுக்கலுக்கு தொடர்ந்து கருத்து நீர் ஊற்றி வரும் நேச உறவுகளுக்கு 
என் மனபூர்வமான நன்றி ...நன்றி ..நன்றி 
 

 இந்த அன்பின் விருதை தோழமை  உறவுகளுக்கு பகிர்வதில் மகிழ்கிறேன் 

கரைசேரா அலை -அரசன் .சே 

வரலாற்றுச் சுவடுகள் -வரலாற்றுச்சுவடுகள் 

இலக்கிய சுவை -கோவை மு .சரளா 


மனசாட்சி™ -மனசாட்சி 
  

Tuesday, August 21, 2012

உருவம் இழந்தவன்
நினைவில் 
தங்காமல் இறந்து கொண்டிருந்தது 
முந்தின    நாட்கள் 

அகத்தில் செல்லரித்து மக்கி 
அல்ப ஆயுசில் இறந்துபோன 
நினைவுகளின் உருவம் 

மரண பயத்தில் ஓடி ஒளிகிறது 
உருவங்களில் படிந்து விழும் 
நிழல்கள் 

உறவில் ஓட்டாதவன் உயிரில் 
ஒட்டாமல் கடந்து போகிறது 
உருவங்கள் 

வந்த வீதிகளில் 
உடைந்து உதிர்ந்து மரணித்திருந்தது
சுயவுருவம் 


நினைவுகளில் 
இறந்த உருவங்களுக்காக அழுகிறான் 
சுய உருவம் இழந்தவன் 

Wednesday, August 15, 2012

குருடனின் வெளிச்சம்விடியாத இரவு 
விளக்கின் பிரகாசத்தில் 
விடிந்து  விட்டதென்று  ஒன்றுகூடி ஊளையிட்டனர் 
இருட்டுவாசிகள் 

ஜென்மனாக் குருடனும் 
விழியில் பூவிழுந்தவனும் 
வெளிச்சம் கண்டதாய் விதைத்தனர்
விஷப் பொய்யை 

அடித்து 
அமர்த்தப்பட்ட பொய் வெளிச்சம் 
வெட்டத்திலும் ஊமையாய் 
விழியுள்ளவன்

அகத்தில் 
எண்ணத்தில் இருட்டு 
விழி திரையின் மறைவில் 
வெளிச்சம் 

இருட்டறையில் 
செல்லரித்துக் கிடக்கிறது 
இருட்டில் வாங்கிய 
சுதந்திரம் 

Monday, August 13, 2012

பிணங்களை சுமப்பவன்மெல்ல 
இறுக்கல் கீச்சலோடு
திறக்கும் வெளிமனதின் வாசல் 
அதன் இடைவெளி வழியே 
 ஊடுருவி விஷமாய் பரவுகிறது 
பிணத்தின் துர்கந்தம் 

கள்ளச் சொல் 
சுயக் கொலையுண்டு 
இன்றும் புதைக்கப் படாமல் 
ஒன்றின் மேல்  ஒற்றென அழுகி வழியும் 
பிணங்கள் 

ஜீவனாய்
வாழ்பவைகள் 
இங்கு கொடூரமாய் கொலையுண்டு 
பலவந்தாமாய் பிரசவப் படுகிறது  கள்ளங்கள் 

புறவெளியில் 
உயிர் உடுத்தி திரிகிறது நிழல்கள் 
அகவெளியில் கொலையுண்டு உயிர்மடியும் 
நிஜங்கள் 

அகத்தை நிரப்பும் 
பாவங்களின் புழுக்கம் 
சுயமாய் ஊரை கூட்டி அழமுடியாமல் 
அகத்தில் அழுகிய பிணச் சுமையுமாய் 
கள்ளம் பேசுபவன் 

Tuesday, August 7, 2012

குமிழ் கனவுகள்
பதபதப்பு
நீரிலிருந்து 
பிரசவமாகிறது 
குமிழ் கனவுகள் 

சூழும் 
குமிழில் 
பல வண்ணங்கள் 
அதில்  எண்ணற்றதாய்  மிருளும் 
பிம்பங்கள் 

மெல்லிய 
காற்றில் உயரப்  பறக்கிறது
பின் 
எதோ ஒன்றில் உரசி 
உடைபட்டு இறந்து விடுகிறது 
குமிழ் கனவுகள் 

மூச்செனும் 
கனவுகள் நிரப்பிய பலூன் 
நூலறுந்து 
அகப்பட்டு உடைகையில் 
மனம் உடைந்து அழும் 
குழந்தையின்  கண்ணீரில் 
வலி

Sunday, August 5, 2012

உடைந்த முகம்


அந்த 
சில  அற்பங்கள் 
சுய மீட்பு 
அடகுச் சிறையில் கைதிகளாய் 
வாக்குறுதிகள் 
 
ஒவ்வொரு 
காரணங்களை   சொல்லிக்கொண்டு 
ஒன்றின்மேல் ஒன்றென ஏறி அமர்ந்தபடி 
கடமைகள் 

ஏறிய சுமைகள் 
நசுங்களில் அழும் வாக்குறுதிகள் 
சொல்லை  எரியும் உறவுகள் 
முகம் மறைத்த ஓட்டம் 

திரும்பும் 
திசைகளில் துரத்தும் சொல்லடிகள் 
கனமான காயங்கள் 
சொல்லடியில் உடைந்து விழுகிறது 
முகத்தின் சுயம் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...