Thursday, August 23, 2012

உறகத்தின் களவு (அ .நா.கா 7)





முந்தின 
இரவில் உறக்கம் கெடுத்தியதாய்
அவளிடம் இவன் 

இல்லை இல்லை 
அவள்  உறக்கம் தொலைந்ததாய் 
அவனிடம் இவள் 

அவன் அவளின் 
ஒளிப் பிம்பம் இரவை கீறியதால் 
அவன் அவளில் உடைந்தது உறக்கம் 

அவன் 
கனவில் இவளும் 
அவள் கனவில் இவனின் 
 நினைவுகளின் ரகசிய ஊருடுவல் 

அவன் அவள் 
உறக்கத்தை கெடுத்தியது
அவன் அவளில் இடையே  இழையும்  
கா(தல்)மம்

அவன் இவளில் 
களவு போன உறக்கம் 
மென்று துப்பிய இரவின் எச்சிலில் 
ச்சீ..... அசிங்கம் 

11 comments:

  1. நினைவுகளின் ரகசிய ஊருடுவல் nalla irunthuchu :)

    ReplyDelete
  2. கடைசியில் இருவருக்கும் தூங்காத இரவுகளே மிச்சமாய் !

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் .....ம் (;
      நன்றி தோழி

      Delete
  3. களவு
    முதலில் கைகொள்வது உறக்கத்தை தான்
    மரணிக்க முடியாத அவஸ்தை .....

    வாழ்தலின் வழி மிக்க ஆசை
    ஆட்கொள்வதால் வந்த புலம்பல் .........

    அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ...ம் (;
      நன்றி தோழி

      Delete
  4. சரி.. சரி.. புரிஞ்சி போச்சி..

    நன்றி..

    ReplyDelete
  5. தலைப்பில் எழுத்துப் பிழையா ??? உறக்கம் தொலைத்த காமம்

    ReplyDelete
  6. '''...அவன் இவளில்
    களவு போன உறக்கம்
    மென்று துப்பிய இரவின் எச்சிலில்
    ச்சீ..... அசிங்கம்...''
    என்ன இப்படிக் கூறியாச்சுது!...
    உலகமே இதற்காகவல்லோ இயங்குது!.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    (இன்று ''..வையகம் எமக்காக.'' - என்வலையில்)


    ReplyDelete
  7. மென்று துப்பிய இரவின் எச்சில் இனிக்கிறதே நண்பரே .

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...