Sunday, August 5, 2012

உடைந்த முகம்






அந்த 
சில  அற்பங்கள் 
சுய மீட்பு 
அடகுச் சிறையில் கைதிகளாய் 
வாக்குறுதிகள் 
 
ஒவ்வொரு 
காரணங்களை   சொல்லிக்கொண்டு 
ஒன்றின்மேல் ஒன்றென ஏறி அமர்ந்தபடி 
கடமைகள் 

ஏறிய சுமைகள் 
நசுங்களில் அழும் வாக்குறுதிகள் 
சொல்லை  எரியும் உறவுகள் 
முகம் மறைத்த ஓட்டம் 

திரும்பும் 
திசைகளில் துரத்தும் சொல்லடிகள் 
கனமான காயங்கள் 
சொல்லடியில் உடைந்து விழுகிறது 
முகத்தின் சுயம் 

31 comments:

  1. திரும்பும்
    திசைகளில் துரத்தும் சொல்லடிகள்
    கனமான காயங்கள்
    சொல்லடியில் உடைந்து விழுகிறது
    முகத்தின் சுயம் //

    அருமை அருமை
    மனம் தொட்ட பதிவு
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக நன்றான வார்த்தை அடுக்குகள்!
    துன்பம்...துன்பம் மீற வேண்டும்!
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. //சொல்லடியில் உடைந்து விழுகிறது
    முகத்தின் சுயம் //உண்மை தான் அன்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  4. மிக அருமை சொந்தமே!!!இப்போதெல்லாம் இது தான் வாழ்வென்றாகிவிட்டது.இதுவும் கடந்கு போகும் என்று சொல்லிக்கொண்டு வாழப்பழகிவிட்டோம்.மிக மிக மிக கனமாக வார்த்தைப்பிரயோகம்.அருமை நண்பா.சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. //இதுவும் கடந்து போகும் //
      அப்படித்தான் செல்கிறது சகோ

      Delete
  5. சுய முகத்திற்கு மதிப்பு மிக மிகக்குறைவு நண்பரே !

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை தோழி

      Delete
  6. அருமையான கவிதை செய்தாலி சார்! (TM 1)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      உங்களின்
      இந்த சார்
      நட்பில் இடைவெளியாக இருக்கிறது

      சார்
      சொல்லில் ஒட்டுவதில்லை
      உதடுகள்

      நட்பு
      எத்தனை ஒட்டல் பிணைப்பு

      நண்பா என்று அழையுங்கள்

      Delete
  7. Replies
    1. முதல் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. உடைந்த முகத்திலும் ஒட்டியிருக்கலாம் உண்மையின் சுவடுகள். கவிதை அருமை. பாராட்டுகள் செய்தாலி.

    ReplyDelete
    Replies
    1. //உடைந்த முகத்திலும் ஒட்டியிருக்கலாம் உண்மையின் சுவடுகள்//

      கண்டிப்பா
      பொருள் உணர்ந்த கருத்துக்கு நன்றி தோழி

      Delete
  9. Replies
    1. சார்
      இச்சொல்லை நான்
      உங்களை அழைத்தால்
      அழகாய் பொருந்தும்


      நான்
      வாழ்கையை கற்றுக் கொண்டிருக்கும்
      மாணவன்

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்

      Delete
  10. Wow karuthulla kavithai. Vasithu rasithen. Valthukkal

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே

      Delete
  11. தோழா, அழகா சொல்லீட்டீங்க அப்பட்டமான உண்மை தான்,

    ReplyDelete
  12. வாக்கும்
    கொடுத்த பின்
    அதை நிறைவேற்ற இயலாத
    சூழலில்

    பெரும்
    குற்றவாளியை போல
    கூனி நிற்கும்
    நிலை .......வலிதான் ......

    வார்த்தைகளில் தெறிக்கிறது
    சுயத்தின் கோரம் .......

    நமக்காக வாழ்வாவது
    ஒரு புள்ளியை போல

    சமூகத்திற்காக வாழ்வதுதான்
    கடலை போல .,,என்ன செய்ய

    ReplyDelete
    Replies
    1. அகம் பொருளை
      உள்ளூர உணர்ந்த கருத்து
      ம்(: மிக்க நன்றி தோழி

      Delete
  13. சொல்லடியில் உடைந்து விழுகிறது
    முகத்தின் சுயம் //என்னே அருமையான வரிகள்.

    ReplyDelete
  14. சுய முகமற்ற உடைந்த முகங்கள் தான்
    பலருடையது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழரே.

    ReplyDelete
  15. இந்த பெரு வெளியில் முகம் மறைத்த ஓட்டம் தான் அதிகம் தென்படுகிறது ... உண்மை வரிகளுக்கு என் வணக்கங்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...