Monday, August 13, 2012

பிணங்களை சுமப்பவன்



மெல்ல 
இறுக்கல் கீச்சலோடு
திறக்கும் வெளிமனதின் வாசல் 
அதன் இடைவெளி வழியே 
 ஊடுருவி விஷமாய் பரவுகிறது 
பிணத்தின் துர்கந்தம் 

கள்ளச் சொல் 
சுயக் கொலையுண்டு 
இன்றும் புதைக்கப் படாமல் 
ஒன்றின் மேல்  ஒற்றென அழுகி வழியும் 
பிணங்கள் 

ஜீவனாய்
வாழ்பவைகள் 
இங்கு கொடூரமாய் கொலையுண்டு 
பலவந்தாமாய் பிரசவப் படுகிறது  கள்ளங்கள் 

புறவெளியில் 
உயிர் உடுத்தி திரிகிறது நிழல்கள் 
அகவெளியில் கொலையுண்டு உயிர்மடியும் 
நிஜங்கள் 

அகத்தை நிரப்பும் 
பாவங்களின் புழுக்கம் 
சுயமாய் ஊரை கூட்டி அழமுடியாமல் 
அகத்தில் அழுகிய பிணச் சுமையுமாய் 
கள்ளம் பேசுபவன் 

21 comments:

  1. பிணத்தை சுமப்பவன் - கள்ளம் பேசுபவன்

    புரிகிறது தோழா.....ம்ம்

    ReplyDelete
    Replies
    1. ம்(:
      உங்கள் புரிதலுக்கு நன்றி

      Delete
  2. வித்தியாசமா இருக்கு செய்தாலி சார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கயமை அகற்றமுடியா பிணத்தின் முன்

    குவிந்து கிடக்கும் அழுக்கை மறைக்க ஆயிரம் முகமூடிகள்

    போட்டாலும் அடை மழையில் அவிழ்ந்து விழுந்து சுயத்தை வெளிகாட்டுது ........

    அருமையான உள்ளீடு அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. ம்(:
      உங்கள் புரிதல் கருத்திற்கு மிக்க நன்றி தோழி

      Delete
  4. /// அகத்தில் அழுகிய பிணச் சுமையுமாய்
    கள்ளம் பேசுபவன் ///

    உண்மை வரிகள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி சார்

      Delete
  5. Replies
    1. ம்(;
      மிக்க நன்றி தோழரே

      Delete
  6. புறத்தில் தூய்மையோடும் அகத்தில் குப்பையும் கூழமுமாக இருப்பவனை அழவைக்காமல் சாடியிருக்கிறமாதிரி இருக்கு செய்தாலி !

    ReplyDelete
  7. அருமை... ஆழ்ந்த அர்த்தமுடன் அழகிய சொற்கள்... வாழ்த்துக்கள்

    என்னுடைய வலைபதிவில் "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்து தெரிவிக்க உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்...

    ReplyDelete
  8. புறவெளியில்
    உயிர் உடுத்தி திரிகிறது நிழல்கள்
    அகவெளியில் கொலையுண்டு உயிர்மடியும்
    நிஜங்கள் //

    என்ன ஒரு சிந்தனை .. வியந்தேன் நண்பா .. என் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. ம் (:
      மிக்க நன்றி தோழரே

      Delete
  9. அகத்தை நிரப்பும்
    பாவங்களின் புழுக்கம்
    சுயமாய் ஊரை கூட்டி அழமுடியாமல்
    அகத்தில் அழுகிய பிணச் சுமையுமாய்
    கள்ளம் பேசுபவனஃஃஃஃஃ

    இதுதான் இன்று உண்மை சொந்தமே!நாசூக்கான வரிகள்..மனதை பிசையும் உண்மைகள்.அருமை சொந்தமே!வியந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புரிதலும்
      நல் கருத்தும் மிக்க நன்றி சொந்தமே

      Delete
  10. நண்பா
    ஸ்பேம்
    பெட்டி
    பார்க்கவும்

    ReplyDelete
  11. யாரும் யோசிக்காத விஷயத்தை கையாண்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies

    1. சொல்ல முடிவெடுத்து விட்டால் எல்லாம் சொல்ல வேண்டும்
      அதுதானே நல்லது நண்பா

      மிக்க நன்றி நண்பா

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...