Wednesday, August 15, 2012

குருடனின் வெளிச்சம்



விடியாத இரவு 
விளக்கின் பிரகாசத்தில் 
விடிந்து  விட்டதென்று  ஒன்றுகூடி ஊளையிட்டனர் 
இருட்டுவாசிகள் 

ஜென்மனாக் குருடனும் 
விழியில் பூவிழுந்தவனும் 
வெளிச்சம் கண்டதாய் விதைத்தனர்
விஷப் பொய்யை 

அடித்து 
அமர்த்தப்பட்ட பொய் வெளிச்சம் 
வெட்டத்திலும் ஊமையாய் 
விழியுள்ளவன்

அகத்தில் 
எண்ணத்தில் இருட்டு 
விழி திரையின் மறைவில் 
வெளிச்சம் 

இருட்டறையில் 
செல்லரித்துக் கிடக்கிறது 
இருட்டில் வாங்கிய 
சுதந்திரம் 

35 comments:

  1. /// அகத்தில்
    எண்ணத்தில் இருட்டு
    விழி திரையின் மறைவில்
    வெளிச்சம் ///

    உண்மை வரிகள்... நன்றி...



    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
  2. /
    இருட்டறையில்
    செல்லரித்துக் கிடக்கிறது
    இருட்டில் வாங்கிய
    சுதந்திரம்
    /

    நிஜத்தை வெளிப்படுத்தும் வேதனையான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே
      ஜெய்ஹிந்த்

      Delete
  3. Replies
    1. நன்றி தோழரே
      ஜெய்ஹிந்த்

      Delete
  4. Replies
    1. நன்றி சகோ
      ஜெய்ஹிந்த்

      Delete
  5. உண்மையை உணர்த்திப்போகும்
    அருமையான படைப்பு
    சுதந்திர தின சிறப்புக் கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்
      ஜெய்ஹிந்த்

      Delete
  6. இருட்டறையில்
    செல்லரித்துக் கிடக்கிறது
    இருட்டில் வாங்கிய
    சுதந்திரம் //நிஜத்தை அழகாய் படம்பிடித்து காட்டிய கவிதைவரிகளை செதுக்கிய உங்களுக்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ
      ஜெய்ஹிந்த்

      Delete
  7. சுதந்திரம் அன்று ஆங்கிலேயனிடம்
    இன்று நம் அரசியல்வாதியிடம்
    வேண்டுகிறோம் ஊழல் இல்லா நாடாக மாற
    சமத்துவம் மேலோங்கிட.........
    அருமை தோழரே சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி
      ஜெய்ஹிந்த்

      Delete
  8. உணர்ச்சியுள்ள வலிகள் நிறைந்த வரிகள் .. உங்களோடு இணைந்து நானும் அதே உணர்வுள்ளவனாய் தோழமையே

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே
      ஜெய்ஹிந்த்

      Delete
  9. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ
      ஜெய்ஹிந்த்

      Delete
  10. இருட்டில் வாங்கியபடியால்தான் விடிவில்லாமலோ....என்றாலும் சுதந்திர தின வாழ்த்துகள் செய்தாலி !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி
      ஜெய்ஹிந்த்

      Delete
  11. இன்னும் விடியவில்லைதான் ..........

    கண்ணை திறந்து வைத்திருக்கிறோம்

    ஆனால் பார்வையை கடன் கொடுத்துவிட்டு

    எப்படி கொண்டாடமுடியும் ...............
    ஆனாலும் ஆடம்பர விழாவாக

    பகட்டுக்காக கொண்டாத்தான் செய்கிறோம்
    உங்கள் வலி நானும் உணர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சுகவாசிகள்
      கொண்டாடுகிறார்கள்
      சுதந்திரத்தை

      மிக்க நன்றி தோழி
      ஜெய்ஹிந்த்

      Delete
  12. சத்தமாய் கூறிய பொய்களுள் பல உண்மைகள் அடங்கிப்போயின.ஒரு நாள் குருடனுக்கும் வியும்.அதன் பின்னாவது உண்மை வெளிச்சங்கள் எதிக்கட்டும்.சுதந்திரதின வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சொந்தமே
      ஜெய்ஹிந்த்

      Delete
  13. ''....இருட்டறையில்
    செல்லரித்துக் கிடக்கிறது
    இருட்டில் வாங்கிய
    சுதந்திரம்..''

    சரியாகச் சொல்லப் பட்டுள்ளது. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. சகோ... எனது பிளாக்கிற்கு வந்து விருதை ஏற்று கொள்ளுங்கள்.

    ReplyDelete
  15. நம் சுதந்திரம்
    குருடன் கண் வெளிச்சம் தான்!!
    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    நன்றி தோழரே!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் தோழரே

      Delete
  16. இந்த பதிவை-
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

    வலைச்சரத்திற்கு -
    வருகை தாருங்கள்!
    தலைப்பு;
    கவிதை......

    http://blogintamil.blogspot.sg/

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  17. அகத்தில்
    எண்ணத்தில் இருட்டு
    விழி திரையின் மறைவில்
    வெளிச்சம்

    இருட்டறையில்
    செல்லரித்துக் கிடக்கிறது
    இருட்டில் வாங்கிய
    சுதந்திரம்
    அருமையான சுதந்திர தினக் கவிதை !..
    கவிதைக்கும் இன்றைய வலைச்சரத்தில்
    அறிமுகம் ஆனதற்கும் வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ

      Delete
  18. அன்னியனிடமிருந்து விடுபட்டு நமக்குள்ளே சிறைபட்டு நிற்கிறோம். வலி தரும் உண்மையான வரிகள் நண்பரே.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...