Wednesday, August 22, 2012

முள் சொல்
சொல்லை 
உருட்டி யெடுத்து 
தின்னக் கொடுக்கிறார்கள் 
வலிக்க வலிக்க மெல்கிறேன் சொல்லை 

முள்ளின் 
முனை சொல் சில 
இடையில் அகப்பட்டு கீறுகிறது 
அகத்தில் கசிகிறது ரத்தம் 

வலியில்
சொல் உதிரக் காத்திருக்கிறார்கள் 
 அவர்களின் அர்த்த விசுபரூபத்திற்கு பயந்து 
மௌனமாய் மெல்கிறேன் 

நஞ்சில் 
 மறுநொடி மரணம் 
சொல்லை மெல்லக் கொடுத்து 
ரணத்தை ரசிக்கிறது உலகம்      


இது என் 350வது கிறுக்கல் 
************************************************


ரெட்டை விருதுகள் 

எனக்கு ரெட்டை விருது கொடுத்த 
அன்பின் சகோ ராதாராணி அவர்களுக்கு   நன்றி ..நன்றி ..நன்றி 

என் கிறுக்கலுக்கு தொடர்ந்து கருத்து நீர் ஊற்றி வரும் நேச உறவுகளுக்கு 
என் மனபூர்வமான நன்றி ...நன்றி ..நன்றி 
 

 இந்த அன்பின் விருதை தோழமை  உறவுகளுக்கு பகிர்வதில் மகிழ்கிறேன் 

கரைசேரா அலை -அரசன் .சே 

வரலாற்றுச் சுவடுகள் -வரலாற்றுச்சுவடுகள் 

இலக்கிய சுவை -கோவை மு .சரளா 


மனசாட்சி™ -மனசாட்சி 
  

26 comments:

 1. உலகத்தை (இன்றைய) நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்...

  விருது பெற்றதற்கும், பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ம்(:
   புரிதலுக்கும் வாழ்த்துக்கும்
   மிக்க நன்றி சார்

   Delete
 2. முதலில் 350 ஆவது கல்வெட்டுக்கு வாழ்த்துக்கள் தல!

  ReplyDelete
 3. ஒரே சமயத்துல ரெண்டு விருதா, கலக்குறீங்க!

  தங்களின் விருது பட்டியலில் இந்த சிறியவனும் இடம் பெற்றிருப்பது மனதிற்கு மகிழ்வை தருகிறது!

  மகிழ்வுடன் இவ்விருதை ஏற்றுக்கொள்கிறேன்! அன்பிற்கு மிக்க நன்றி சகோ!

  ReplyDelete
  Replies
  1. பெருந்தன்மையோடு வந்து பெற்றமைக்கு நன்றி சகோ

   Delete
 4. வரிகள் நிதரசனம் பேசுகிறது ,,,'என் அன்பு வாழ்த்துக்கள் நண்பா ...

  விருதுக்கும் , விருதை என் போன்ற மற்ற தோழமைகளோடு பகிர்ந்து கொண்டமைக்கு என் உள்ளம் கசியும் வணக்கங்கள் ..

  ReplyDelete
 5. nalla kavithai!

  350 kkum!
  viruthukalukkum!
  vaazhthukkal!

  thinamum kavithai ezhuthungal!
  ungal varikalil niraiya naan katrukolla vendiyullathu!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் விருது பெற்றமைக்கு ...

  ReplyDelete
 7. 350 -கவிதை...!!!

  இதிலாவது பூஞ்சொற்களை உதிர்த்திருக்கலாம்...ம்ம்ம்

  இரண்டு விருதுகளுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கோபம் புரிகிறது

   எளிமையான வரிகளை எழுத முனைகிறேன்
   அடுத்த கிறுக்கல்களில்

   வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி தோழரே

   Delete
 8. ''.......சொல்லை மெல்லக் கொடுத்து
  ரணத்தை ரசிக்கிறது உலகம்...''
  350 -கவிதை...!!!

  இரண்டு விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்....
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கும்
   நல் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ

   Delete
 9. நன்றி நண்பரே.. மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. பெருந்தன்மையோடு வந்து பெற்றமைக்கு நன்றி சகோ

   Delete
 10. விருதுக்கும் 350 க்கும் வாழ்த்துகள் செய்தாலி. முள்ளின்
  முனை சொல் அகப்பட்டு கீறுகிறது
  அகத்தில் கசிகிறது ரத்தம்......அற்புதமாய் வந்திருக்கு !

  ReplyDelete
  Replies

  1. வாழ்த்துக்கும்
   உணர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் தோழி

   Delete
 11. விருதை பெற்றுக் கொண்டமைக்கு நன்றி சகோ..! வாழ்த்துக்கள்..!சோகத்தை வருடும் கவிதைகளாக தருகிறீர்களே சகோ..அடுத்த பதிவில் நம்பிக்கை இழையோடும் சந்தோஷ கவிதை எதிர் பார்க்கிறேன்...:)

  ReplyDelete
  Replies
  1. சரி சரி ..ம் (:

   அடுத்த கிறுக்கலில் மகிழ்ச்சியை பகிர்கிறேன் சகோ
   உங்கள் அன்பிற்கும் விருத்தத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ

   Delete
 12. விருது ஒன்றை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன் என் தளத்தில் அதை பெற்றுக்கொள்ள அழைக்கிறேன்
  http://kovaimusaraladevi.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. நேற்று
   முன்தினம் தான் சகோ ராத ராணியின் ரெட்டை விருது
   இன்று நீங்களும் இந்த அன்பிற்கு என்ன கைமாறு செய்வேன்

   உங்கள் அன்பிற்கும் விருதிற்கும் மிக்க நன்றிகள் தோழி

   Delete
 13. வாழ்த்துக்கள் சொந்தமே!இன்னும் பல கவிதைகள் தாண்ட வாழ்த்துக்கள்.விருதிற்காய் சிறிய தங்கையின் வாழ்த்துக்கள்.

  இது தான் சொந்தமே உலகம்.காத்திருக்கின்றன.,எங்கே எப்போ தவறுவோம் என்று பார்த்து.இங்கு பேச்சுக்களை விட மெனங்களே சுகம்.◌ாழ்த்துக்கள் உங்கள் புரிதலுக்காய்.!சந்திப்போம் சொந்தமே!

  ReplyDelete
 14. உயிரை திங்கும் சொல் விஷத்தை விட கொடியது... மேன்மேலும் பல ஆயிரங்கள் எழுத வாழ்த்துக்கள்..

  "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
  என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

  ReplyDelete
 15. thalaipula irunthu kadaisi varaikkum aruami anna... valika valika oru unmaiya solringa :) 350vathu pathivirkku vazhthukkal :)

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...