Tuesday, August 7, 2012

குமிழ் கனவுகள்




பதபதப்பு
நீரிலிருந்து 
பிரசவமாகிறது 
குமிழ் கனவுகள் 

சூழும் 
குமிழில் 
பல வண்ணங்கள் 
அதில்  எண்ணற்றதாய்  மிருளும் 
பிம்பங்கள் 

மெல்லிய 
காற்றில் உயரப்  பறக்கிறது
பின் 
எதோ ஒன்றில் உரசி 
உடைபட்டு இறந்து விடுகிறது 
குமிழ் கனவுகள் 

மூச்செனும் 
கனவுகள் நிரப்பிய பலூன் 
நூலறுந்து 
அகப்பட்டு உடைகையில் 
மனம் உடைந்து அழும் 
குழந்தையின்  கண்ணீரில் 
வலி

28 comments:

  1. நல்ல வரிகள்....
    நமது கனவு சிலதும் அப்படித்தான்...
    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. குமிழ் கனவுகள் குழந்தையின் குபீர் கண்ணீர்

    ReplyDelete
  3. அழகிய குமிழி
    காற்றில் பறக்க
    மனசும் பிறந்தது
    லேசான இறகைபோல...
    குமிழியும் அழகு உங்கள் விரியும் அழகு!
    அன்புடன் ஆயிஷாபாரூக்

    ReplyDelete
  4. அழகிய சொல்லாடல் சகோ..

    ReplyDelete
  5. கவிதைத் தலைப்பே அசத்திவிட்டது. கவிதை கேட்க வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ..ம் (;
      மிக்க நன்றி தோழரே

      Delete
  6. ///மூச்செனும்
    கனவுகள் நிரப்பிய பலூன்
    நூலறுந்து
    அகப்பட்டு உடைகையில்///

    மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete
  7. ஒரு விநாடி வாழ்ந்தாலும் அழகிய வாழ்வு நீர்க்குமிழிக்கு.கனவுகள் நிரப்பிய பலூனுக்காக பெரியவர்களும்தான் அழவேண்டியிருக்கு !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழி
      கனவுகள் உடையும் வலி ரணமானது

      Delete
  8. மூச்செனும்
    கனவுகள் நிரப்பிய பலூன்
    நூலறுந்து
    அகப்பட்டு உடைகையில்
    மனம் உடைந்து அழும்
    குழந்தையின் கண்ணீரில்
    வலி//

    ஆழமான சிந்தனை
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இப்படித்தானே நமது கனவுகளும்!வாழ்த்துக்கள் சொந்தமே!மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் என்னைபோல சிலருக்கும்

      Delete
  10. அச்சச்சோ என் காமண்டை காணோம்

    ReplyDelete
  11. மீண்டும் மீண்டும் படித்தேன் சகோ வரிகள் மிகவும் அருமை.

    ReplyDelete
  12. குமிழ் கனவுகள்“
    ஆழம் பொதிந்த கவிதை.. அருமை தோழரே!

    ReplyDelete
  13. //மூச்செனும்
    கனவுகள் நிரப்பிய பலூன்
    நூலறுந்து
    அகப்பட்டு உடைகையில்
    மனம் உடைந்து அழும்
    குழந்தையின் கண்ணீரில்
    வலி//

    மனதைக் கவரும் வரிகள் ... வாழ்வின் யதார்த்தங்களை பிரதிபலிக்கும் கவிதை இதுவாகும் ...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும்
      நல் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  14. அருமை வாழ்வும் அப்படிதான் இருக்கிறது குழந்தையின் வலியை போல .........

    உங்களின் கவிதைக்கான படத்தை நானும் ஒரு கவிதைக்கு போட்டு இருக்கிறேன் .....

    எண்ணங்கள் வேறு உருவம் மட்டும் ஓன்று ..........அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. அந்த குழந்தையைப் போல் நானும்
      என்னைப்போல் எத்தனையோ ..

      அப்படியா
      இதோ பார்க்கிறேன்

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...