Thursday, September 6, 2012

நவசமூகம் (பழைய ...ப்பா கிறுக்கல்கள் 2 )




* தங்க விலையில்
தானியங்களும் காய்கறிகளும்
விளைநிலத்தில் கட்டிடங்கள்


* உடுப்பு சுருங்காமல் உழைப்பவனுக்கு
உணவுப்படி அளக்குகிறான்
சேருசகதி புரண்ட உழவன்


*சுடும் வெயிலில்
நிழலுக்காக ஓடுகிறான்
மரம் வெட்டுபவன்


*குருடனின் பிச்சைப்பாத்திரத்தில்
காசு திருடுகிறான்
பார்வை உள்ளவன்


*ஊடக மேடைகளில்
ஆடைப் பஞ்சத்தில் அரங்கேறும் குழந்தைகள்
ஈன்றவர்களின் புதிய வழிநடத்தல்


*உறவுகளில் கள்ளம்
பொதுக் கழிப்பறையாய்
கற்புத் தலங்கள்


*யாருக்கு பிள்ளை
தற்க்கித்து கொள்கிறார்கள்
விவாகரத்தான தம்பதிகள்


*இச்சை பசி
விரியாத மொட்டிலும்
களவாடப்படுகிறது கற்பு தேன்


*வீதியில் 
காட்சி பொருளாய் வெட்கத்தலங்கள் 
நவநாகரீகத்தின் ஆடை கத்தரிப்பு 






15 comments:

  1. சரியாக சொன்னீங்க சகோ.காட்டமான கவிதை.

    ReplyDelete
  2. அசத்தல் வரிகள்...

    சமூகத்தை நாசூக்காக சாடுகிறது..

    ReplyDelete
  3. அருமையாக உண்மையை சொல்லி உள்ளீர்கள்...

    ReplyDelete
  4. அனைத்து ஹைக்கூக்களும் அருமை அண்ணா

    ReplyDelete
  5. *ஊடக மேடைகளில்
    ஆடைப் பஞ்சத்தில்குழந்தைகள்

    *உறவுகளில் கள்ளம்
    பொதுக் கழிப்பறையாய்
    கற்புத் தலங்கள்

    *யாருக்கு பிள்ளை
    தற்க்கித்து கொள்கிறார்கள்
    விவாகரத்தான தம்பதிகள்


    *இச்சை பசி
    விரியாத மொட்டிலும்
    களவாடப்படுகிறது கற்பு தேன்

    // உண்மை சுடும் வார்த்தைகளை கைகளில்
    அல்லும் போது பதறுகிறது உடலெங்கும் தீயாய் கொதிக்கிறது
    வேதனை மட்டுமே மிச்சமாய்

    ReplyDelete
  6. அனைத்து துளிப்பாக்களும் அருமை.

    சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவை.

    வாழ்த்துக்கள் செய்தாலி.

    ReplyDelete
  7. சாட்டையடி வரிகள்.

    ReplyDelete
  8. //இச்சை பசி
    விரியாத மொட்டிலும்
    களவாடப்படுகிறது கற்பு தேன்//

    சுட்டெரிக்கும் வரிகள்!

    ReplyDelete
  9. சமூகக் கவிதைகள் உண்மைகளை வெளிச்சமாக்கிய வேதனை வரிகள்.

    ReplyDelete
  10. நவசமூகத்து
    நவபாஷனங்கள்
    நவதுளிகளில்....!!

    அருமைங்க தோழரே.

    ReplyDelete
  11. வேதனை தரும் சமூக அவலங்களை சாடும் நல்லதொரு கவிதை..

    ReplyDelete
  12. வார்த்தைகளில் சூடு.கொதித்தெழுந்த கவிதை !

    ReplyDelete
  13. சொன்ன தெல்லாம் உண்மையே..

    இதுதான் இன்றை கேடுகெட்ட உலகம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...