Sunday, September 9, 2012

நினைவலைகள் (அ.நா.கா 8 )அங்கு 
வெகு தூரத்தில் 
பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது  நீலவானம் 
 இதோ இங்கே 
கரையை ஓயாது முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது அலைகள் 
ஏகாந்தத்தில் லயித்துக் கொண்டிருந்தேன் நான் 
சற்றென பாறையில் அலைகள் மோதிட 
தெறித்த துளிகள் நெற்றியில் மோதிவழிய
உயிரை முத்தமிட்டது அவள் நினைவுகள் 

அன்று 
ஒரு முன்னிரவில் 
என்னில் ஒரு நன்மையைச் சுட்டிக்காட்டி 
புண்ணியம் என்று 
என் முன்நெற்றியில் ஈரம் பதிய முத்தம் பதித்தாய் 

சிறிதொரு நொடியில் 
உலர்ந்து விடுகிறது நெற்றியில் அவ் ஈரம்  
இட்ட முத்தத்தில் 
உயிரில் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது 
உன் அன்பின் ஈரம் மட்டும் 

பிரிதியோருநாள் 
அக வெட்கையில் 
தவறுதலாய்  சுட்டுவிடுகிறேன்  சொல்லால் உன்னை 
சட்டென உதிர்த்த கண்ணீரும்  இரவுவரை நீண்ட மௌனத்திலும் 
கோபமும் வலியும்  சுமந்து நீ 

அன்றிரவே 
என் இனங்கலும்    
உன் மன்னித்தலும்  அரங்கேறியது   

ஒரு அடியெனும் அடித்து விடு 
உன் வலியை  
என்னிலும் உணர்த்திவிடு என்கிறேன் 
மெல்ல இதழ் சுளித்து புன்னகைத்தாய்   நீ 

நாம் அன்பில் லயித்திருந்த ஓரிரவில் 
உன் பாதத்தை 
முத்தமிட முற்படுகிறேன் நான் 
பாவச் செயலென 
சற்றென விலக்கி விலகிவிடுகிறாய் நீ 

நீ அசந்த ஒரு தருணம் 
முத்தமிடுகிறேன் உன் பாதத்தை 
மின்னல் வேகத்தில் விழுந்தது 
கன்னத்தில் ஓரடி 

விரல் பதிந்து 
சிவந்த கன்னத்தை வருடியபடி 
விழிகளில் கண்ணீர் மல்க என்னை வசையாடினாய் நீ 

என் பிழைக்காக ஓரடி 
அன்று அடிக்கவில்லை நீ 
வலித்து எனக்கு 
அடித்து விட்டாய் வலிக்கவில்லை 

முகத்தோடு 
முகம் புதைத்து பின் முத்தமிட்டாய் 
முன்நெற்றியில் 
 நம் நான்கு விழிகளிலும் கொட்டியது கண்ணீர்  

அன்றிரவு 
சத்தமிட்டிடபடி மழை கொட்ட 
சன்னல் வழி சாரலின் ஊடுருவல் 
ரெம்ப நாளாச்சு இப்படி ஒரு மழை பெய்து  என்றாய் நீ 

மரங்களை வெட்டும் மனிதனை 
வெட்கையால்   தண்டித்துவிட்டு பின் மனமிழகி கொட்டிவிடும்   இப்படி
தவறுகள்  தண்டிக்கபடவேண்டும் பின் மன்னிக்கபடுவதும் உண்டு 
அதை நமக்கு உணர்த்திக்கொண்டு கொட்டுகிறது 
நெடு நாட்களுக்குப்பின் பெய்யும்   மழை

வா ...போவோம் 
நேரமாகிவிட்டது தட்டி எழுப்பினான் நண்பன் 
திடுக்கிட்டு எழுந்தேன்  
உன் நினைவில் உறங்கிப் போயிருந்த நான் 24 comments:

 1. ஆகா! ஏதோ கதையென ஆவலுடன் வாசிக்க
  அட! அது கனவா!!!....ம்ம்கும்....!!!!.
  ஒரு சிறு கதை போல உள்ளது.
  நல்வாழ்த்து!...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 2. கதையா... கவிதையா...
  அருமையான கவிதை சகோதரா...

  ReplyDelete
 3. அடடே ஒரே மன்னிப்பு கவிதையாக இருக்கிறதே.மாலையில்தான் மன்னிப்பு நீர் படித்தேன்.
  காதல் இழைந்தோடும் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. ம் (: மிக்க நன்றி நண்பரே

   Delete
 4. கவிதையையும் சிறுகதை ஆக்கலாம்....

  ம்ம்ம் அருமையான கவி...............

  ReplyDelete
  Replies
  1. ம் (: மிக்க நன்றி சபி

   Delete
 5. காதலின் நினைவில் உறக்கம், உறக்கத்தில் அழகிய கற்பனை...

  நல்ல படைப்பு தோழரே!

  ReplyDelete
 6. திடுக்கிட்டு எழுந்தேன்
  உன் நினைவில் உறங்கிப் போயிருந்த நான் ..........


  நினைவுகளுக்குத்தான் எத்துனை சக்தி
  தடையின்றி பறக்க் முடிகிறது .காதல் இழைந்தோடும் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க எங்க போயிடீங்க
   நலமா தோழி ம் (;

   Delete
 7. அருமையா கனவு - சொன்ன விதம் ஆபாரம்

  ReplyDelete
  Replies
  1. ம்(; மிக்க நன்றி நண்பரே

   Delete
 8. இப்படி ஒரு கனவு எனக்கும் வேண்டும்....காதலோடு !

  ReplyDelete
  Replies
  1. இது கனவு இல்லங்க
   காலத்தில் இறந்துபோன நிகழ்வின் நிழல் தான்

   Delete
 9. கவிதையில் ஒரு கதை. முடிவின் திருப்பம் ஒர் ஏமாற்றம். நினைவுக்குள் ஒரு கனவு. அருமை

  ReplyDelete
  Replies
  1. ம்(;
   மிக்க நன்றி தோழி

   Delete
 10. வாவ்
  மழையாய் கொட்டுகிறது
  கவிதையும்
  முத்தங்களும்.
  அதற்குள் கலைந்து விட்டதே
  கனவு.
  இன்னும் கொஞ்சம் கூட
  கொட்டியிருக்குமே
  மழை -- முத்தங்களாய்

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. ம் (; மிக்க நன்றி கவிஞரே

   Delete
 11. கனவிலும் அருமையான கவிதை... எப்படிங்க இப்படி எல்லாம்...? Super...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...