Wednesday, September 19, 2012

நேற்றைய கனவு (அ.நா.கா 9)
எதோ ஒரு 
சிறு தர்க்கத்திற்கு இடையில் 
அனல் சொல்லைக் கொட்டி 
உன்னை  சுட்டு  விடுகிறேன் நான் 

அழுதபடி படி இறங்குகிறாய்  உன் அம்மாவிட்டுக்கு 
கோபம் தணிந்த பின் மாலையில் 
வீடு வந்துவிடுவாயென காத்திருந்தேன் நான்  
இரவாகியும் வரவில்லை நீ 

உன்னை அழைத்து வர 
உன் வீடு நோக்கி நடக்கிறேன் நான் 
இடைவெளியில் நடந்து வருகிறாய்  
நீயற்ற  இரவும் பகலும் 
எனக்கு நரகம் என்று தெரிந்த நீ 

என் மெல்லிய புன்னகையும் 
 உன் விழியில் வழிந்த கருணை மன்னிப்பும் 
இதழ்களில் மௌனங்களை சுமந்தபடி 
வீடு வரை நடந்தபடி  நாம் 

நம் அறையில் நீண்ட மௌனத்தை 
சலனம் செய்தது ஜன்னல் வழியே வந்த காற்று 
சத்தமாய் அடைத்தாய் ஜன்னல் கதவுகளை 
 ......னை  ..ணைக்க
விளக்கை அணைத்தேன் நான் 

ஓ பாய் உட்டோ உட்டோ டைம் ஆகையா
தட்டி எழுப்பினான் 
அறையில் புதிதாய் வந்த வடஇந்திய   நண்பன் 

 உறக்க சோம்பல் முறித்து எழுந்தேன்   
எட்டு மணியை காட்டி நின்றது கடிகார முள் 
அவசப் புறப்பாடில்  நான் 
வழக்கமான காலை  அழைப்பில்  சத்தமிட்டபடி கைபேசி 

உனக்கும் எனக்கும் 
சின்ன சின்னதாய் எத்தனையோ சண்டைகள் 
ஒரு முறைகூட படி இறங்கியதில்லை 
உன் அம்மா வீட்டுக்கு நீ 

26 comments:

 1. மனதை தொட்ட பதிவு

  வெளிநாட்டில் தனித்து வாழும் நண்பர்களுக்கு தான் அது மிக தெளிவாக புரியும்

  ReplyDelete
  Replies
  1. ம் (; உங்கள் புரிதலுக்கு நன்றி தோழரே

   Delete
 2. இது தாங்க உண்மையான தாதபத்தியம்...


  தங்களின் கற்பனை
  அழகிய கவிதையில்...

  ReplyDelete
  Replies
  1. ம் (; உங்கள் புரிதலுக்கு நன்றி தோழரே

   Delete
 3. மனம் கவர்ந்த பதிவு
  எளிமையான சொற்களை வைத்தே
  அருமையான காவியம் படைத்தமைக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ம் (: மிக்க நன்றி சார்

   Delete
 4. ஆழமான காதல்,அமைதியான தாம்பத்தியத்தை விளக்கும் அழகான கவிதை..

  ReplyDelete
  Replies
  1. ம்(; மிக்க நன்றி சகோ

   Delete
 5. தோழரே....
  அண்ணிக்கு அம்மாவீடு
  இந்தியாவில் அல்லவா இருக்கிறது.

  பிறகு எப்படி போக முடியும்..?

  மாமியார் வீட்டு பக்கத்தில் இருந்து பாருங்கள்.
  கவிதை வேறு மாதிரியாக வரும்.

  இது சும்மா... கவிதை சூப்பர் தோழரே.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இங்கே கொண்டு வரல தோழரே
   அவங்க ஊரில்தான் இருக்காங்க ம் (:

   Delete
 6. கனவில்தானே!நிசத்தில் அப்படி நடக்காது.
  கவிதை அழகு.

  ReplyDelete
  Replies
  1. ம் (: மிக்க நன்றி தோழரே

   Delete


 7. கனவென்று நினைக்கவில்லை! இறுதியில் தான்....!
  நினைவில் நிற்கும் கவிதை! அழகு!

  ReplyDelete
  Replies
  1. ம் (; மிக்க நன்றி அய்யா

   Delete
 8. திரவியம் தேடி திரைகடல் சென்றோர் அநேகர் இப்படித்தான் வாழ்துகொண்டிருக்கிரார்கள்! நல்ல கவிதை!

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோ
   உங்கள் அன்புக்கு நன்றி ம் (:

   Delete
 9. உணர்வோடு பதிவாக்குகிறீர்கள் அழகான தாம்பத்யக் காதலை !

  ReplyDelete
  Replies
  1. ம் (; மிக்க நன்றி தோழி

   Delete
 10. அருமையான கவி

  ரசித்தேன்.................

  ReplyDelete
  Replies
  1. ம் (: மிக்க நன்றி சபி

   Delete
 11. பிரிதலின் வலி கவிதையில் புரிகிறது நண்பரே.

  ReplyDelete
 12. நிஜம் படி இறங்கியதில்லையெனும் போது, கனவில் மட்டும் படி இறக்கி பார்க்கிறிர்களே...
  ஊடலின் அவசியமோ?.....
  கவிதை நல்லா இருக்கு.....

  ReplyDelete
 13. ஊடலின் அவசியமும் தெரிகிறது கவிதையில்....அழகான கவிதை...

  ReplyDelete
 14. வணக்கம்

  செய்தாலி வலைக்குள்ளே சென்று பார்க்கச்
  சிலநாளாய் ஆசைவரும்! காலம் வந்து
  மெய்வேலி போட்டாலும் அதனை மீறி
  மேவுகிறேன் பதிவுகளைப் பார்க்க! ஆகா..
  பொய்பாடி, புகழ்பாடி வாழும் வாழ்வில்
  புதுமுறையில் தமிழ்பாடிப் பொலியும் எண்ணம்!
  தய்யாடித் தந்தாடி என்றே நெஞ்சம்
  தானாடிக் களித்ததுவே! வளா்க! வாழ்க!!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
 15. வணக்கம்

  செய்தாலி வலைக்குள்ளே சென்று பார்க்கச்
  சிலநாளாய் ஆசைவரும்! காலம் வந்து
  மெய்வேலி போட்டாலும் அதனை மீறி
  மேவுகிறேன் பதிவுகளைப் பார்க்க! ஆகா..
  பொய்பாடி, புகழ்பாடி வாழும் வாழ்வில்
  புதுமுறையில் தமிழ்பாடிப் பொலியும் எண்ணம்!
  தய்யாடித் தந்தாடி என்றே நெஞ்சம்
  தானாடிக் களித்ததுவே! வளா்க! வாழ்க!!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr
  ReplyDelete
 16. உண்மையான பாசத்தில் பிரிவேது. நான்..நீ கையாடல் அழகு. சென்சார் வார்த்தைகள்.. அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...