Wednesday, September 12, 2012

நஞ்சு விழும் குளம்
நாளை 
அக் குளக்கரையில் சவங்கள் மிதக்கலாம் 
பிந்திய நாட்களில் 
விசித்திர உருக்களில் மனிதர்கள் பிறக்கலாம் 
நஞ்சு விழும் மண்ணில் 
உயிர் வாசமற்றுக் கூட  போகலாம் 
நஞ்சுண்டு மாண்ட மண்  சரித்திர பட்டியலில் 
நாளை இக்குளக்கரையின் பெயரும் பொரிக்கப்படலாம்
நாட்டில் 
ஓராயிரம் கொடிகள் 
அதன்கீழ்  பன்முக ராஜாக்கள் 
உண்ணா நோன்பு நையாண்டி மேடை நாடகங்கள் 
ஆள பிச்சை தட்டு ஏந்துபவர்கள் 
அசிங்கத்தை கூட கூர்போடும் ஈனச் செயல்கள் 
தலைவன் என்று வந்தவனெல்லாம் 
 தலை தெறித்து ஓடுகிறான் 
யாரோ விரட்டுகிரார்களாம்
இல்லை இல்லை விலை போய்விட்டார்களாம் 
அடுத்த வீட்டில் சண்டை என்றால் வேடிக்கை பார்க்கும் 
அண்டை வீட்டாரின் தொட்டில் பழக்கம் சாபம் 
அங்கோ ஒருவனின் பாமரக் குரல் 
காக்கியின்  அதிகாரக் கோரம் 
நித்தம்  உதிரம் சொட்டி சிவக்குகிறது குளக்கரை 
எம் மண்ணில் விழும் நஞ்சு 
தளிரும் உயிரின் அடிவேரில் அமிலம் கக்கும் 

24 comments:

 1. //அடுத்த வீட்டில் சண்டை என்றால் வேடிக்கை பார்க்கும் அண்டை வீட்டாரின் தொட்டில் பழக்கம்//

  நிதர்சனமான உண்மைகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி நண்பா

   Delete
 2. உருக்கமான வரிகள் வலிகளுடன் படிக்க முடிந்தது ..
  உணராத அரசை என்னவென்று சொல்வது நண்பா ..

  ReplyDelete
  Replies
  1. உணராத அரசை நம் வலிமைகொண்டு உணர்த்த வேண்டும் நண்பா
   அதுதான் இங்கு யாரிடமும் இல்லையே

   Delete
 3. நஞ்சு விழுந்த குளத்தின் நீர் நெஞ்சை நஞ்சாக்குவதை தடுக்கவேண்டும்.நிஜங்களை பதிய முறையில் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா தடுத்து நிறுத்த வேண்டும் தோழரே
   உங்கள் புரிதலுக்கு நன்றி

   Delete
 4. கவலைகள் தோய்ந்த வரிகள்
  வலிக்கிறது மனம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழரே

   Delete
 5. கவியை படித்து முடித்ததும்
  கல்லெறிந்த குளம் போல நெஞ்சம்
  சற்று கலங்கித்தான் போயிற்று நண்பரே...
  முடிவில் கொஞ்சம் தெளிவும் ஆயிற்று..

  ReplyDelete
  Replies
  1. கூடங்குளம் அனுநிலையம்
   பணி தொடர்ந்து நடந்தால்
   நாளை நம் பிள்ளைகள் இப்படித்தான் பிறக்கும் தோழரே

   Delete
 6. மனம் கனத்த வரிகள்.படம் பார்க்கவே முடியவில்லை !

  ReplyDelete
  Replies
  1. இந்த படத்தில் இருக்கும் குழந்தைகள் போல்
   நாளை கூடம் குளத்திலும் அதை சுற்றிய கிராமங்களில் மற்றும் நகரங்களில்
   இதுபோன்ற குழந்தை பிறக்கத்தான் போகிறது
   இதை தடுக்க வேண்டுமென்றால்
   கண்டிப்பா அனுநிலயத்தை நிறுத்தியே ஆகவேண்டும் தோழி

   Delete
 7. நஞ்சு தான்
  சுற்றம் சூழல்
  சமூகம் அனைத்தும்
  துளியென விதைக்கிறது
  கடலாகி போனது இப்போது ......

  அடுத்த தலைமுறையை
  நினைக்க நெஞ்சு பதறுது
  நஞ்சை உண்டது போல ......

  வலியின் உச்சம் உணர முடிகிறது நண்பா

  ReplyDelete
  Replies
  1. உண்மை தோழி
   இந்த புகைப்படம் நாளைய எச்சரிக்கை

   Delete
 8. எனக்கு இருக்கும் ஆதங்கமெல்லாம் ஏன் இந்த எதிர்ப்பலையை ஆரம்ப நாளிலேயே செய்யவில்லை என்பதுதான் . போபல் விஷ வாயு கசிவை அப்போது மறந்து போனோம் . இதற்கும் அதற்கும் தொழில் சம்பந்தமில்லையெனினும் விளைவு சம்பந்தம் உண்டே?.

  ReplyDelete
  Replies
  1. இதே கேள்வி எனக்குள்ளும் இருக்கே தோழி
   முளையில் கிள்ளி எரியாதால் வந்த வினை இது

   Delete
 9. கொடுமை...( சில நாட்கள் கழித்து மக்கள் மறந்து விடுவது)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா மறந்து விடுவாங்க சார்

   Delete
 10. உணர்ந்து படித்தேன் அழகு மிளிரும்
  கவி அங்கிள்...

  படிக்க வேண்டியவர்கள் படித்தால் நல்லது............

  ReplyDelete
  Replies
  1. ம் (: மிக்க நன்றி சபி

   Delete
 11. வேதனையான அரற்றலாய் அமைந்த கவிதை வரிகளும் காட்சிப் படமும் மனம் உருக்குகிறது. வருமுன் காப்பதை விட்டு வந்தபின் புலம்புவதே நம்மவர்களுக்கு வாடிக்கை. இப்போதும் அப்படியே நடக்கிறது. என்ன செய்வது?

  இடையிடை காணப்படும் எழுத்துப் பிழைகளை சரிசெய்தால் கவிதையைத் தடங்கலின்றி வாசிக்க இயலும். இது என் அன்பான வேண்டுகோள். தவறாயிருப்பின் மன்னிக்க.

  ReplyDelete
  Replies

  1. உணர்ந்த கருத்திற்கு நன்றிகள்
   பிழைகளை கவனித்தேன் திருத்தியும் விட்டேன்
   மிக்க நன்றி தோழி

   Delete
 12. நடைமுறையின் வேதனை வெதும்பல்!....புரிகிறது..தொடருங்கள் நண்பா!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. எதையும் அழிப்பது எளிது.. ஆனால் ஆக்குவது கடினம்.... அழிக்க அத்தனை மெனக்கெட வேண்டியதில்லை... மக்களுக்குள் உரசலை சண்டையை மூட்டிவிட்டாலே போதும் அவரவர் அடித்துக்கொண்டு அழித்துக்கொண்டு மிச்சமின்றி மண்ணுக்கு இரையாவார்....

  அந்த செயலை தான் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.... நாளைய மக்களுக்கு நமக்கு பின் பிறக்கும் நம் பிள்ளைகளுக்கு நாம் என்ன விட்டு வைத்து செல்கிறோம் என்று பார்த்தால் கொடுமையாக இருக்கிறது....

  நச்சுப்புகை, ஜாதிமத சண்டை, நச்சு கலந்த நீர், ப்ளாஸ்டிக் பைகளால் உலகம் எத்தனையோ மோசமாகிவிட்டது.. இப்போது உச்சக்கட்டமாக கூடம்குளத்தின் செயல்பாடுகள்....

  மழைநீர் வர மரங்களை வெட்டாதீர்கள் மரம் நடுங்கள் என்று நம் மூத்தோர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.. அதன் நற்பயன்களை நாம் அனுபவிக்க அல்ல நமக்கு பின் பிறக்கும் நம் பிள்ளைகளுக்கு....

  போபால் விஷவாயு இன்னமும் அங்கே பிறக்கும் குழந்தைகளை பார்த்தாலே நெஞ்சம் கலங்கி தான் போகிறது... இப்போது நம் மண்ணும் அந்த இடத்தில் தன் பெயரை பொறிக்க போராடுகிறதோ என்று நினைக்க அச்சம் பிறக்கிறது....

  இதற்கு முடிவு தான் என்ன?? நம் ஒற்றுமை, சாத்வீகமாக எதிர்ப்பது.... அரசை நம் பக்கம் கவனத்தை திசை திருப்ப இது தான் வழி.. நம் ஒற்றுமை தான் அவர்களின் செயல்பாடுகளை கண்டித்து தடுத்து நிறுத்தவும் செய்யும் என்பதில் அதிக நம்பிக்கை இருக்கிறது...

  எங்கோ யாரோ தானே என்னவோ செய்கிறார்கள் அடித்துக்கொள்கிறார்கள்.. நமக்கென்ன என்று இருக்கும் நம்முள் பலர் இலவச திட்டம் அறிவித்தால் முண்டியடித்துக்கொண்டு வாங்க வரிசையில் நிற்போர் கொஞ்சம் நின்று யோசித்தால் செய்தாலி நீங்க சொன்ன வரிகள் அத்தனையும் நெஞ்சம் பிளக்கும் நிதர்சன வேதனை வரிகள்....

  நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்காமல் ஒன்றாக கைக்கோர்த்து விஸ்வரூபம் எடுக்கவேண்டும் தடுக்கவேண்டும் இதன் பின் விளைவுகளை இடைவிடாது எல்லோருக்கும் விழிப்புணர்வும் ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லும் சத்திய வரிகள் செய்தாலி...

  சமூக நலன் கொண்டு அமைத்த விழிப்புணர்வு கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துகள்பா...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...