Monday, September 17, 2012

அசிங்கத்தில் விழுந்த கல்
வீதியோரத்தில் 
நரகல் ஒன்றினை  தின்று  கொண்டிருந்தன 
பன்றிகள் சில 
அதே வீதியின்  மறுமுனையில் 
சற்றுமுன் இறைச்சிக் கடைக்காரன் வீசிய 
எலும்புக்காக சண்டையிட்டுக் கொண்டன  தெருநாய்கள் 
எதோ ஒரு பூச்சியை 
பின் துரத்திக் கொண்டு  ஓடுகிறது பூனை ஓன்று 
மரத்தடியில் வெயில்விழ 
திடுக்கிட்டு எழுந்து பின் மறு பிச்சைக்கு  ஆயத்தமானான் 
அவ்வீதியின் வாடிக்கை பிச்சைக்காரன்   ஒருவன் 
விளையாட்டுக் கிடையில் 
சாக்கடையில் விழுந்த   பந்தை கையிலெடுத்து 
மீண்டும் எறிந்து விளையாடிக் கொண்டிந்தார்கள் சில சிறுவர்கள் 
இவைகளை வேடிக்கைப் பார்த்தும் 
அதில் தர்க்கித்தும் நகையாடிக் கொண்டிருந்தனர் 
அந்த டீக்கடை பெஞ்சில் உடல்  கொழுத்து   இருக்கும் 
வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள் சில 
சிதையில் எரிகிற 
மண்ணறையில் புதைத்த மனுஷ உடம்பைகூட 
தின்னக்  கொடுத்தால் 
நன்றாய் மெல்லக்கூடும் இவர்கள் டிஸ்கி :அசிங்கத்தில் விழுந்த  கல்லை எடுத்து ஒருவர்கொருவர் 
                  எறிந்து கொள்ளும் சில மனிதர்களுக்காக 
                 மன்னிக்கவும் இந்த மாதிரியும் எழுத வைக்கிறது சமூகம் 

34 comments:

 1. தப்பே இல்லை சகோ. அசிங்கத்தை சுட்டி காட்ட அசிங்கத்தை பார்த்து, உணர்ந்து, விரல் நீட்டி உச்சரித்துதான் ஆகனும். சுட்டிக்காடினாதான் அசிங்கத்தை துடைக்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி சகோ

   Delete
 2. //உடல் கொளுத்து இருக்கும்
  வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள் சில//


  இந்த ஜென்மங்கள் பூமிக்கு பாரம்

  ReplyDelete
  Replies
  1. பூமிக்கு பாரமாய் இருப்பவர்கள் தாம்
   குழப்பத்தை உண்டாக்குகிறார்கள் தோழரே

   Delete
 3. யாருமே அடுத்தவரை விரல் நீட்டும் முன் தன் முதுகைப் பார்த்துக்கொள்வதில்லை . என் புரிதல் சரியா நண்பா.

  ReplyDelete
  Replies
  1. தன் முதுகின் அழுக்கை திரும்பி பார்க்காமலேயே
   பிற முதுகுகளை குறை சொல்லும் உலகம் இது சகோ

   Delete
 4. உயிருள்ள பிணங்களை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புரிதலுக்கு நன்றிகள் சார்

   Delete
 5. அருமையான சுட்டிக்காட்டல்!!
  ஆனால் இதை அவர்களுக்குச்
  சுட்டிக்காட்டாமல் இருந்தால்...?


  நல்ல சிந்தனை.

  ReplyDelete
  Replies
  1. தாம் பேசுவதும் செய்வது உண்மை என்றே சொல்லித் திரிவார்கள் அவர்கள்
   அதனால் தான் நண்பா சுட்டிக் காட்டினேன்

   Delete
 6. சமூகம் மீதான கோபம்...ஆக்ரோஷமாக வந்து விழுந்திருக்கிறது அசிங்கக் கல்லாக !

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு தெரியாது இல்லை
   தற்பொழுது உறவுகளுக்குள் நடக்கும் யுத்தம்

   அதனால் தான் இப்படி எல்லாம் எழுத வேண்டிய அவசியம் வந்து விட்டது

   Delete
 7. சொல்லவேண்டியதை சொல்லித்தானே
  ஆகவேண்டியிருக்கிறது

  ReplyDelete
 8. வெட்டி பேச்சு வம்பர்களை அழகா சாடிஇருக்கீங்க சகோ..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி சகோ

   Delete
 9. கவிதையின் தலைப்பு வரிகளை கவிதைக்குள் எங்கேயும் பொருத்தாமல் கருத்து மட்டும் பிருட்ன்ஹுமாறு அமைத்தது சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழரே

   Delete
 10. சில மிருக ஜென்மங்களின் மீது இருக்கும் கோபம் வரிகளில் தெறிக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புரிதலுக்கு நன்றிகள் தோழரே

   Delete
 11. 1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக..

  யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம்! நன்றி ஐயா! நன்றி!!
  டிஸ்கி - இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா??

  ---------------------------------------------------------------
  இப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில் ஏராளம் ஏராளம். உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால் கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை பார்த்தீர்களா? யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.

  மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

  உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

  ReplyDelete
  Replies
  1. தோழருக்கு

   முஸ்லீம்களை கேவலப் படுத்தி வரும் பதிவர்கள் மற்றும் அதை ஊக்குவிக்கும் தமிழ்மணம்
   இப்படி நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறீகள்
   இது இன்றல்ல எனக்கு தெரிந்து சில ஆண்டுகளாக நடந்து வருகிறது இந்தப் பிரச்சனை

   என் கடவுள் பொம்மை கிறுக்கலும் இந்த அசிங்கத்தில் விழுந்த கல் கிறுக்கலும்

   என் அந்த உறவுகளுக்கா எழுதியதுதான்

   நபியை பற்றி மற்றும் இஸ்லாம் பற்றியும் சொல்லி இருந்தீர்கள்

   நிலவை நோக்கி நாய்கள் குறைத்தால்
   நிலவு கீழ்விழுந்து உடையாது
   நாய்கள் தொண்டை வலிக்க குறைத்து விட்டும் மீண்டும் குரைக்கும்
   நாய்கள் சாகும் வரை அதனால் குரைக்க முடியும்
   அதன் பின் மீண்டும் சில நாய்கள் வந்து குரைக்கும்
   நிலவுக்கு எந்த சேதமும் களங்கமும் வந்து விடாது

   சில மத அறிவீனர்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை நாம் நல்லதை சொல்லி
   திருத்த முயலவேண்டும் அவர்களுடன் சேர்ந்து சண்டையை ஒருபோதும் ஊக்கவிக்க கூடாது
   அப்ப்படி நிகழ்ந்தால் சகோதர தன்மை இழந்து மனித நேயம் செத்து
   சுடுகாடுகள் தான் மிஞ்சும்

   இன்றைய கால கட்டத்தில் நிகழும் ஈன செல்களுக்காக
   தினமும் பல ஆயிரம் மனிதர்களை கொல்ல தோன்றும்
   அப்படி அதற்கு முற்பட்டு சென்றால் நான் மேல் சொன்னதே நிகழும்

   //நீங்கள் அடுத்தவர் நம்பிக்கையை (இறைவனை ) திட்டாதீர்கள்
   அவன் உங்கள் இறைவனை திட்டுவான்// -இது இறை வேதத்தில் சொல்லப்பட்டு உள்ளது

   இங்கே எல்லாரும் நம் தமிழ் தாய் குழந்தைகள் தான்
   நம் குழந்த சகோதர்கள் சண்டையிட்டால் நாம் வேடிக்கை பார்ப்பது நல்லத்ற்றது

   மதத்தை தத்தம் வீட்டிலும்
   மனித நேயத்தை சமூகத்திலும் கடை பிடிப்போம்

   Delete
  2. //மதத்தை தத்தம் வீட்டிலும்
   மனித நேயத்தை சமூகத்திலும் கடை பிடிப்போம்//

   அருமையான முதிர்ச்சியான பதில் சகோ. இதனையே நானும் வழிமொழிகின்றேன்

   Delete
 12. நல்லதொரு கருத்தை தாங்கிய கவிதை தோழரே..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் சார்

   Delete
 13. உணர முடிகிறது ... நண்பா ...
  சில ஜென்மங்களின் நடத்தை எல்லாத்தையும் சீரழித்து விடுகிறது ..
  என்னத்தை செய்ய அதுங்களா திருந்தனும் ...

  ReplyDelete
 14. அருமை மாற்றுத் திறனாளிகள் பற்றின செய்திகளை சொன்னதற்கு தொடர்ந்து பதிவுகளை போடுங்க

  ReplyDelete
 15. அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 16. என்னைத் திட்டி கொண்டிருக்கும்
  ஒரு முட்டாளை நான் பார்த்த போது
  ‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி
  வேகமாக நடந்து சென்றேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...