Monday, September 24, 2012

மன அறை ஒழுங்கீனம்




மன அறையில் 
ஒழுங்கற்று  கிடக்கிறது 
நேற்று வரையிலான   நாட்களும் 
அதில்  அர்த்தமற்ற  வாழ்கையும் 
செல்லரித்தும் 
துருபிடித்தும் 
நூலாம்படை அலங்கரிப்பில் 
அழகிழந்து துர் நாற்றக் கெந்தமுமாய் மன அறை 
ஒவ்வொன்றாய் 
தூசு தட்டி 
அடித்துப் பெருக்கிய குப்பைகளில் 
அர்த்தப் படாமல் இறந்துபோன
நாட்களும் வாழ்கையும் 

13 comments:

  1. ஒவ்வொரு முறையும் எப்படிக் கூட்டி அள்ளியபோதும்
    எப்படியோ அறிந்தோ அறியாமலோ சேர்ந்துதான் போகிறது
    குப்பையும் கூளமும்
    ஒருமுறை உள்னோக்கி சென்று வர வைத்த
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. காலம் பொன் போன்றது என்று சும்மாவா சொன்னார்கள்.அருமை சகோ.

    ReplyDelete
  3. அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் மலை போல் குவிந்து விடும்...

    ReplyDelete
  4. யாராலும் சுத்தம் செய்யமுடியாத ஒரே இடம் மனம்...


    அழகிய கவிதை

    ReplyDelete
  5. மனம் என்பது அனைத்தும் கலந்தது நம்முடைய நல்ல எண்ணங்களை அதிகபடுத்துவதன் மூலம் தேவையற்ற சாக்கடைகளை நாம் புறம் தள்ள முடியும்! நன்று தோழரே

    ReplyDelete
  6. தோழரே...
    அருமையாக உண்மையை உரைத்துள்ளீர்கள்.
    உண்மையை மீறி எதையும் சொல்ல வார்த்தை இல்லை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மனஒழுங்கை சொல்லிக் கொடுத்தது

    ReplyDelete
  8. ”எல்லாம் மனசுல தாங்க இருக்கு”. - சரிதானே செய்தாலி?

    ReplyDelete
  9. மனம் ஒரு அழகான கூடமென்றும் சொல்லலாமே !

    ReplyDelete
  10. கடந்ததை மறப்போம்.அர்த்தமற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவது நம் கையில்தான் உள்ள்து. எழுத்துகளில் மட்டுமல்லாமல் செயலிலும் மனிதம் செய்வோம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...