Thursday, September 27, 2012

சடுகுடு முத்தம் (அ.நா.கா 10)





முத்தத்தை 
முப்பொழுதும் 
கேட்க தவறுவதில்லை நான் 
கொடுக்க நீயும் 
முதல் பொழுதில் 
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் 
என் உயிரில் காயும்முன் 
மறுபொழுதில் பதிக்கிறாய் முத்தைதை 

நம் 
முப்பொழுதில் 
நித்த வாடிக்கையாய் நீளுகிறது 
உன் என் முத்தங்கள் 

நேற்று 
வாடிக்கை தவறாமல் கேட்டேன் நான் 
நீயும் கொடுத்தாய் 
நீ கொடுத்த முத்தத்தில் 
ஈரத்திற்கு பதில்  அனலின் வன்மம் 

 அனல்  முத்தம் 
உயிரை சுட்டுவிட்டது 
இருப்பினும் 
மறுபொழுதில் ஈரமுத்தம்  பதிப்பாய்
ஆர்வத்தில் 
மீண்டும் கேட்கிறேன் நான் 
நீயும் கொடுத்தாய் 
நீ கொடுத்த 
மதிய முத்தத்தில் 
கொஞ்சம் ஈரம் கொஞ்சம்  அனல் 

இரவில் 
நான்  கேட்க்கும்முன்னே 
பதித்துவிட்டாய் ஈர முத்தத்தை 

பிந்திய 
இரு பொழுதுகளில் 
நீ கொடுத்த முத்தத்தில் 
ஈரம் இல்லை என்றேன் நான் 
கோபமாய் இருந்தேன் என்றாய் நீ 

சிலிண்டர் 
வரவில்லை என்பதற்காக 
எனக்கான   வாடிக்கை முத்தத்தில் 
அனல் வைத்து அனுப்புவது  
எந்த ஊர் நியாயம்  ?

15 comments:

  1. ஹா ஹா அரசாங்கம் சிலிண்டர்ல கை வச்சது உங்களுக்கு இழப்பா போய்டுச்சா?! பாவம் சார் நீங்க. வூட்டு அட்ரெஸ் குடுங்க. சகோதரர் மகிழ்ச்சிக்காக ஒரு சிலிண்டர் அனுப்பி வைக்குறேன்.

    ReplyDelete
  2. ஆகா முத்த இராச்சியம் நன்று நண்பா...
    சிரிப்பு வந்தது.
    ஈரமுத்தம், அனல் முத்தம்
    நன்றாக இருக்கிறது
    சொல் விளையாட்டு.
    நியமம் அல்லது நியாயம்
    என்பது சரியாக உள்ளது என் அகராதியில்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. காதலின் ஊடலில் கூட
    சமூகத்தின் சாடலா ?

    உன் என்
    ஊடலில்
    உருகுது காதல்

    அருமை நண்பா

    ReplyDelete
  4. என்ன... இப்படி அசத்துறீங்க... அருமை நண்பரே...

    ReplyDelete
  5. நகைச்சுவை இழையோடும்..கருத்துள்ள கவிதை! :)

    ReplyDelete
  6. சிலிண்டர் முத்தமா அப்படியும் ஒன்று இருக்கா ஆனாலும் அழகான வரிகள்.

    ReplyDelete
  7. பெண்கள் பாவம் தான்...
    தன் கோபதாபங்களைக் கோடுக்கும் முத்தத்திலேயே
    பதித்துக் காட்டி விடுவதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள்.

    (தோழரே... தொலைபேசியில் கூடவா
    ஈரமுத்தம் அல்லது அனல் முத்தத்தின் சுவடு தெரிகிறது...?)




    ReplyDelete
    Replies
    1. //(தோழரே... தொலைபேசியில் கூடவா
      ஈரமுத்தம் அல்லது அனல் முத்தத்தின் சுவடு தெரிகிறது...?)//

      கண்டிப்பாக தெரியும் நண்பரே....அக்கறையுடன் கவனித்து பாருங்களேன்

      Delete
  8. முத்தம் சத்தமாக கேட்கிறது..

    ReplyDelete
  9. முத்தம் கொடுப்பதும் வாங்குவதும் தவிர்த்து வேறு வேலையே நடப்பதில்லை போலிருக்கிறது ..மனதின் சாயலை முத்தத்தில் பதித்தது அழகு

    ReplyDelete
  10. கரண் ’கட்’ மாதிரி முத்தக் ’கட்’ !

    ReplyDelete
  11. கவிதையிலும் காமெடி நல்லாயிருக்கு சார். ஹேமா சொன்னது மாதிரி முத்தமும் கட்டா? அல்லது அனல் வைத்த அந்த முத்தம் அம்புட்டு சூடா இருக்கா?

    ReplyDelete
  12. தோழரே,

    ஆரம்பம்.....மும் அசத்தல்

    நாட்டு நடப்பை நச்சுன்னு...

    பொட்டுல அடித்தார் போல சொன்னீங்களே...முடிவு

    ReplyDelete
  13. மனதில் எழும் எண்ணைகள் முத்தத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தும?அழகு கவிதை.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...