Monday, September 3, 2012

கடவுள் பொம்மை
வீதியில்
கூடி விளையாடிக் கொண்டிருந்தது  
சில குழந்தைகள்
எங்கிருந்தோ வந்த காற்றில்
வந்து விழுந்தது கடவுள் பொம்மை ஓன்று
அதாதி மிரட்சியால்
குழந்தைகளின் கரங்களில் இழுபட்டபடி
வித்திரமான அக் கடவுள் பொம்மை
அடையாளம்
சொந்தமாக்கல்
பெயரிடல்  தர்க்க முளையிடலில்
தளிர்விட்டது சொல் சண்டை
கடவுள் பொம்மைச்  சண்டையில்
வீதில் உதிர்ந்தது உதிரம் பின் உயிர்
கண்ணீர் உதிரக் கறைபுரண்டு
சவங்களின் துர்கந்த வீச்சமுமாய்
வீதியின் ஒதுக்குபுறத்தில் வீசிஎரிபட்டது  
கடவுள் பொம்மை
பிந்திய ஒரு நாளில்
அவ்வீதிக்கு மீண்டும் விளையாட வருகிறது
சில குழந்தைகள்
வீதியோரத்தில் அசூரப் புன்னகையிமாய்
கடவுள் பொம்மையும்

37 comments:

 1. பொம்மைகள் என்றாலே பிரச்சனைதான்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பா பெரிய பிரச்சனைதான்

   Delete
 2. அருமையான பகிர்வு கடவுள் இல்லை என்பவரும்
  மத வேறுபாடு காட்டி சண்டை இடுவோரும் அவசியம்
  பார்க்க வேண்டிய கவிதை வரிகள் இவை !...தொடர
  வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி சகோ

   Delete
 3. அருமை நண்பரே ..
  வரிகளில் ஒரு உயிரோட்டம் காண முடிந்தது ... நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா

   Delete
 4. அவ்வீதிக்கு மீண்டும் விளையாட வருகிறது
  சில குழந்தைகள்
  வீதியோரத்தில் அசூரப் புன்னகையிமாய்
  கடவுள் பொம்மையும்//

  அருமையான வரிகள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. கடவுளும் மதசண்டையும் :) :) :)

  ReplyDelete
 6. சிந்தனை வரிகள்... அருமை... நன்றி...

  ReplyDelete
 7. கடவுளும் பொம்மைதான்....!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் ..ம்(:
   மிக்க நன்றி தோழி

   Delete
 8. அழகிய கருத்து.... தோழரே அருமை!

  ReplyDelete
 9. கடவுள் பொம்மைகளைக்
  காலம்காலமாய்ப்
  பிச்சி உதறிகிட்டே
  தான் இருக்கிறார்கள்....

  அழகான ஆழ்ந்த கருத்து தோழரே.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி தோழரே

   Delete
 10. வீதியோரத்தில் அசூரப் புன்னகையிமாய்
  கடவுள் பொம்மையும.ஃ.....இது மினமிக அருமை சொந்தமே!வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. ம்மம் அழகான கவிதை......

  ReplyDelete
  Replies
  1. ஹாய் மருமகளே நலமா
   ம் (;நன்றி

   Delete
 12. கடவுள், மதம், சுயநலம் இது எதுவும் அறியாதவரை மக்கள் ஒன்றாய் ஒற்றுமையாய் ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருக்கும்போது...

  மக்களுக்கு சந்தோஷத்தை இன்னும் கூட்டவும் நல்லதை இன்னும் பகிரவும் கடவுள் பிரசன்னமாக.....

  மக்கள் அந்த கடவுளை விளையாட கிடைத்த ஒரு பொருளாகவே பாவித்தது கொடுமை... வேதனை....

  கடவுள் வரும்போதே ஜாதியும் மதமும் தீண்டாமையும் தீய சக்தியும் மக்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு ” இது என்னுடையது “ என்ற சுயநலத்தில் அமிழ்ந்து இதுவரை இருந்த ஒற்றுமை விலகி.... ஒருவருக்கொருவர் வெட்டிக்குத்தி....

  சிந்தனையில் தீய எண்ணங்களுக்கு உரமேற்றி யாரைக்கொன்று யாரிடம் வசப்படும் கடவுள் என்று வெறியாட்டம் ஆடியதால் மக்களுக்குள் இருந்த நல்லவையும் மறைந்தது... கடவுளுக்கும் மரணம் கிடைத்தது... ஒற்றுமை மறைந்து உயிர்பலி அதிகமானது....

  இன்றைய காலக்கட்டத்திற்கேற்ற மிக பொருத்தமான அருமையான கவிதை வரிகள் செய்தாலி....

  இங்கே கடவுள் என்று சொன்னாலும் நாம் இங்கே அதை மதம் என்றும் பொருள் கொள்ளும்படி செய்தது மிக அருமை....

  வேதனையே மிஞ்சுகிறது..... எதற்காக மக்கள் அடித்துக்கொண்டு மடிந்தார்களோ அதையே ஒதுக்குப்புறமாக்கி விட்டது வேதனையின் உச்சக்கட்டம்....

  சிந்தனை சிற்பியின் சிறப்பான வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் செய்தாலி... தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. என்
   கிறுக்கலின் உள்ளடக்கத்தின்
   விரிவாக்கத்தை உங்கள் கருத்தில்

   ஆழ்ந்த வாசிப்பு மற்றும் உணரல்
   மிக்க நன்றி தோழி

   Delete
 13. கடவுள் என்ற ஒன்றே நம்மை வழிப்படுத்த,ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நம்மால் உருவாக்கப்பட்டது.ஆனால் இப்போது கட்டுப்பாடுகளற்ற நம் சுய நலத்திற்கு கடவுள் என்ற பூச்சு கொடுத்து நம் சமூகத்தையே ரணகளமாக்கி, கடவுளையே அசுரனாக்கிவிட்டோம். நல்ல பகிர்தல் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும்
   நல் உணர்தல் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி

   Delete
 14. கடவுள் என்ற ஒன்றே நம்மால் நம்மை வழிப்படுத்த நம்மை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உருவாக்கப்பட்டது.ஆனால் இன்றோ நம் சுய நலங்களுக்காக கடவுளை காரணமாக்கி நமமையே ரணகளப்படுத்தி அவரை அசுரனாக்கிவிட்டோம். கவிதையின் கருத்து அருமை

  ReplyDelete
 15. கடவுளுக்கான சண்டையில், கடவுளும் காயப்படுகிறான்...

  கற்பனை அருமை தோழரே...

  - இப்படிக்கு அனீஷ் ஜெ...

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் ...மிக்க நன்றி நண்பா

   Delete
 16. குழந்தைகள் கையில் கிடைத்த பொம்மையினும் கீழான நிலை மதவாதிகளின் கையில் கிடைத்த இறை நம்பிக்கை. அளவோடு இருந்து, அடுத்தவரைப் படுத்தாதவரை எதுவுமே தவறில்லை. வலைப்பதிவர்களாகிய நமக்குள் புரிதல் உண்டாக்கும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் செய்தாலி.

  ReplyDelete
  Replies

  1. உங்கள் புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி
   உறவுகளும் புரிந்துகொண்டால் நலம்

   Delete
 17. நல்ல கவிதை,கவிதைக்குள் ஒளிந்திருக்கிற கதையை விரிவாக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. தோழி மஞ்சுபஷினியின்
   விரிவான கருத்தில் இருக்கிறது தோழரே
   இந்த கிறுக்கலின் உள்ளடக்கம்

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...