Wednesday, October 31, 2012

திரைமறை உரையாடல்முன்தினம் 
பெயர் இல்லாத ஒருவருடானான எழுத்துரையாடல்  
வணக்கம்  சொல்லபட்டது 
வணக்கத்தின் பாலினமும் திரை மறைவில் 
அடுத்த மறுநொடியில் 
தாங்கள் எழுதுவது கவிதையல்ல 
ஆம் நான் எழுதுவது கவிதையல்ல 
தாங்கள் ஒரு கவிஞனும் அல்ல 
உண்மைதான் நான் கவிஞனும் அல்ல 
தங்கள் எழுத்தில் கவித்துவம் இல்லை 
அது எனக்கு அவசிப்படவில்லை 
சிறு இடைவெளியும் 
மறு எழுத்திற்கான காத்திருப்பும் 
 புதுக்  கவிதை 
ஹைக்கூ 
மரபு 
.
.
.
.
இவையில் எதிலும் பொருந்தவில்லை 
தங்கள் கவிதைகள் 
என் எழுத்திற்கு இந்த ஆடைகளை இதுவரை  உடுத்தியதில்லை 
தாங்கள் ஒரு படைப்பாளியே அல்ல 
சற்று கோபமாகவும் வேகமாகவும் வந்தது அவ்வெழுத்துக்கள் 
ஆம் உண்மையான படைப்பாளி இறைவன் தான் 
அவன் படைத்ததை படைப்பதை 
அறிவை கொண்டு தேடும் சாதாரண மனிதர்களே நாம் 
ஆதலால் நான் படைப்பாளி அல்ல 
தங்கள் பெயரின் அர்த்தமென்ன 
அதற்கான அதற்தம் இதுவரை தேடவில்லை 
என் பெயரின் சுருக்கமே  என் பெயர் 
சொல்பிழை இருக்கிறது  தங்கள்  எழுத்துக்களில் 
இந்த உலகமே  பிழையில் தான் நகர்கிறது 
தாங்கள்  வாதம் செய்கிறீகள் 
இருக்கலாம் 
பச்சையாக கொச்சையாக இருக்கிறது தங்கள் எழுத்துக்கள் 
உண்மை வீச்சமுடையது 
சரி 
இவ்வளவும் கேட்டீர்கள் தாங்கள் யார் என்றேன் 
 சற்றென அணைந்துவிட்டது அவ(ளி) ரின் அடையாளம் 
யார் 
ஏன் 
எதற்கு 
நேற்று முழுவதும் எனக்குள் சக்கரமாய் சுழன்றது 
இந்தக் கேள்விகள் 
அந்த நபர் சொன்னதில் உண்ம்மை இருக்கலாம் 
அதை நான் திருத்திக் கொண்டால் 
நிச்சயமாக  இழப்பேன் 
என்னில் என் சுயத்தை
என்னையும் 
என் எழுத்தையும் எதிலும் அடையாள படுத்தாதவர் 
தன்னை அடையாள படுத்தாமல் சென்றது தான் நகைச்சுவை 

Tuesday, October 30, 2012

இரும்பு மனுஷிகள்


 


கருவில் தாங்கியவள் 
எனக்குமுன் முலை  குடித்தவள் 
என் வலக்கரம் பற்றிபிடித்தவள் 
இவர்கள் தான் 
இல்லை.. இல்லை... அவளும் 
ஆம் என் தடித்த விரல் பிடித்து 
நாளை எனை வழிநடத்தும் அந்த பிஞ்சு விரல்காரியும் தான் 
என் இரும்பு மனுஷிகள்
இன்றும் இவர்களுக்கு குழந்தை நான் 
நாளை அவளுக்கும் 
ஆம் இந்த இரும்பு மனுஷிகளிடத்தில் 
பத்திரமாக இருக்கிறேன்   நான் 

Monday, October 29, 2012

விளங்கா நவ சமூகம்


சரியாக  
சொல்லப்போனால் 
விளங்கவில்லை 
இந்த நவ சமூகத்தையும் அதன் மனிதர்களையும் 
மக்கள் வரியை சுரண்டி தின்று 
நாடாளுகிறது  மத்தியில் ஒரு  பெருச்சாளிக் கூட்டம் 
இலவச கறுப்புத் துணியை கண்ணில் கட்டி 
இருட்டில் தள்ளிவிட்டு 
கண்ணாம்பூச்சி  விளையாட்டு காட்டுது ஒரு மாநிலம் 
கூட்டுக் களவானிகளோ 
பங்கு சண்டையில் மும்முரமாய் 
இருப்பவன் இல்லாதவன் 
எவன்  எப்படி போனால் என்ன 
சுய அடையாள மதிமயக்கத்தில் ஒரு பெரும் கூட்டம் 
பெண் திரைக் கூத்தாடியின் 
அங்க ஆடையின் அளவுச் சர்ச்சைகள்  இளசு பெருசுகளில் 
சாயம் பூசிய திரை கூத்தாடிகளின் நாற்காலி ஆசை 
பல்லாக்கு தூக்கும் ரசிக பக்தர்கள் 
அவதார புருஷர்களின் 
மன்மத லீலைகளும் அரியணை நாடகங்களும் 
 பாடசாலைகளிலோ 
 கட்டாயக் கல்விபோய் அசூறக் கட்டணக் கல்விகள் 
எதிலும் புதுமை தேடும் நவ சமூகம் 
வேலியற்ற உறவு பந்தங்களின் நவ உறவுக் கலாச்சாரம் 
ஆம் குழந்தையில் கூட காமத் தேடல்கள் 
பத்துவயது குழந்தை கருவறையில் கூட சிசு
பந்த உறவு முறைகள் நாளை  ஏட்டில் மட்டுமே காணப்படலாம் 
நாளை  உழுது நெல்மணி விதைக்க 
காணி நிலம் கூட இல்லாமல் போகலாம் 
ஆம் நிலங்களில் நீண்டு முளைக்கும் கட்டிட சவங்கள்  
இருக்கும் இடத்தை சீர்கெடுத்து நரகமாக்கிவிட்டு 
எதோ ஒரு அண்டகோளத்தில் 
நீரைத் தேடி அலைகிறது ஒரு மட கூட்டம் 
வெறிபிடித்த மதமிழகிய யானைக்  கூட்டங்கள் ஒரு பக்கம் 
ஒரு தினத்தில் ஓராயிரம் கொண்டாட்டங்களுமாய் சில கூட்டம் 
உயிருக்கு ,உடமைக்கு ,உரிமைக்கு 
குரல் கொடுக்க தொடை நடுங்கிகள் கூட இல்லை 
நித்தம் விடிகிறது
என்றுதான் விடியுமோ இந்த இருண்ட சமூகம் 
ச்சீ ச்சீ ..என்ன கொடுமை 
இன்னும் விளங்கவில்லை  இந்த நவ சமூகத்தையும் அதன் மனிதர்களையும் 

Sunday, October 21, 2012

மூக்குத்தி (அ.நா.கா 12)
வெள்ளிக் கொலுசு 
அறுந்து விட்டதாய்  
அன்றொரு நாளின்  பேச்சுக் கிடையில் சொன்னாய் நீ 

நேற்று
ஆலுக்காஸ் ஜுவல்லரியில் 
கை வளையல் வாங்கச் சென்ற நான் 
விலை  கேட்டுக்கொண்டிருந்தேன் தங்க கொலுசுக்கு 

என் செவியை மனதை 
இம்சை செய்யும் உன் வெள்ளிக் கொலுசொலிக்கு 
ஈடாகாது இந்த பொன்கொலுசு 
இருப்பினும்  விலை பேசிக்கொண்டிருந்தது மனம்


நீண்டு மடங்கி 
முன் சுண்டியில் விடைத்து சிவக்கும் உன் மூக்குக்கு 
எடுப்பாய் இருக்கும் ஒற்றை மூக்குத்தி 
என்னிஷ்டமும்  உன் மறுப்பும் 
அன்று நீண்ட சின்னப் பிணக்கத்தையும் நினைவூட்டியது 
அந்த கண்ணாடி சில்லுக்குள் இருக்கும் 
ஒற்றைக் கல்  மூக்குத்தி 


எதிர்பார்த்த உன் கைபேசி அழைப்பு
இன்றாவது மனம் மாறி இருப்பாய் 
மீண்டும் ஒருமுறை நினைவூட்டினேன் மூக்குத்தியை 
இன்றும் உன்னில் மௌனம் நீள 
என்னகத்தில் துடிதிடித்து இறந்தது 
என் மூக்குத்தி ஆசை 

Saturday, October 20, 2012

கள்ளப் பூனை
இரண்டு குழந்தைகளுக்கு
முலை ஊட்டிக்  கொண்டிருந்தாள் அவள்
மூடிய மாராப்பை
விலக்கி தலைதூக்கி பின்
கண்ணுருட்டிப் பயமுறுத்தியது
கள்ளத்தனமாய்
மறு முனை(லை)யில்   பால் குடிக்கும்
 மீசைவைத்த   குழந்தையை

Wednesday, October 10, 2012

அவளின் அந்த கேள்வி (அ.நா.கா 11)


 
என்றாவது  ஒருநாள் 
அவளை சந்திக்க நேரிடலாம் 

நிச்சயமாக சொல்கிறேன் 
எனக்கான ஒரு கேள்வியை 
மனதில் கொண்டு நடக்கிறாள் அவள் 

எப்படியும் கேட்டு விடுவாள் 
அன்றும் இன்றும் என்றும் 
அந்த கேள்விக்கான என் பதில் 
மௌனம் மட்டுமே 

அப்படி 
என்ன கேட்பாள் என்று 
நீங்கள் கூட கேட்கலாம் 

ஏன் 
ஒருமுறை இவளிடம் 
அவளைப் பற்றியும் அவளின் 
அந்த கேள்வியையும் சொல்லி முடிக்குமுன் 
இவளே கேட்டுவிட்டாள் அந்த கேள்வியை 

இவளிடம் அவளுக்கான பதில் அல்ல 
வேறொரு பதிலை  சொன்னேன் 
ஆனால்  இந்த பதில் தான் உண்மையானது 
என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது 
அவளிடம் இந்தப் பதிலை மட்டும் 

Tuesday, October 9, 2012

பித்துப் பிடித்தவனாய்...
நான் 
உன்னில் இதுவரை 
கொட்டிய சொல்லை 
ஒருமுறை எழுதி வாசிக்க சொல்கிறாய் நீ 
எழுத முனைகிறேன் நான் 
எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது 
என் விரல் நடுக்கத்தில் 
தவறி விழுந்த பேனா 
என்னோக்கி ஏளனமாய் சிரித்தும் 
முறைத்துக் கொண்டும் இருக்கிறது 
இன்னும் எழுதபடாத அந்த வெற்றுப் பக்கங்கள் 
கொட்டிய சொல்லை 
வரிகளில் அள்ளமுடியாமல்
பித்துப் பிடித்தவனாய்.....

Monday, October 8, 2012

வானவில் ஆடை

உயிர் போர்த்தும் 
அன்பின் ஆடைகளில் பலவண்ணச் சாயங்கள் 
கருவில் உயிர் கொள்முன்னே 
நமக்கான ஆடைகளை நெய்கிறது உறவுகள் 
மரணத்திற்குப் பின் 
கழட்டப்ட்டு நினைவுகளில் பூசுகிறார்கள்  
காலப் பழக்கத்தில் 
வெளுத்து   உதிர்கிறது சில வண்ணங்கள் 
சில வண்ணங்கள் மட்டும் ஏனோ 
மரணம் வரை பற்றிப் பிடித்தபடி 
 உதிராத  வண்ணங்களை 
அடித்து துவைக்கிறோம் நம்பிகையற்று 
 துவைத்தலில்  விழும் கிழிசல்கள் 
 கிழிசல் விழுந்த 
ஆடை போர்த்திய மீத வாழ்க்கை 
மரணத்திற்கு பின்னும் நீளும்  அவமான  வடுக்கள் 

Thursday, October 4, 2012

இரண்டு கணக்கு

எண்களை
கணிதத்தில் 
கூட்டி 
பெருக்கி 
கழித்து 
வகுக்கிறான் மனிதன் 

மனித 
எண்ணங்களை (....... )
வாழ்கையில் 
கூட்டி 
பெருக்கி 
கழித்து 
வகுக்குகிறான்  இறைவன் 


சின்ன குறிப்பு : இது என் பதினாறாவது வயதில்  
நோட்டு புக்கில் கிறுக்கியது ம்(:

Wednesday, October 3, 2012

முத்த முதலுரிமை
நம்  
செல்ல சண்டைக்கிடையில் 
 இதுவரை கொடுத்த முத்தத்தை
 திருப்பி கேட்கிறாய் நீ 

ஓ சரி 
முதலில் 
என் முத்தங்களை கொடு 
உன் முத்தங்களை 
தருகிறேன் என்றேன் நான் 

இல்லை 
அது சரிவராது என்கிறாய் நீ 
பெண்மைக்கு 
முதலுரிமை என்கிறேன் நான் 

முதலுரிமை 
முத்தத்திற்கு  மட்டும் தானோ என்று 
நகையாடுகிறாய் நீ 

மறு சொல்லுக்கு 
வார்த்தைகளற்று 
வாயடைத்து  நிற்கிறது 
என்னில் ஆண்...

Tuesday, October 2, 2012

வீதியோரத்தில் காந்தி

கூடி வந்து 
மாலையிட்டு  
மரியாதை செய்து பின் 
சிதறி ஓடினார்கள் 
வெள்ளை ஆடையணிந்த மனிதர்கள் சிலர் 
மறதியில் 
விட்டுச்  சென்றாகளோ இல்லை 
இனி அவசியமில்லை என்று 
மறந்து சென்றாகளோ தெரியவில்லை 
வீதியோரத்தில் 
தூக்கி எறியப்பட்டுது தெரியாமல் 
உதிர்ந்து கொண்டிருக்கும் பூமாலைக்குள்
சிரித்த முகமுமாய்  
காந்தியின் புகைப்படம் 

என் இனிய தோழமைகளுக்கு  காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 

Monday, October 1, 2012

தனிமை ரணம்

நீ  
இல்லாமல் நான் கழித்த 
என் தனிமையின் 
ஒவ்வொரு நொடிப் பொழுதின் 
ரணத்தை 
சொல்லில் பிரசவிக்க தெரியவில்லை 
என் இதழ்களுக்கு 

ஓன்று செய் 
என் பத்து விரல்களில் 
உன் பத்து விரல்களை ஓட்டிப்பார் 
என் விரல்களில்  ஊடுருவும் காந்த விசை உணர்த்தும் அதை

இல்லையேல் 
உன் இதழை 
என் இதழில் இறுக்கப் பதித்துப்பார் 
என் இதழ்களில் ததும்பும்  அனல் 
உன்னை சுட்டு  உணர்த்தும் அதை 

 மற்றொரு 
முயர்ச்சியாய்
உன் செவியை என் மார்போடு ஒட்டிக்கேள்
துடிக்கும் லப்டப் ஓசை  
செவியை மட்டுமல்ல 
உன் உயிரையும் நிரப்பி உணர்த்தும்  அதை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...