Wednesday, October 10, 2012

அவளின் அந்த கேள்வி (அ.நா.கா 11)


 
என்றாவது  ஒருநாள் 
அவளை சந்திக்க நேரிடலாம் 

நிச்சயமாக சொல்கிறேன் 
எனக்கான ஒரு கேள்வியை 
மனதில் கொண்டு நடக்கிறாள் அவள் 

எப்படியும் கேட்டு விடுவாள் 
அன்றும் இன்றும் என்றும் 
அந்த கேள்விக்கான என் பதில் 
மௌனம் மட்டுமே 

அப்படி 
என்ன கேட்பாள் என்று 
நீங்கள் கூட கேட்கலாம் 

ஏன் 
ஒருமுறை இவளிடம் 
அவளைப் பற்றியும் அவளின் 
அந்த கேள்வியையும் சொல்லி முடிக்குமுன் 
இவளே கேட்டுவிட்டாள் அந்த கேள்வியை 

இவளிடம் அவளுக்கான பதில் அல்ல 
வேறொரு பதிலை  சொன்னேன் 
ஆனால்  இந்த பதில் தான் உண்மையானது 
என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது 
அவளிடம் இந்தப் பதிலை மட்டும் 

13 comments:

  1. பார்ரா...

    நேற்று எழுத முடியல

    இன்று சொல்ல முடியல

    மூணு முறை படித்தேன்

    நிறைய பாதிப்போ ம்...

    நடத்துங்க தோழரே

    ReplyDelete
  2. ennannu sollaame....

    ennennamo sollideenga...

    ReplyDelete
    Replies
    1. அது ரகசியம் சகோ ம்(-:

      Delete
  3. என்ன கேள்வி என்ன பதில் அவரவர் கற்பனைக்கு.

    ReplyDelete
  4. பாத்துங்க தோழரே....

    உங்கள் பதில் நீருபூத்த
    நெருப்பாகிவிட போகிறது...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அதற்கான பதில் மௌனம் தான்

      Delete
  5. அந்த கேள்விதான் என்ன நண்பா

    ReplyDelete
    Replies
    1. அது ரகசியம் நண்பா

      Delete
  6. என்ன கேட்டாங்களோ என்ன சொன்னீங்களோ ? நடத்துங்க.

    ReplyDelete
  7. சொல்ல முடியாத பதில்... சொல்லகூடாத பதில்... உங்கள் பதில் இந்த ரகம்....?

    ReplyDelete
  8. அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...