Sunday, October 21, 2012

மூக்குத்தி (அ.நா.கா 12)




வெள்ளிக் கொலுசு 
அறுந்து விட்டதாய்  
அன்றொரு நாளின்  பேச்சுக் கிடையில் சொன்னாய் நீ 

நேற்று
ஆலுக்காஸ் ஜுவல்லரியில் 
கை வளையல் வாங்கச் சென்ற நான் 
விலை  கேட்டுக்கொண்டிருந்தேன் தங்க கொலுசுக்கு 

என் செவியை மனதை 
இம்சை செய்யும் உன் வெள்ளிக் கொலுசொலிக்கு 
ஈடாகாது இந்த பொன்கொலுசு 
இருப்பினும்  விலை பேசிக்கொண்டிருந்தது மனம்


நீண்டு மடங்கி 
முன் சுண்டியில் விடைத்து சிவக்கும் உன் மூக்குக்கு 
எடுப்பாய் இருக்கும் ஒற்றை மூக்குத்தி 
என்னிஷ்டமும்  உன் மறுப்பும் 
அன்று நீண்ட சின்னப் பிணக்கத்தையும் நினைவூட்டியது 
அந்த கண்ணாடி சில்லுக்குள் இருக்கும் 
ஒற்றைக் கல்  மூக்குத்தி 


எதிர்பார்த்த உன் கைபேசி அழைப்பு
இன்றாவது மனம் மாறி இருப்பாய் 
மீண்டும் ஒருமுறை நினைவூட்டினேன் மூக்குத்தியை 
இன்றும் உன்னில் மௌனம் நீள 
என்னகத்தில் துடிதிடித்து இறந்தது 
என் மூக்குத்தி ஆசை 

19 comments:

  1. ''...என்னகத்தில் துடிதிடித்து இறந்தது
    என் மூக்குத்தி ஆசை..''

    இப்படி எத்தனை ஆசை துடிதுடித்து இறக்கிறது.
    நல்ல ஒரு குட்டிக் கதை போல இருக்கிறது கவிதை..
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய இருக்கு சகோ

      Delete
  2. கொலுசுகள் செய்கிற இம்சை மனதை ஒரு வழி பண்ணி விடுகிறதுதானே?

    ReplyDelete
  3. நல்ல கவிதை.

    மூக்குத்தி பாஷன் போட்டுதுங்கோ :)))

    ReplyDelete
    Replies
    1. பழய பஞ்சாங்கமாம் அவங்க சொல்றாங்க சகோ

      Delete
  4. மூக்குத்தி - இன்றைய பெண்கள் மறந்து போனது...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ...அமாம் சார்

      Delete
  5. மூக்குத்தி - இன்றைய பெண்கள் மறந்து போனது...

    ReplyDelete
  6. அழகான அன்பு,காதலின் வெளிப்பாடு கவிதையில் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்(-: மிக்க நன்றி தோழரே

      Delete
  7. Replies
    1. ம்(-: மிக்க நன்றி சகோ

      Delete
  8. மூக்குத்தி ஒரு தனி அழகு தான்...

    நல்ல ரசனையுடன் கூடிய கவிதை...

    ReplyDelete
  9. என்னகத்தில் மூக்குத்தி ஆசை அழகு.

    ReplyDelete
  10. ஆசை ஆசை மூக்குத்திப் பூ மேல... அழகான உணர்வு.

    ReplyDelete
  11. செல்லச் சண்டை முடிந்து ,தொலைபேசி அழைப்பு விரைவில் வர வாழ்த்துகள்
    கவிதை அழகு

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...