Monday, October 1, 2012

தனிமை ரணம்





நீ  
இல்லாமல் நான் கழித்த 
என் தனிமையின் 
ஒவ்வொரு நொடிப் பொழுதின் 
ரணத்தை 
சொல்லில் பிரசவிக்க தெரியவில்லை 
என் இதழ்களுக்கு 

ஓன்று செய் 
என் பத்து விரல்களில் 
உன் பத்து விரல்களை ஓட்டிப்பார் 
என் விரல்களில்  ஊடுருவும் காந்த விசை உணர்த்தும் அதை

இல்லையேல் 
உன் இதழை 
என் இதழில் இறுக்கப் பதித்துப்பார் 
என் இதழ்களில் ததும்பும்  அனல் 
உன்னை சுட்டு  உணர்த்தும் அதை 

 மற்றொரு 
முயர்ச்சியாய்
உன் செவியை என் மார்போடு ஒட்டிக்கேள்
துடிக்கும் லப்டப் ஓசை  
செவியை மட்டுமல்ல 
உன் உயிரையும் நிரப்பி உணர்த்தும்  அதை

9 comments:

  1. தனிமை ரணத்தை ஒவ்வொரு பத்தியும் உணர்த்துகிறது...

    ReplyDelete
  2. ஆழமா தான் உணர்த்துங்க வரிகள்.

    ReplyDelete
  3. aazhamaana unarvu!


    piramaatham...

    ReplyDelete
  4. காதல் உணர்வின் கொந்தளிப்பு.....கவிதையில் அனல் !

    ReplyDelete
  5. என் பத்து விரல்களில்
    உன் பத்து விரல்களை ஓட்டிப்பார்
    என் விரல்களில் ஊடுருவும் காந்த விசை உணர்த்தும் அதை
    >>>
    மனசு கஷ்டமா இருக்கும்போது என்னவருடன் கைகோர்த்து பேசனும்ன்னா எனக்கு ரொம்ப ஆசை. அந்த நினைப்பை கிளறி விட்டது உங்க கவிதை.

    ReplyDelete
  6. தனிமை கொடுமையிலும் கொடுமை தோழா அதை உணர்த்தும் வரிகள் ஆழம்

    ReplyDelete
  7. தனிமை வலியை அழகாகச் சொன்னீர்கள் கவிஞரே.

    ReplyDelete
  8. தனிமை என்றாலே ரணம்தானே..............

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...