Friday, October 12, 2012

எதிர்பாலின காழ்ப்பு





















நெருஞ்சி முள் 
சொல்லைக் கொண்டு பிண்ணுகிறான்  
அவளுக்கான  வேலியை அவன் 
எந்த முனையில் தொட்டாலும் 
அவள் உணர்வுகளை 
கோரமாய் காயப்படுத்தி 
அவள் உதிரத்தை ருசிபார்த்து விடுகிறது 
அந்த முட்கள் 
வலியில் அவள் துடிக்க 
கண்ணீர் வடிக்கிறது பெண்மை 
அதை ரசிக்கும் இவனகத்தில் 
ஆணவமாய்  சிரிக்கிறது ஆண்மை 
அவளின் மௌனச் சிறையில் இருந்து 
விலங்கு அவிழ்க்கலாம் 
அவனுக்கான ஒரு சாபம் 
சித்திரவாத அரங்கேற்றத்திற்குப் பின் 
அவனின் வன்மப் புணரல் 
பிணத்தை கொதறும் மிருகத்தின் செயல் போல 
அவன்  செலுத்தும் 
இந்திரியத்தை உமிழும் யோனியைப்  போல் 
அவன்   மரணம் வரை 
அவளின் கருவறை உமிழட்டும் 
அவனின் உயிரணுவை 

9 comments:

  1. அவளின் கருவறை உமிழட்டும்
    அவனின் உயிரணுவை .
    ஏனிந்த கோபமோ ?

    ReplyDelete
  2. வன்முறையின்
    உச்சத்தில்
    விதைப்பது
    விதை அல்ல
    சிதை "
    என்று ஆழமாய்
    அறைந்து சொல்லுகிறது
    வரி எங்கும் பெண்ணுக்கு எதிராக
    கோர தாண்டவம் கண்டு
    கண்ணீர் வழிகிறது .....

    இதைவிடவும் வலியை வேதனையை உமிழ்ந்துவிட யாரால் முடியும்

    காலத்தின் பதிவு நண்பா .........வாழ்த்துக்கள் உங்கள் சமூக அக்கறைக்கு

    ReplyDelete
  3. பெண்மை என்றும் மென்மையானது, சில ஆண்கள் மட்டுமே அதை உணர்துள்ளனர்... நல்ல கவிதை...

    ReplyDelete
  4. கொப்பளிக்கும் கோப உணர்வுகள் கவிதையாய்...!

    ReplyDelete
  5. ஆவேசம் கொப்பளிக்கிறது பெண்மைக்கு ஆதரவாக

    ReplyDelete
  6. என்னத்த சொல்ல...
    ம்ம்ம்....

    ReplyDelete
  7. பெண் இனக் கரிசனக் கவிதை. முகத்திற் அறைந்தாற் போல..

    ReplyDelete
  8. அருமை நண்பரே
    அவனின் வன்மப் புணரல்
    பிணத்தை கொதறும் மிருகத்தின் செயல் போல

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...