Tuesday, October 2, 2012

வீதியோரத்தில் காந்தி





கூடி வந்து 
மாலையிட்டு  
மரியாதை செய்து பின் 
சிதறி ஓடினார்கள் 
வெள்ளை ஆடையணிந்த மனிதர்கள் சிலர் 
மறதியில் 
விட்டுச்  சென்றாகளோ இல்லை 
இனி அவசியமில்லை என்று 
மறந்து சென்றாகளோ தெரியவில்லை 
வீதியோரத்தில் 
தூக்கி எறியப்பட்டுது தெரியாமல் 
உதிர்ந்து கொண்டிருக்கும் பூமாலைக்குள்
சிரித்த முகமுமாய்  
காந்தியின் புகைப்படம் 

என் இனிய தோழமைகளுக்கு  காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 

13 comments:

  1. இப்படியா உண்மையை சொல்லுவது...

    ReplyDelete
  2. சடங்கும் சம்பிரதாயங்களும் முடிந்த பின்னும்
    அவரை கையில் வைத்துக் கொண்டிருந்தால்
    எல்லோரும் ஒரு மாதிரி பார்ப்பார்கள் என நினைத்துக் கூட
    கீழே போட்டிருக்கலாமோ
    யதார்த்த நிலை சொல்லும் அருமையான
    சிறப்புப் பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //என் இனிய தோழமைகளுக்கு காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் //

    உங்களுக்கும் தோழரே

    ReplyDelete
  4. சிரித்த முகமுமாய்
    காந்தியின் புகைப்படம்
    >>
    அவர் சிரிச்ச முகமாய் இருக்குறதலதானோ என்ன்மோ நம்ம நாடு சிரிப்பா சிரிக்குது வெள்ளை ட்ரெஸ் போட்டவங்ககிட்ட

    ReplyDelete
  5. புகைபடமாய் இருப்பதால் சிரித்துக் கொண்டிருக்கிறார்.உயிருடன் இருந்தால் பாழ்பட்டு நிற்கும் பாரத தேசத்தைப் பார்த்து அழுதுகொண்டு தான் இருப்பார்.
    கவிதை நச்.

    ReplyDelete


  6. இது கவிதை மட்டுமல்! நல்ல சாட்டையடி!

    ReplyDelete
  7. நெஞ்சை நெகிழ வைத்த கவிதை வரிகள் :(
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  8. பாவம் காந்தி தாத்தா!!!

    ReplyDelete
  9. சாட்டையடி வார்த்தைகள்!

    ReplyDelete
  10. நல்ல சிந்தனைக் கவிதை.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  11. கவிதையில் ஓர் வாழ்க்கை அருமை அங்கிள்.....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...